<b>போர் முரசைக் கொட்டச் சிங்கள தேரவாத பௌத்த அரசு ஆரம்பித்துள்ளது!</b> <i>தமிழத் தேசமும், சிங்கள தேசமும் அதை எதிர் கொள்ளத் தயாராகிவிட்டனவா?</i>
சங்குவேலிச் சாத்தன் 06.01.2006, வெள்ளி.
தேர்தல் பிரசார காலத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளான நோர்வேயினை அனுசரனையாளர்களாக இல்லாது செய்வதிலும், இந்தியாவை co-chair ஆக அமர்த்துவதிலும், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்டுவந்த சமஷ்டி ஆட்சித் தீர்வைக் கைவிடுவதிலும் தீவிர முயற்சியை அவர் மேற்கொண்டார்.
அவர் தனது தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தும் முதலாவது படியாக, இந்திய விஜயத்தை மேற்கோண்டிருந்தார். பல நாட்களாகச் செங்கம்பள வரவேற்புக்களைக் கொடுத்திருந்த போதும், இலங்கையானது பல்லின, பல்சமய, பல் கவாசார, பன்மொழி நாடாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை இந்திய அரசு வலியுறுத்தியதுடன், ஒற்றையாட்சியற்ற, அதிகாரப் பரவல் செய்யப்படும் தீர்வையே அது ஆதரிப்பதாக உணர்த்திவிட்டது.
இந்தியாவிடம் ஆதரவு தேடிச் சென்றது சிங்கள தேச ஜனாதிபதியே அன்றி, இந்தியப் பிரதமரோ, அல்லது ஜனாதிபதியோ இந்தியாவுக்கு ஆதரவு தேடி இலங்கைக்கு வரவில்லை. இந்தநிலையில், இந்திய அரசு அதனது நிலைப்பாட்டினைக் கூறுவதை,; இந்தியா இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுகின்றது எனச் சிங்கள தேசம குற்றம் சுமத்தமுடியாது.
இந்திய அரசானது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துச் சென்றவைகளுக்குச் சம்மதித்திருந்தால், இலங்கை அரசும், அரச ஊடகங்களும், ஆளும் கட்சிகளும் இந்திய அரசைப் போற்றியே இருக்கும்@ இந்திய அரசின் கருத்துத் தெரிவிப்பு இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலைப்போடுகின்றது என்ற குற்றச் சாட்டுக்கள் எழவும் மாட்டாது.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிங்கள தேசத்தில் அரச ஊடகங்களும், அரசியல் பிரமுகர்களும், இந்திய அரசுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கிவிட்டுன.
04.01.2006 திகதிய Daily News பத்திரிகையில் தனது பெயரைக் குறிப்பிடாது A Special Correspondent என்பதன் கீழ் Our nation, our future, our responsibility என்ற தலைப்பின்கீழ் கட்டுரையை எழுதியிருந்தவர், பின்வருமாறு கூறியுள்ளார்:
Still, no one appointed India as the presiding judge on our destiny, let us not forget. Big nation. Powerful. With nuclear capability. All true, all true. At the same time, Sri Lanka is not sikkim and I am sure India knows this. That is also part of the reality that is not talked about.
India or no India, Solheim or no Solheim, there is a reality that we have to acknowledge. This is our country. This is not Eric Solheim's country. This is not Manmohan Singh's country. This is our future we are talking about. Nor Solheim's or Singh's. This is our responsibility.
சிங்கள தேசமானது ஒரு காரியத்தைத் தானாகச் செய்திருந்தால், அது இந்தியாவிடம் வாலை ஆட்டிக் கொண்டு சென்றிருக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்க மாட்டாது, அமெரிக்காவிடமோ அல்லது ஐரோப்பிய நாடுகளிடமோ செல்லவேண்டிய தேவையும் ஏற்படாது.
சிங்கள தேசமானது அதனது விஞ்ஞான hPதியிலான ஆதாரங்கள் எதுவுமற்ற கற்பனைக் கோட்பாடான ஆரியன் -- சிங்களம் -- சிங்களவன் -- தேரவாத பௌத்தம் -- லங்கா என்ற ஒன்றுக்கு ஒன்று அடிப்படையிலான கோட்பாட்டினை நிராகரித்து, இலங்கையைப் பல் இன, பன் மொழி, பல் சமய, பல் கலாசார நாடாகச் சட்ட hPதியாவும், நடைமுறை hPதியாகவும் ஆக்கி, இலங்கையின் சகல சமூகங்களினதும் ஜனநாயக உரிமைகளைப் பேணிப் பாதுகாத்திருந்தால், இலங்கையின் ஜனாதிபதி நாய் வாலை ஆட்டிச் செல்வதுபோல் இந்தியா, ஏனைய நாடுகளுக்கு அலையவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கமாட்டாது.
இந்த யதார்த்தத்தை மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்து, தனது கூட்டுக் கட்சிகளுக்கும், சிங்கள தேச மக்களுக்கும் இரண்டு விடயங்களைத்தான் கூறமுடியும். அவையாவன:
1. எமது தேர்தல் கால மேடைப் பேச்சுக்களையெல்லாம் கைவிட்டு, இலங்கையை பல் இன, பல் சமூக, பன் மொழி, பல் கலாசார நாடாக்குவோம், இலங்கையில் உண்மையான ஜனநாயகம் நிலை நாட்டப்பட உழைப்போம, நோர்வேயினை அனுசரனையாளர் நிலையாகத் தொடர்ந்து கொள்வோம்;@
2. எமது இறுதி முயற்சியாக தமிழத் தேசத்தின்மீது போரை நடாத்தி, விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகளையும், அதற்குத் துணைபோகின்றவர்களையும் அழித்து, இலங்கை முழுவதையும் தேரவாத பௌத்தத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவோம்.
இவற்றில் மஹிந்த ராஜபக்ஷ எதனைச் செய்யவுள்ளார் என்பது மிகமுக்கியமானது.
இங்குதான் அரச கட்சியினரும், அரச ஊடகங்களும், சிங்கள தேசக் கல்விமான்களும், படைத் தளபதிகளும் சிங்கள மக்களுக்கு எவற்றைக் கூறி வருகின்றன என்பவை மிகமுக்கியமாகின்றன.
இவற்றுள் முதலாவதைச் செய்தால், மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சிநேக கட்சிகளும், சிங்கள பௌத்தர்களது நம்பிக்கையை இழக்கவேண்டியே ஏற்படும். இது, அவர்களது அரசியல் எதிர் காலத்தைச் சூனியமாக்கிவிடும். மறுபுறத்தில், துஏP யினரைப் பொறுத்தமட்டில், அது தற்கொலைக்குச் சமனானதே! அவர்களது அமெரிக்க எதிர்ப்பு, சிங்கள பௌத்த பாதுகாப்பு கோஷங்கள் எல்லாம் காற்றோடு காற்றாக மறைந்துவிடும்.
இந்தநிலையில், மஹிந்த அரசினது நிலையானது மிகவும் இக்கட்டானது. இப்பிரச்சனைக்கான ஒரேயொரு தீர்வு: தமிழ்த் தேசம் மீதான பெரும் போரை ஆரம்பித்து வெற்றி கொள்வதும், அதில்; விடுதலைப் புலிகளை அழிப்பதுமாகும்.
இதில் சிங்கள அரசு வெற்றி கண்டால், அதன் பிரச்சகைன அனைத்தும் தீர்ந்துவிடும் மஹிந்த அரசும், அதன் கூட்டுக் கட்சிகளும் தமது கொள்கைகளை இலங்கையில் நிலை நாட்டிக்கொள்ளமுடியும்!
இதில் மஹிந்த அரசு தோல்வி காணுமேயாயின், இலங்கைத் தீவில் இரண்டு சுதந்திர, இறைமையுள்ள அரசுகள் உருவாகும்!
தமிழ்த் தேசத்தைத் தமது முழுமையான ஆட்சியின் கீழ் கொண்டு வருவதையும், விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பதையும் இராணுவ ரீதியாக வெற்றிகரமாகச் செய்ய முடியும் எனச் சிங்கள தேசம கருதினால், அது சமாதானத்திற்கான கூட்டு நாடுகளுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கவும் வேண்டும், சமாதானத்திற்கான கூட்டு நாடுகளிடமிருந்து ஆசியையும் பெற வேண்டியிருக்கும்.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசின் முக்கியஸ்தர்களும், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், போன்றவைகளை அணுகியே இறுதி முடிவை எடுக்கவேண்டியுள்ளது. தமது நிலைப்பாட்டினைச் சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த வேண்டியுமுள்ளது.
ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான பிராசாரங்களைச் செய்வது}டாக, ராஜபக்ஷ அரசு சிங்கள மக்களைத் தமக்கு ஆதரவாகத் திரட்டி வருகின்றன.
அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு, ராஜபக்ஷவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சில நாட்களில் நாடு திரும்பவுள்ளார்.
அமெரிக்க அரசு மஹிந்த ராஜபக்ஷவிற்கு எப்படியான சமிஞைகளைக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்த அமெரிக்க விஜயத்தின் பின்னர் அமெரிக்காவிற்கு எதிரான ஒருவித பிரசாரங்களைச் செய்து, ராஜபக்ஷ அரசு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்ட முற்படலாம். அதன் பின்னரே, போரை ஆரம்பிப்பது ராஜபக்ஷ அரசிற்குச் சாதகமாக அமையும்.
இந்தநிலையில், பெப்பரவரி மாதத்தில் அல்லது அதற்கு முன்னரே, சிங்கள அரசு தமிழ்த் தேசத்தின்மீது போரை ஆரம்பிக்கும் நிலைமைதான் பெரிதும் காணப்படுகின்றது!
இந்தப் போரானது, தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் தத்தமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் திணிக்கப்பட்ட போராகவே உள்ளது.
அறத்தினை நிலை நாட்டுவதற்கான போர், கொடுரமானதாகவே இருக்கும்.
இதற்கு தமிழ்த் தேச மக்களும், வெளிநாடுகளில் வாழும் மக்களும் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது.
சாத்தனின் நீண்ட காலச் ( 40 ஆண்டுகள் கால ) சிங்களச் சிநேகர்; ஒருவர், அரசு போரை ஆரம்பிக்க இருப்பதை விளங்கிய நிலையில், சாத்தனைக் கொழும்பு சென்று தங்களுடன் தங்கும்படி கேட்டார்.
சாத்தன் அவருக்கு: இந்தப் பேரானது தமிழ்த் தேசத்தின் வரலாற்றினை நிர்ணயிக்க உள்ளதால், நான் எனது தேசத்திலிருந்து பேராடுவதையே விரும்புகின்றேன் என்றான்.
அந்தச சிங்களச் சிநேகிதர் அழுதார். அவர் ஆனந்தத்தால் அழுதார். ஜனநாயகம் பிழைத்துவிட்ட இலங்கைத்; தீவில் அதை நிலை நாட்டப் போராடும் மனத் தைரியம் தெற்கில் இல்லை என்றார்!
சங்குவேலிச் சாத்தன்
www.tamilsociety.com