04-21-2006, 03:44 PM
எந்த நேரத்திலும் முறிவடையும் போர் நிறுத்தம்- யாழிலிருந்து உடனே வெளியேறுங்கள்: மக்களுக்கு வேண்டுகோள்
[வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 20:25 ஈழம்] [யாழ். நிருபர்]
இலங்கையில் எந்த நேரத்திலும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் சூழலை இராணுவம் உருவாக்கியுள்ளதால் யாழிலிருந்து உடனடியாக விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயருங்கள் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பொதுச்செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
யாழ்.குடா இராணுவக் கொலைக்களமா?
அன்பார்ந்த எம் உறவுகளே!
யாழ்ப்பாணக் குடாவில் சுமூகமான நிலைவரும்............... சுமூகமான நிலைவரும்............. என நம்பி கொலைச் சதி வியூகத்திற்குள் சிக்குண்டு உயிரிழக்கப் போகின்றீர்களா?
சற்றுச் சிந்தியுங்கள்!
அதற்கான நேரமும் தேவையும் இப்போது எழுந்துள்ளது.
எதிரி எம்மண் மீது புரியும் கொடூரங்களில் இருந்து விடுபட வேண்டாமா?
இளையோரை இலக்கு வைத்து இராணுவப் படுகொலைகள் தொடர்கின்றன.
20 மீற்றர் அகல பயணப்பாதை எப்பொழுதும் மூடப்படலாம். போர் மூளுமாயின் இப்பாதையைக் கடக்க முடியுமா?
புத்தூர் அந்திரான்வெளி ஐந்து இளைஞர்களின் படுகொலையை மறந்து விட்டீர்களா?
இவர்களை இராணுவம் கொன்றது ஏன்?
கைக்குண்டெறிந்தார்களா?
கிளைமோர் வைத்தார்களா?
துப்பாக்கி வைத்திருந்தார்களா?
ஏன் கொன்றார்கள்?
தமிழனை துடைத்தழிக்க வேண்டுமென்ற வெறியிலல்லவா?
அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இனியாவது உங்கள் முடிவென்ன?
எதிரியின் சூழ்ச்சி இன்னும் புரியபவில்லையா?
அச்சமும் பீதியும் சூழ்ந்த இராணுவ வேலிக்குள் குடாநாடு கொலைக்களமாக மாறியுள்ளது. இன்றோ நாளையோ என்ன நடக்குமென்ற பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை தவிர்த்து பாதுகாப்பானதும் விடுவிக்கப்பட்டதுமான வன்னிப்பகுதியை நோக்கி நகருங்கள்!....
எந்த நேரத்திலும் முறிவடையப் போகும் போர்நிறுத்த உடன்பாடு எனது விடுதலையை, எமது சுபீட்சமான நல்வாழ்வை ஒரு போதும் பெற்றுத்தராது ஜெனீவாவிற்கு விடுதலைப் புலிகள் செல்லக்கூடாது என்பதற்காகவே அரசு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.
மீண்டும் போரை தீவிரப்படுத்தி தமிழர்களை கொன்றொழிக்கவே சிங்களப் படையினரும், துணை இராணுவக் குழுக்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எனவே வாருங்கள் வழி காட்ட தலைவன் இருக்கிறான். வழி நடத்த தளபதிகள்- பலர் போரிட -அதி நவீன சக்தி மிக்க ஆயுத தளபாடங்கள் உள்ளன. வந்து தோள் கொடுங்கள்.
வரலாறு அழைக்கிறது-
ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாண மண்ணை மீட்டெடுத்து சுதந்திரமாய் வாழ்வோம்.
இது இறுதிச் சந்தர்ப்பம்-
தவற விட்டால் பெரும் தவறிளைத்தவராவீர்கள்.
எனவே சிந்தித்து விரைவாகச் செயற்படுங்கள்.! என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PUTHINAM

<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->