01-28-2006, 10:57 AM
விண்வெளிக்கு எல்லோரும் சுற்றுலாவாகச் சென்றுவர முடியுமா? காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
விண்வெளிச் சுற்றுலாவுக்கான உத்தேச விதிகளை (120 பக்கங்களுக்கும் அதிகம்) அண்மையில் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவ்விதிகளில் பயணிகளின் உடல் - மருத்துவத் தகுதிகள் விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தகுதி, சுற்றுலா பயணிகளின் பயிற்சிக்கான தேவைகள், கட்டாயப் பயிற்சி, விண்வெளிப் பயணப் பங்கேற்பாளர்கள் (பயணிகள்) வழங்க வேண்டிய ஒப்புதல் பற்றிய விபரங்களையும் இவை தெரிவிக்கின்றன.
எனினும், `விண்வெளி வாகனங்கள்' பற்றிய விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதிக அளவு அரசின் தலையீடு இல்லாமல் `விண்வெளித் தொழில்' செழித்து வளர உதவும் வகையில் இது தொடர்பான சட்டத்தில் ஓராண்டுக்கு முன் அதிபர் புஷ் கையெழுத்திட்டார்.
வணிக ரீதியாக மனிதர்கள் விண்வெளிக்குச் சென்று வருவதை முறைப்படுத்துவதற்காக `விண்வெளிப் பயண நிறுவனம்' (எப்.ஏ.ஏ.) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயண விமானிகளின் தகுதிகள், விண்வெளிப் பயணப் பங்கேற்பாளர்களின் ஒப்புதல் தொடர்பான முதல் தொகுதி விதிகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்திலுள்ள ஆபத்துகள் பற்றி பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எல்லா ஆபத்துகள் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என பங்கேற்பாளர்கள் எழுத்துமூல ஒப்புதல் தந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவை என்று கருதும்பட்சத்தில், பங்கேற்பாளர்களுக்கு உடல் தகுதித் தேர்வும் அவசியமாகிறது.
தீ, புகை, அறையில் காற்றழுத்தக் குறைவு உட்பட அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது? `வாகன'த்திலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு வெளியே வருவது? என்பது பற்றியும் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
மேலும், சுற்றுலா வாகனத்தைச் செலுத்தப் போகும் பைலட்டுகளும் எப்.ஏ.ஏ. பைலட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிற வகை பைலட் சான்றிதழ்கள் போதுமானவையல்ல என்றெல்லாம் தெரிவிக்கிறது இந்த உத்தேச விதிகள்.
இந்த 123 பக்க உத்தேச விதிகள் யாவும் மக்கள் கருத்தறிவதற்காக அமெரிக்க அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இரு மாதங்கள் (பெப். 27) வரை மக்கள் கருத்துக் கூறலாம். இறுதி செய்யப்பட்ட விதிகள் ஜூன் 23 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2001 இல் உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக கலிபோர்னியாவைச் சேர்ந்த வணிகரான டென்னிஸ் டிட்டோ என்பவர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்திலேறி சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) சென்று வந்தார்.
அடுத்து ஓராண்டுக்குப் பின் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இணையத்தள விற்பன்னரான மார்க் ஷட்டில்வொர்த் என்பவரும் இதேபோல விண்வெளிக்குச் சென்றுவந்தார்.
2004 இல் பர்ட் ரூட்டன் தன்னுடைய `ஸ்பேஸ் ஒன்ஷிப்' பில் 5 நாட்களில் இரு முறை விண்வெளியைத் தொட்டு வந்தார். அதற்குச் சில மாதங்கள் முன் ஸ்பேஸ்ஒன்ஷிப்-ஐ விண்வெளிக்குச் செலுத்திச் சென்றுவந்ததன் மூலம் விண்வெளிக்கு வாகனத்தைச் செலுத்திய முதல் வெகு மக்களில் ஒருவரானார் மைக் மெல்வில்.
இரு மாதங்களுக்கு முன் மூன்றாவது விண்வெளிச் சுற்றுலா பயணியாக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கிரேக் வோல்சன் சோயுஸ் கலத்திலேறி சர்வதேச விண்வெளி நிலையம் சென்று வந்திருக்கிறார்.
இன்னும் சில பத்தாண்டுகளில் அல்லது சில ஆண்டுகளில் காசி- இராமேஸ்வரம் போல அல்லது டில்லி, மும்பை, லண்டன், நியூயோர்க் சென்று வருவதைப் போல விண்வெளிக்கு - வேறு கோள்களுக்கு, நிலவுக்கு, குறைந்தபட்சம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாமும் சென்று வரலாம்!
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm