Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்
#1
<b>விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்: க.வே.பாலகுமாரன் </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 22:25 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

விடுதலைப் பயணத்தில் இசைப்பாடல்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற போராளி இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் உருவான ஈரமில்லாப் பேரலை மற்றும் மூடிசூடும் தலைவாசல் இசைப் பேழைகளின் வெளியீட்டு மற்றும் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் க.வே. பாலகுமாரன் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இசையரங்கத்தை விடுதலையரங்கமாக்கி இந்த மேடையை விடுதலை மேடையாக்கி ஒரு விடுதலை வேள்வியை ஒரு இசையாக படைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

இன்று அதன் தொடர்ச்சியாக இம்மேடையிலே எங்களுடைய தேசத்தின் தேசிய சொத்தான பாடகர்களைப் பார்க்கிறோம். கூடவே ரி.எல். மகாராஜனையும் பார்க்கிறோம்.

இந்நேரம் பேசுவதற்கான நேரமல்ல. பேச்சுக்களும் இசையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.

பேச்சினுடைய நீட்சியாக இசையரங்கங்கள் அமையும்.

இசையுனுடைய நீட்சியாக பேச்சுக்கள் அமையும்.

அதனுடைய தொடச்சியாகவே பேச்சுக்கள் நடக்கும்.

பேச்சுக்களின் நிறைவிலேயே போர் நடக்கும்.

இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.

தமிழ் மக்கள் நீண்ட விடுதலைப் பயணத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். அப்பயணத்தில் தமிழ்மக்கள் வெறுமையையும் சூனியத்தையுமே சந்தித்துள்ளனர் என்றார் அவர்.

தமிழீழ கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழகப் பாடகர் ரி.எல். மகாராஜன் ஏற்றிவைத்தார்.

ஈரமில்லா பேரலை இசைப் பேழையினை தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் அறிமுகம் செய்து வைத்தார்.

மூடிசூடும் தலைவாசல் இசைப் பேழையினை க.வே. பாலகுமாரன் வெளியிட்டார்.

இசைப்பேழை உருவாக்கித்தில் பங்களித்த கலைஞர்களுக்கு சோ.தங்கன், க.வே. பாலகுமாரன், கிளிநொச்சி வணிக ஒன்றியத் தலைவர் சொ. வெற்றியரசன் ஆகியோர் பரிசில்களை வழங்கினர்.

தொடர்ந்து தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்வு நடைபெற்றது.

puthinam.kom
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)