Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயுதமேந்துவோம்: முஸ்லிம்கள் எச்சரிக்கை!
#1
<b>தனித்தரப்பு அளிக்காவிட்டால் ஆயுதமேந்துவோம்: முஸ்லிம்கள் எச்சரிக்கை!</b>

ஞாயிற்றுக்கிழமை 29.01.006

இலங்கை அமைதி முயற்சிகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்காவிட்டால் ஆயுதமேந்துவதை எவராலும் தடுக்க முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது:

முஸ்லிம்களை அரசாங்கம் தனித்தரப்பாக அங்கீகரிக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடத்த நேரிடும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர முஸ்லிம் கட்சிகளால் அதைத் தடுக்க இயலாது.

எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. இதை மகிந்த ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டும்.

போலியான முஸ்லிம் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் முஸ்லிம்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதாக அர்த்தம் ஆகாது.

நோர்வேயும் சர்வதேச சமூகமும் முஸ்லிம்கள் தனித்தரப்பை அங்கீகரித்துள்ளனர். தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.


http://www.eelampage.com/?cn=23812
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)