Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலர்படுக்கை நடுவே-!
#1
<b>வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா?
தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா?

பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-!
நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ?
நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் -
கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா!

பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும்
அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால்
அந்த பகுதியையே இழுத்து மூடுவார்!
ஏனடா இப்பிடி-?

எலும்பும் தசையும் மட்டுமா-
மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-!
நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு!

பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து
கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும்
காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ-
எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவு
எல்லாம் இனி பொய்யா - மெய்யா?

உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!


உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

(யாழ்களத்தின் -நிர்வாகம்- மீதான - சின்ன கோவம்- !எடுத்த எடுப்பில் எடுக்கும்- சில முடிவுகளால்-அதனால்- இது-)</b>
-!
!
Reply
#2
உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!

வர்ணன் அழகான வரிகள். உங்கள் கோபத்தை அழகான வரிகளால் கூறிவிட்டீர்கள். பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

Reply
#3
உங்கள் சின்ன கோபத்தை கவி வரிகள் மூலம் அழகாக கூறியுள்ளீர்கள்.
<b> .. .. !!</b>
Reply
#4
வர்ணன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.

உதாரணத்துக்கு வலைப்பதிவுகளில் ஒரு சில வலைப்பதிவுகள் அப்பட்டமாக புலிகளை/ விடுதலை போரை கொச்சை படுத்தி எழுதப்படுகிறன. அவற்றுக்கு முன்பு மிக தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் இடப்பட்டதும், அதற்கு கருத்தை எதிர்க்க திரணியற்ற **** வால்கள் அவ்வாறு பின்னூட்டம் இடுவதாக அவ்வலைப்பதிவாளர்கள் பிரச்சாரப்படுத்தியதும் நடந்தது. இதன் மூலம் அவர்கள் காட்ட முயன்றது விடுதலை ஆதரவாளர்கள் தரம்கெட்டவர்கள் என்பதே. இப்படி பிரச்சரப்படுத்துவதற்க்காக தமக்கு தாமே பின்னூட்டம் இட்டார்களா என்று கூட விவாதிக்கப்பட்டது.


அதே போல யாழிலும், ஏற்படக்கூட்டதென்பது எனது தனிப்பட்ட கருத்து.
இக்கருத்து சக உறுப்பினர் எனும் முறையிலேயே வைக்கப்படுகிறது.
Reply
#5
வணக்கம் யாழ்பாடி-!

உங்க கருத்துக்கு நன்றி-!
உங்களிடம் என் சந்தேகங்களை கேட்காமல் - பொதுவாய் பொறுப்பில் உள்ள அனைவரிடமும் கேட்க நினைக்கிறேன் -

ஒரு பொறுப்பில் உள்ளவரை - நெருக்கடிக்குள் தள்ள கூடாது- மரியாதை செய்யணும் என்ற ரீதியில்-!
பதில் வராது - என்று தெரிந்தும் !

<b>"ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. "</b>

வார்த்தைகள் - தேசியத்துக்கு எதிராய் சிலர் பேசும்போது -தாழ்ந்து போயிருக்கிறதுதான் - இல்லையென்று சொல்லவில்ல-

என் கேள்வி- தேசியத்துக்கு எதிராய் - கருத்து வைத்துப்போக சுதந்திரமாய் - சிலரை உலவ விட்டு இருக்கிறீகளே - அது ஏன் -? எதுக்காக-?


நேற்று வந்த வர்ணன் ஏன் இவ்ளோ துள்ளூறார் எண்டு நீங்க நினைக்கலாம் -

இங்குள்ள பலர் போலவே- நானும் யாழின் நீண்டகால வாசகன் - தமிழினி - குருவிகள் கவி போட்டி துளியிலிருந்து-

மதி என்ற பெரியவர் -துரோகபேச்சுக்கள்- பி.பி.ஸி- மதன் ஆனதிலிருந்து- சோழியன் அண்ணா-இளைஞன் கருத்தாடல்-சின்னப்பு லொள்ளு- அன்பகம் குசும்பு குழப்பல் பேச்சுவரை-மதனா யார் - ஜோதிகா-எங்க -நளாயினி அக்காமுதல்-ஷண்முகி -கருத்தாடல்-மாற்றங்கள் அனைத்தயும் ஒரு வாசகனா ரசிச்சு இருக்கன் -!

அப்போ எல்லாம் -பத்தோடு - பதினொன்றுதான் -இது யாழ்- எண்டு நினைச்சு- வாசிப்பதோட நிறுத்திக்கொண்டன் - கால போக்கில் - மற்றவர்கள் போல் யாழ் இல்ல எண்டுதான் - ரொம்ப நேசிச்சோம்-!

அன்று மதி பெரியவர் பண்ணிய அசிங்கத்தை - எதிர்த்து நின்று கருத்து சொன்ன பலர் இன்றும் களத்திலிருந்தும்- தேசத்துக்கு எதிராய் - பலர் பேச கண்டும் எமக்கு ஏன் வம்பு- வந்தோமா- ஏதோ பொழுதுபோக்கு பகுதில ஏதோ எழுதினோமா - என்று போகிறார்களே- எதனால் ஆச்சு-?

மற்ற வலைப்பதிவுகள் போல் யாழும் ஆக கூடாது என்ற நோக்கம் நல்லது- ஆனா-மற்ற வலைபதிவு நடத்தும் கெட்ட நோக்கம் சார்ந்தவர்கள் தொனியில்- பலர் - ஏளனப்பேச்சு -இங்கு-தொடர எப்படி அனுமதித்தீர்கள்-?

என் கணிப்பில் - எமக்கு எதிராய் செயற்படுபவர்கள்- நண்பர்கள் போல உள் நுளைந்து- பலரோடு -உறவாடி-தம் - கருத்துக்கு வலு சேர்க்க ஒரு குழுவையே - மெதுவாய் உருவாக்கிவிட்டார்கள்- அல்லது - முயற்சி செய்கிறார்கள் என்றே கொள்வேன் -!

நீங்கள் செய்வதெல்லாம்- எமக்கு எதிராய் பிறரை பேசவிட்டு- அதற்க்கு நாம் ஏதும் சொன்னால்- மிரட்டுவது போன்ற குரலில் - எச்சரிக்கை-!

மனசார தாயகத்தை நேசிக்கும் - தல போல உள்ள பல உறுப்பினர்களை - சில -வரட்டு சிந்தனைகொண்டவர்களுக்காக - நோகடிக்கிறீங்க- இனி தேசியம் பற்றிய கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க நினைப்பவர்களுக்கு - உளச்சோர்வை -உண்டு பண்ணுறீங்க-கருத்து ஏதும் சொல்லாமல் - ஏதோ வந்தோமா- போனோமா - என்று இருக்க பண்ணுறீங்க -அவ்ளவே-!! 8)
-!
!
Reply
#6
varnan Wrote:<b>

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!


உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

</b>

நிதர்சனமான வரிகள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
yarlpaadi Wrote:ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.

வார்த்தைகளின் தரம் கெடாமலே பல பதில்கள் எழுதப்பட்டபோதும் அவற்றில் பல அகற்றப்பட்டு அவற்றினை எழுதத்தூண்டிய சில பதிவுகள் இங்கு காணப்படுகின்றனவே :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
அடப்போங்க.............இவை மட்டுந்தான் தாயகத்த நேசிக்கிறீங்க............மற்றாக்களெல்லாம் நேசிக்கினமில்ல................. Cry எல்லாருக்கும் வெட்டுறுத்துனரா இருக்க ஆசையா இருக்கு போல..............என்னத்த சொல்றது.........பேசாம மோகனண்ணாட்ட எல்லாருக்கும் ஒரு கத்திய வாங்கி ஆளுக்காள் தேசியத்துக்கெதிரா எழுதின வெட்டுங்கோ................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதல்ல தேசியமெண்டா என்னெண்டு சொல்லுங்கோ............ நாடு நாட்டுப்பற்றெண்டெல்லாம் கதையளக்காம யதார்த்தத்த புரிஞ்சுகொள்ளுற ஈழத்தின்ர குடிமகனா உங்கட கருத்த வையுங்கோ.................இண்டைக்கு நீங்க சொல்லுறியள் மற்றவனெல்லாம் நடிக்கிறானெண்டு.............இதையே திருப்பி உங்களுக்கு மற்றவை சொல்ல எவளவு நேரம் வேணும்..........நீங்க தேசியத்துக்கு ஆதரவா நடிச்சு யாழ் களத்தில சதி பண்ணுறீங்க எண்டு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதை நல்லாருக்கண்ணா........வித்தியாசமா எழுதியிருக்கிறீங்க.........ஆனா இடைக்கிடை அந்தக் கோடுகள் ஏதோ குழப்புற மாதிரி இருக்கு.........கவிதை நடை நல்லாருக்கு................. ஏன் தொடர்ந்து எழுதுறேல............???? எழுதுங்கண்ணா...........
Reply
#9
poonai_kuddy Wrote:அடப்போங்க.............இவை மட்டுந்தான் தாயகத்த நேசிக்கிறீங்க............மற்றாக்களெல்லாம் நேசிக்கினமில்ல................. Cry எல்லாருக்கும் வெட்டுறுத்துனரா இருக்க ஆசையா இருக்கு போல..............என்னத்த சொல்றது.........பேசாம மோகனண்ணாட்ட எல்லாருக்கும் ஒரு கத்திய வாங்கி ஆளுக்காள் தேசியத்துக்கெதிரா எழுதின வெட்டுங்கோ................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதல்ல தேசியமெண்டா என்னெண்டு சொல்லுங்கோ............ நாடு நாட்டுப்பற்றெண்டெல்லாம் கதையளக்காம யதார்த்தத்த புரிஞ்சுகொள்ளுற ஈழத்தின்ர குடிமகனா உங்கட கருத்த வையுங்கோ.................இண்டைக்கு நீங்க சொல்லுறியள் மற்றவனெல்லாம் நடிக்கிறானெண்டு.............இதையே திருப்பி உங்களுக்கு மற்றவை சொல்ல எவளவு நேரம் வேணும்..........நீங்க தேசியத்துக்கு ஆதரவா நடிச்சு யாழ் களத்தில சதி பண்ணுறீங்க எண்டு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதை நல்லாருக்கண்ணா........வித்தியாசமா எழுதியிருக்கிறீங்க.........ஆனா இடைக்கிடை அந்தக் கோடுகள் ஏதோ குழப்புற மாதிரி இருக்கு.........கவிதை நடை நல்லாருக்கு................. ஏன் தொடர்ந்து எழுதுறேல............???? எழுதுங்கண்ணா...........

அதை விடுத்து தேசியத்துக்கு ஆதரவானவர்களாய் கருத்து சொல்பவர்களை எல்லாம் தூக்கி வெளில போட்டுவிட்டு... கவிதை காதல், பெண்ணடிமத்தனம் எண்று காலத்தை கடத்தலாம். உங்கள் பாணியிலேயே
Reply
#10
அருமையான வரிகள் நிதர்சனமான உணர்வுகள். சில வலிகளை உணர்ந்தால் தான் புரிபடும், உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் வர்ணன்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#11
காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!


உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

உண்மையான வரிகள்....கவிதை ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள் வர்ணன்......
Reply
#12
poonai_kuddy Wrote:அடப்போங்க.............இவை மட்டுந்தான் தாயகத்த நேசிக்கிறீங்க............மற்றாக்களெல்லாம் நேசிக்கினமில்ல................. Cry
<b>எல்லாருக்கும் வெட்டுறுத்துனரா இருக்க ஆசையா இருக்கு போல..............என்னத்த சொல்றது</b>.

........பேசாம மோகனண்ணாட்ட எல்லாருக்கும் ஒரு கத்திய வாங்கி ஆளுக்காள் தேசியத்துக்கெதிரா எழுதின வெட்டுங்கோ................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதல்ல

<b>தேசியமெண்டா என்னெண்டு சொல்லுங்கோ</b>............

நாடு நாட்டுப்பற்றெண்டெல்லாம் கதையளக்காம யதார்த்தத்த புரிஞ்சுகொள்ளுற ஈழத்தின்ர குடிமகனா உங்கட கருத்த வையுங்கோ.................இண்டைக்கு நீங்க சொல்லுறியள் மற்றவனெல்லாம் நடிக்கிறானெண்டு.............இதையே திருப்பி உங்களுக்கு மற்றவை சொல்ல எவளவு நேரம் வேணும்..........<b>நீங்க தேசியத்துக்கு ஆதரவா நடிச்சு யாழ் களத்தில சதி பண்ணுறீங்க எண்டு </b> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதை நல்லாருக்கண்ணா........வித்தியாசமா எழுதியிருக்கிறீங்க.........ஆனா இடைக்கிடை அந்தக் கோடுகள் ஏதோ குழப்புற மாதிரி இருக்கு.........கவிதை நடை நல்லாருக்கு................. ஏன் தொடர்ந்து எழுதுறேல............???? எழுதுங்கண்ணா...........

ஆமா பூனைகுட்டி - என்னத்த சொல்லுறது - நானும் யாழ்வாசிக்க தொடங்கின நாளில இருந்து - உங்கள் பெரும்பாலான அற்புதமான கருத்தாடல்களெல்லாம்- குருவிகளோட சண்டை பிடிக்கிறதிலே போட்டுது - மிகுதி அது பிழை - இவர் எழுதினது பிழை அவர் எழுதினது - தவறு- இவர் இப்பிடி செய்திருக்க கூடாது - எண்டு அருமையான கருதாடல்களால் இந்த களத்தின் பெருமையையே உயர்த்தி இருக்கீங்க- ஏன் அண்ணா அப்போ நீங்களும் - மட்டுறுத்தினர் பதவியை மனசில வச்சுதானா அதெல்லாம் பண்ணினீங்க? - சொன்னாதானே புரியும்-!

கடைசியா - சாதாரண கள போட்டி நிகழ்ச்சி - பட்டிமன்றம் - அதிலயே - நடுவர் பக்க சார்பா இருக்கிறார் எண்டு - உங்கள் வாதத்தை வைக்க முன்னமே - எடுத்து விட்டிங்க பாருங்க - என் கண்ணே பட்டிடும் போல இருந்திச்சு - !
ஏனுங்கண்ணா அப்போ நடுவர் பதவியை உங்களுக்கு தரல்லனுதான் அப்பிடி பேசினிங்க எண்டு நான் எடுத்து கொள்ளலாமா-?

தேசியம் என்றால் என்ன எண்டு சொல்லணுமா உங்களுக்கு ?-
அரசியல் எல்லைகளுக்குள்ள பிறந்த எவருமே அதை அறியாமல் இருக்க நியாயம் இல்லையே- உங்களுக்கு அது ஏன் தெரியல?
ஓ - அட்ரஸ் இல்லாத நபரா நீங்க-? அதை முதலே சொல்லி தொலைக்கவேண்டியது தானே -!

எமது உணர்வுகள் சம்பந்த பட்ட விடயங்களை பிறர் கேலி செய்யும் போது - கோவமும் - எதிர்கருத்துகளும் வாறது -இயல்பு - அதுக்காக மட்டுறுத்தினர் ஆக விரும்பிதான் - அப்பிடி பண்ணுறாங்க எண்டு - ஏன் அண்ணா முடிவு பண்ணுறீங்க -?
ஒரு நாட்டில் நடக்கும் குற்றங்களை பற்றி நீங்க பேசுறீங்க எண்டு சொன்னால் - பொலிஸ் ஆக ஆசை படுறீங்க எண்டு அர்த்தமா?
ஒரு நாட்டின் ஆட்சி முறைமை தவறு - என்று உங்க கருத்தை சொன்னால் - அந்நாட்டின் ஜனாதிபதி ஆக நினைக்கிறீங்க எண்டு யாரும் சொல்வாங்களா-?


தேசியத்துக்கு ஆதரவா நடிச்சு அப்பிடியென்ன சதி யாழ்ல பண்ணிடலாம் என்னு சொன்னிங்கனா- நானும் அறிஞ்சு கொள்ளுவன் - அறிவுள்ளவரை கேள்வி கேட்பது தவறில்லைதானே-!

நீங்களும் கேட்கலாம் - தேசியத்து எதிராய் பேசி - யாழ்களத்தில என்ன பண்ணிடலாம் என்று- !

பெற்ற தாயை இழிவுபடுத்தி - எங்க எவர் பேசினாலும் - யாருக்கும் கோவம் வரும் - உங்களுக்கு வராதுன்னா - அது உங்க சொந்த பிரச்சினை !

திரு . பூனைக்குட்டி அவர்களே - ரைம் இருந்தா - நல்லா உறைக்கிற மாதிரி உங்க மண்டைல நீங்களே குட்டுங்க - வேற என்னதை சொல்ல-? 8)
-!
!
Reply
#13
நாய் குரைக்கிறது என்பதற்ாக நாமும் பதிலுக்கு குரைக்க கூடாது. ஆனாலும் குரைக்கும் நாய்கள் கடிக்க வரும்போது நாங்கள் பதிலுக்கு கடிக்கவிட்டாலும் தடியேடுத்து வெருட்டலாம் அல்லவா? (ஓடுவதிலும் பார்க்க இது நல்லம் என்று சொல்ல வந்தன்)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Nitharsan Wrote:நாய் குரைக்கிறது என்பதற்ாக நாமும் பதிலுக்கு குரைக்க கூடாது. ஆனாலும் குரைக்கும் நாய்கள் கடிக்க வரும்போது நாங்கள் பதிலுக்கு கடிக்கவிட்டாலும் தடியேடுத்து வெருட்டலாம் அல்லவா? (ஓடுவதிலும் பார்க்க இது நல்லம் என்று சொல்ல வந்தன்)

சகோதரா - இங்கு அதுவல்ல பிரச்சினை -
இங்கு உனக்கும் எனக்கும்தான் கட்டுப்பாடு - எமக்கு எதிராய் பேசுபவர்களுக்கு எதுவும் இல்லை - !
இதை பாருங்க
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=171015#171015

இந்த நபரை என்ன ஜேர்மன்காரன் - லுவ்தான்ஸா ல கொண்டு வந்து எஸ்ஸன் ல இறக்கினானா -?
இருந்தும் பேசுறார் -!
எயர் இஸ்ற் அயன் இடியோற் ! டஸ் வஸ் இஸ் கான் சாகன் -! 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)