Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவர் சுட்டுக் கொலை
#1
யாழ்ப்பாணம் நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவரை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

வடமராட்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சுப்பிரமணியம் வசீகரன் என்ற கண்ணன் வடமராட்சிப் பகுதி ஓட்டோ வாகன உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் இப்படுகொலை நடத்தப்பட்டதாக படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட கண்ணன் (வயது 28) கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த டிசம்பரில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயர்ந்து மீண்டும் அண்மையில் கரவெட்டிக்குத் திரும்பி ஓட்டோ வாகனத்தை ஓட்டி வந்தார்.

படுகொலை செய்யப்பட்ட மற்றொரு சாரதியான இரத்தினம் இராசிநாதன் (வயது 23) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது கண்ணனோடு நின்று கொண்டிருந்தவராவர்.

நெல்லியடி சந்தியில் வழமையாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இப்படுகொலையின் போது அவர்கள் அப்பகுதியிலிருந்து விலகிச் சென்று படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர் திரும்பியதாக நெல்லியடி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

புதினம்
Reply
#2
யாழ்- இருபாலை சந்தியில் ஓட்டோ சாரதி ஜெனா என்னும் இளைஞர் இன்று மதியம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்
" "
Reply
#3
வர்த்தகர்கள் பரவலாக வடக்கு கிழக்கில் குறிவைக்கப்படுவதற்கு காரணம் ஓட்டுக் குழுக்கள் கேக்கும் கப்பம். அவர்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்படுவதால் இயலுமானவரை சுருட்ட முயற்சிக்கிறார்கள். கடை மற்றும் வியாபார சொந்தக்காரர்களை பெருந்தொகைப் பணத்தை குறிப்பிட்ட 1...2 நாட்களில் தரும்படி கேக்கிறார்கள் மறுப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்கு நிலமைகள் சொல்லத் தொடங்கிய பொழுதும் இப்படியான கொலைகளை அவர்களோடு இயங்கிய ஒட்டுக்குழுக்கள் நடத்தினார்கள்.
Reply
#4
யாழில் மேலும் ஒரு ஓட்டோ சாரதி சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டோ சாரதியான குருநாதன் ஜனார்த்தனன் (வயது 23) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதீயில் இருபாலை சந்தியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தனது வாகனத்திற்குள் உள்ளே ஜனார்த்தனன் அமர்ந்திருந்தபோது ஆயுததாரிகள் அவரை நெருங்கியுள்ளனர். இதையடுத்து ஜனார்த்தனன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரைத் தொடர்ந்து விரட்டிய ஆயுததாரிகள் வைரவர் ஆலயம் அருகே சுட்டுப் படுகொலை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இருபாலை சந்தியில் அமைந்துள்ள பாரிய சிறிலங்கா இராணுவ முகாம் அருகே 100 மீற்றர் தொலைவில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஜனார்த்தனன் வலிகாமம் பிரதேசம் இருபாலையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் நேற்று இரு ஓட்டோ சாரதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நெல்லியடி சந்தையில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு சோகக் கீதங்கள் இசைக்கப்பட்டன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் முன்னாள் புளொட் உறுப்பினரான அமிர்தநாதன் கென்னடி (வயது 35) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

யாழ். நாவாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனியார் மிதிவண்டி நிறுத்துமிடத்தில் அவர் அமர்ந்திருந்தபோது இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. படுகாயமடைந்த அமிர்தநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் அமிர்தநாதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தகவல் புதினம்
" "
Reply
#5
பல்கலைக்களக மாணவர்கள், ஓட்டோ சாரதிகள், வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், எண்று குழுக்குழுவாக முகமாலையில் போர்ப்பயிற்ச்சியை பெற்றுக்கொண்ட மக்கள்தான் மக்கள் படையினர் எண்ற சந்தேகத்தில் கொல்லப்படுகிறார்கள் எண்று யாழில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்...
::
Reply
#6
Thala Wrote:பல்கலைக்களக மாணவர்கள், ஓட்டோ சாரதிகள், வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், எண்று குழுக்குழுவாக முகமாலையில் போர்ப்பயிற்ச்சியை பெற்றுக்கொண்ட மக்கள்தான் மக்கள் படையினர் எண்ற சந்தேகத்தில் கொல்லப்படுகிறார்கள் எண்று யாழில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்...

அப்போ எட்டப்பர்களும் சேர்ந்து பயிற்சி என்ற போர்வையில் நுழைந்து இப்போது குலத்தொழிலை செய்யினமோ?

ஆனால் கொலைகள் கூடிக்கொண்டே போகுது?
எல்லாரும் மெளனமாய் இருக்கிற காரணமும் புரியேல்லல.
உந்த மனிதஉரிமை அமைப்புக்களும் வாளாவிருக்கின்றனர்.
காசு வாங்கினம் என்று குழறினவை இப்ப வாய் திறக்கினம் இல்லை. :twisted:
போன உயிர் திரும்பாது நடக்கவிருப்பதையாவது தடுக்கினம் இல்லை.
தமிழ் மக்கள் தினமும் கொலை செய்யப்படுகினம்.அவர்களை நம்பி இருந்த குடும்பத்தின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)