Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீனத் தேர்தலில் கமாஸ் வெற்றி
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41258000/jpg/_41258456_hamas_ap203body.jpg' border='0' alt='user posted image'>

பலஸ்தீன தேசத்தில் நடந்த தேர்தலில் தீவிரவாதக் கட்சியான கமாஸ் (Hamas), பலஸ்தீன விடுதலை இயக்க (PLO) சார்புடைய ஆளும் தரப்பை தோற்கடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக வரும் செய்திகளை அடுத்து கமாஸை பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ள இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை விழி புதுங்கி நிற்கின்றன..!

கமாஸ் தற்போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அழுத்ததுக்குப் பணிந்து ஆயுதங்களைக் களையாது பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்துவரும் ஒரு பலஸ்தீன சார்பு விடுதலை இயக்கமாகும்..!

இதற்கிடையே கமாஸுடன் தாம் தொடர்புகளை வைக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் அமெரிக்க வால்பிடி ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளன. மேற்குலக சார்பு பலஸ்தீன பிரதமர் தேர்தல் தோல்வியை அடுத்து பதவி விலகுகிறார்..!

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் (EU) போன்றவை எனியாவது போராடும் மக்களின் மனநிலையறியாத பயங்கரவாத பட்டியல் வீண் என்பது குறித்து சிந்திப்பது நல்லது..!

தகவல் மூலம் - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41259000/jpg/_41259256_haniya_afp203body.jpg' border='0' alt='user posted image'>

எதிர்பாராத வெற்றிக்களிப்பில் கமாஸ்..!

கமாஸ் இயக்கம் 1987 இல் பலஸ்தீன தேசத்தில் இஸ்ரேலிய இராணுவ மற்றும் குடியேற்றக்காரர்களை வெளியேற்றவென்று அமைக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். இதன் தாக்குதல் அழுத்தத்தால் இஸ்ரேல் ஆக்கிரமிப் பலஸ்தீனத்தில் இருந்து முதலில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களும் அதன் பின் காசாவில் இருந்து கடந்த வருடம் இஸ்ரேலியப் படையினரும் வெளியேற்றப்பட்டனர். இந்த இயக்கத்தின் இக் கொள்கை வெற்றியே அதற்கு ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களால் நேர்மையான தேர்தல் என்று கருதத்தக்க இந்தத் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது..!

இஸ்ரேலில் நடத்தப்பட்ட பல தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு கமாஸ் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டி இருந்ததும் அவ்வியக்கம் இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளால் பயங்கரவாத இயக்கம் என்று பட்டியலிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். பலஸ்தீன முன்னாள் அதிபர் யசீர் அரபாத் இஸ்ரேல் பலஸ்தீன ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் ஆயுத வன்முறைகளைக் கைவிட்ட பின்னரும் பலஸ்தீன தேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நீடித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. Idea

தகவல் மூலம் - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆயுதப்போரை கைவிட்ட பின் காமஸ் அமைப்பு பலஸ்தீன மக்களின் காவலர்களாக இருந்தார்கள் எனலாம். பலாஸ்தீனத்தில் பல பலஸ்தீன விடுதலை அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட கூடிய அளவில் வளர்ச்சியடைந்த விடுதலையமைப்பாக கமாஸ் திகழ்கின்றது. ஆனால் கமாஸின் பல செய்ற்ப்பாடுகள் பயங்கரவாதம் என்பதை ஏற்றுகொண்டே ஆக வேண்டும். ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் பெருமைப்படும் அதே நேரம் பயங்கர செய்களை செய்வதால் வேதனைப்பட்டே ஆக வேண்டும்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஹமாசின் எந்த நடவடிக்கைகளை பயங்கரவாத செயல்கள் என்றும் அது குறித்து ஹமாஸ் வேதனைப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றீர்கள் நிதர்சன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
அரசபயங்கரவாதத்தை உலகம் கண்டு கொள்ளாதபோது ஹமாஸ் செய்தது ஒன்றும் பெரிய பாதிப்பான விடயங்கள் அல்ல. இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கி, அங்கே எப்படி பாலஸ்தீனர் துரத்தியடிக்கப்பட்டார்களோ, அவ்வாறே ஈழப்பிரச்சனையில் சிங்களக் குடியேற்றமும் அமைந்தது.
[size=14] ' '
Reply
#6
ஹமாஸ் இயக்கம் சர்வதேசத்துடனான தொடர்புகளை பேணி வராவிட்டாலும் அது தனது மக்கள் மத்தியில் மிகக்கூடிய கவனத்தை கொண்டிருந்தது. அதனாலேயே இவர்களால் வெற்றி பெறமுடிந்தது.
Reply
#7
கமாஸின் வெற்றி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமுகர் பாலகுமாரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள்...

"<b>உலகின் மனசாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.</b>"

மேலும் கருத்தை விரிவாக நோக்க...

http://www.eelampage.com/?cn=24037
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)