Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபு மகனுக்கு திருமணம்
#1
பிரபு மகனுக்கு திருமணம்
பிப்ரவரி 08, 2006

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.



சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தில் நடைபெறும் முதல் சுப நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழிலிருந்து செய்தி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)