04-24-2006, 01:40 AM
கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது.
அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியாலயம் சோதனைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சோதனை நடவடிக்கை பற்றி பொது மக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, இப்படியான செயற்பாடுகள் மூலம், தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றுதியை யாரும் குலைக்க முடியாது என்றும், இச் செயற்பாடுகளின் மூலம் கனடிய அரசானது கனடியத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது எனவும் தெரிவித்தனர்.
இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை காரணமாக உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ கிளையின் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ம் திகதி செவ்வாய் கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழமையான சேவைகளினை கனேடியத் தமிழ் மக்களிற்கு வழங்கப்படும் எனவும் உலகத்தமிழர் இயக்கம் (ஒன்ராரியே) அறிவித்துள்ளது