Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா?
#1
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா?



மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான்.
சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம்.
கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது.

சிரிப்பை பொறுத்தவரை பல வகைகள் உண்டு. இருப்பினும் வாய் விட்டு, பல் ஈறுகள் தெரிய சிரிப்பது உடம்புக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல வாய் விட்டு சிரிக்க வேண்டுமென்றால் பற்கள் முத்துப் போல இருக்க வேண்டும். பல் ஈறுகள் தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் காரை படிந்த மஞ்சள் நிறம், ஒன்றிரண்டு பற்கள் காணாமல் போதல், பற்கள் அரித்து காணப்படுவது, பற்குழி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களால் இதுபோல சிரிக்க முடியுமா? அவர்கள் உண்மையிலேயே சிரிக்க வேண்டும் என்றும் நினைத்தாலும், பல் பிரச்சினைகள் நினைத்து வாயை மூடிக் கொள்வார்கள். அல்லது நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். இதுபோன்ற நமுட்டு சிரிப்பால் ஒரு பயனும் இல்லை.

வாய் விட்டு சிரிக்கும் போது முகத்தில் உள்ள தசைகள் நன்றாக இயக்கப்படுவதால் முகம் பொலிவடைகிறது. தோற்றத்தில் நன்றhக இருப்பவர்கள், தங்களைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் உள்ளவர்களிடம சகஜமாக பழக முடிகிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பதால் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைகிறார்கள். ஆனால் வாய் விட்டு சிரிக்காதவர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால், சமுதாயத்துடன் இணைந்து பழகுவதில் பின்தங்கி இருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய பல் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டால், எல்லாம் நார்மலாகி விடும். தன்னம்பிக்கை அதிகரித்து, நிலையும் உயரும்.

பற் குறைபாடுகளை சீர் செய்வதால் 2 லாபம் கிடைக்கிறது. ஒன்று, ஒவ்வொரு வரும் தங்களைப் பற்றி நல்ல விதமாக உணர்வதால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னொன்று ஆபத்தான பல் நோய்களும் அகற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒருவருக்கு பற்கள் அதிகமான இடைவெளி விட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உணவு உண்ட பிறகு, உணவு துணுக்குகள் இந்த இடைவெளிகளில் போய் தங்கும். அப்போது என்னதான் பிரஷ்ஷை வைத்து தேய்த்தாலும் உணவுத் துகள் வெளி வராது. இந்நிலையில் என்ன ஆகும்? நாள் போக்கில் பாக்டீரிய கிருமிகள் குடிபுகுந்து பற்களை அழித்து விடும். இதுதவிர வாயில் துர்நாற்றம் உண்டாவதால், அடுத்தவருடன் பேச தயங்குவர்.

வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்க முதலில் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் விட்டு சிரியுங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)