Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு
#1
(மேலதிக இணைப்பு) தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு- ஒற்றையாட்சியில்தான் தீர்வு: மகிந்த மீண்டும் அறிவிப்பு
[திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 14:50 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கிற தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்க முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அளித்த நேர்காணல்:

சிறிலங்கா என்பது ஒரே நாடுதான். அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிநாட்டு கோரிக்கை இடமளிக்க முடியாது. அந்த யோசனை முற்றாக கைவிடப்படல் வேண்டும்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த ஆயுதக் குழு இயங்கினாலும் அதை நாங்கள் நிறுத்தக் கூறுகிறோம். கருணா குழு உள்ளிட்ட எந்தக் குழுவாக இருந்தாலும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதங்களை ஏந்துவதை கட்டுப்படுத்துவோம்.

பொதுமக்களை சித்திரவதை செய்வதையும் படுகொலை செய்வதையும் நிறுத்துவது தொடர்பாக விடுதலைப் புலிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கூட்டாட்சி முறையைவிட ஒற்றையாட்சியின் கீழ்தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறோம். ஐக்கிய இராச்சியத்தின் அரச முறையின் கீழ் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தலாம்.

இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறை. ஒற்றையாட்சியின் கிழே அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுவே சிறிலங்காவுக்கும் பின்பற்றலாம். இருதரப்பினரும் உட்கார்ந்து பேசி விட்டுக்கொடுப்புகளின் மூலம் பேச்சுக்களை நடத்தலாம்.

ஜெனீவா பேச்சுக்களில் வன்முறைகளுக்கும் படுகொலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம்.

நான் அமைதியை விரும்புகிற நபர். போர் வெறியர் அல்ல. கடந்த இரண்டு மாதங்களாக இராணுவத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.

எவ்வளவு நாளைக்கு நான் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியும்? என் மீதான அழுத்தங்களால் அரசாங்கத் தலைவராக இருக்கும் நான் ஒரு சுவரின் ஓரமாக நிறுத்தப்படுகிறேன். நான் ஒரு சுவரின் ஓரமாக நிறுத்தப்படும்போது.....(அதற்கு மேல் மகிந்த ராஜபக்ச கூறாமல் நிறுத்திவிட்டு) இருந்தபோதும் அமைதியை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அமைதிப் பேச்சுக்கள் மேற்கொள்ள காலம் ஆகும். ஒரே நாடு- ஒரே தேசம்- ஒரே இராணுவம் என்ற நாள் ஒன்று வரும். அவர்கள் காவல்துறை வைத்திருக்கலாம். ஆனால் இரு இராணுவம், இரு விமானப் படை, இரு கடற்படை இருக்க முடியாது என்றார் மகிந்த ராஜபக்ச.


புதினத்திலிருந்து எடுத்த செய்தி


http://today.reuters.com/news/newsArticle....&archived=False
Reply


Forum Jump:


Users browsing this thread: