Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவாவில் ஒப்புவித்தல் மட்டுமே!
#1
ஒப்புவித்தல் மட்டுமே!

ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.

இதேவேளை பேச்சுவார்த்தையில் எதுவரையில் பேசப்படவேண்டும். என்பது குறித்து அரசாங்கத்தின் கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றும் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவுறுத்தல்கள்; விடுத்தவண்ணம் உள்ளனர். ஆளும் கூட்டணிகளினதும் மற்றும் ஆதரவு வழங்கும் கட்சிகளினதும்; ஆலோசனைகளால் பேச்சுவார்த்தை மேசையில் எதைப்பேசுவது என்ற குழப்பமே அரசாங்கதரப்பு குழுவினருக்கு எஞ்சியிருக்கக்கூடும்.

பயிற்சிப்பட்டறைகள் கட்சிகளின் கருத்தமர்வுகள் என்பவற்றில் அரசாங்கம் எதை வெளிக்காட்ட முனைகின்றது எதைச்செய்ய முனைகின்றது என்பது இலகுவில் ஊகித்து அறிந்து கொள்ளத்தக்கதே. அதாவது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியல் கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்பட முற்படுவதாக சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முற்படுகின்றது.

இதேவேளை இச்சந்திப்புக்களை அடிப்படையாக வைத்து யுத்த நிறுத்த உடன்பாட்டில் தமக்குச்சாதகமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடலாம் என அரசு கருதுகின்றது. அதாவது சர்வதேச hPதியில் மக்களின் ஒருமித்த கருத்துடன் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதாகவும், யுத்தநிறுத்த உடன்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்த முற்படுவதாகவுள்ளது.

ஆனால் பயிற்சிப்பட்டறைகளை வைத்தாலும், கருத்தமர்வுகளை நடத்தி இருப்பினும் பேச்சுவார்த்தைக்குழுவினர் மீது அரசாங்கத் தரப்பும்- குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்றவை நம்பிக்கை கொண்டிருப்பதாக இல்லை. அத்தோடு சனாதிபதி ராஜபக்ஷ கூட அத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக தெரிகின்றது.

அவ்வாறு இல்லாது விடில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போதைய பேச்சுவார்த்தைகள் யுத்த நிறுத்தம்; பற்றியதாகையால் அது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை அரசதரப்பு எடுக்க வேண்டும் என்பதை சனாதிபதி தனது ஆலோசனைப்படி மட்டுமே எடுக்கவேண்டும் எனக்கருதுகின்றனர்.

இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் தரப்பிற்கு போதிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு வெளியில் விடுதலைப் புலிகள் கேள்விகளை எழுப்பினாலோ விவகாரத்தைக் கொண்டு சென்றாலோ அரச தரப்பினருக்கு பதில் அளிப்பதற்கான உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அது குறித்து முடிவை அரசகுழு மேற்கொள்ள முடியும்.

இத்தகைய நிபந்தனைகளையும் மீறி அரச குழுவினர் தடுமாற்றம் காரணமாக வாக்குறுதிகளை அளித்து விடுவார்களோ என்ற அச்சம் அரச தரப்பில் நிலவுவதாகக்கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவிற்கு ஜெனீவாவிற்கு அனுப்பப்படும் து}}துக்குழுவினர் மீது ஆளும் கூட்டணியும் அதற்கு ஆதரவளிப்போரும் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

இது மாத்திரமின்றி பேச்சுவார்த்தை விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் எதுவும் வழங்கப்படக்கூடாது என்ற கட்டுப்பாடும் து}}துக்குழுவினருக்கு விதிக்கப்பட்டுள்ளது அதாவது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலேயே பேச்சுவார்த்தை தவிர்ந்த நேரத்திலும் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இந்த வகையில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைக்கென அனுப்பும் குழுவானது அரச தரப்பினரால் ஓதப்பட்டவற்றை ஒப்புவிக்கச் செல்லும் குழுவாகவே தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையினால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை அரச தரப்பில் இருந்து முன்னேற்றமானதெதுவும் எதிர்பார்ப்பதற்கு இருப்பதாக இல்லை சிலவேளை அரச தரப்புக்குழுவினர்; ஏதாவது முன்னேற்றகரமான விடயம் குறித்து பேசிவிட்டால் அக்குழுவினர் நாடு திரும்ப முடியுமா? என்பது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகமாட்டது.

நன்றி: ஈழநாதம்
Reply
#2
பயன் தரமாட்டாது!


பேச்சுவார்த்தைக்குச் செல்லும் ஒரு குழு எவ்வாறு பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லுவது? இலக்கை எவ்வாறு எட்டுவது? என்பது குறித்தே சிந்திப்பதும், செயற்படுத்துவதுமாக இருத்தல் வேண்டும். அதுவே வழமையும் கூட. அப்பொழுதே பேச்சுவார்த்தையில் முன்னேற்றகரமான முடிவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான அர்த்தமும் வெளிப்படும்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் ஜெனீவா செல்லும் அரச பேச்சுவார்த்தை குழுவினருக்கு போதிக்கப்படும் விடயங்களும், விதிக்கும் கட்டுப்பாடுகளும் மேற்கூறப்பட்டவையாக இல்லை. அதாவது பேச்சுவார்த்தைகளை எவ்வாறு குழப்புவதற்கு உள்ளாக்குவது, விடுதலைப் புலிகளை எவ்வாறு பலவீனப்படுத்துவது, தமிழ் மக்களின் கோரிக்கைகளை எவ்வாறு நிராகரிப்பது என்பன போன்றவையாகவே உள்ளன.

சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் ஒரு தரப்பு- அது அரசாங்கத்தரப்பானாலும் சரி- தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கவும் வாதிடவும் உரிமை கொண்டது என்பது நிராகரிக்கப்படமுடியாததொன்று தான். ஆனால் அக்கருத்துக்களும், வாதங்களும், சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கானவையாகவும் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாகவும் இருக்கு மேயானால் பேச்சுவார்த்தையின் நோக்கமே தோல்வி அடைந்ததாகிவிடும்.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையில், யுத்த நிறுத்த உடன்பாட்டை எவ்வாறு செம்மையாக அமுல்படுத்தல் என்பது குறித்துப் பேசப்படுதலே முன்னேற்றம் காண்பதற்கான வழிமுறையாக இருக்கமுடியும். அதை விடுத்து யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகளுக்கு மாறான தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கவும், வலியுறுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளினால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடமாட்டாது.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத்தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் அவர்கள் கூறியிருப்பது போன்று அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் தத்தமது கட்டுப்பாட்டுப்பகுதிகளிலுள்ள பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என்பது முற்றிலும் சரியானதே. இதை விடுத்து தமது கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நடக்கும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு வேறு யாரையும் பொறுப்புக்கூறுவதும், தமக்குச் சம்பந்தமில்லை எனக்கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.

ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்கள் அதனைச் செய்வதாக இல்லை. மாறாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தல் என்ற நோக்கத்தில் ஆயுதக்குழுக்களை வளர்க்கவே முற்படுகின்றனர். ஆனால் இவர்களின் நடவடிக்கை விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்றதோ இல்லையோ யுத்த நிறுத்த உடன்பாட்டைப் பலவீனப்படுத்துவதாகின்றது என்பது மட்டும் நிச்சயமானதாகும்.

இதேபோன்றே இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு போன்ற விடயத்திலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படுவதாகவுள்ளது. ஒற்றையாட்;சிக்குள் தீர்வு, தமிழருக்குத் தாயகம் என்பதொன்று கிடையாது என்ற அரசின் நிலைப்பாடானது சமாதானப் பேச்சுவார்த்தையையே பலவீனப்படுத்தும்; நடவடிக்கையாகும்.

சமாதான காலத்திலும் சரி, சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் சரி, இருதரப்பினரும் தம்மை அரசியல் hPதியாகவோ அன்றி இராணுவ hPதியாகவோ பலப்படுத்திக்கொள்ளலாம். மாறாக ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தல,; ஒருவருக்கெதிராக ஒருவர் சதிச் செயலில் ஈடுபடுதல் என்பது இவர்கள் இடையிலான பேச்சுக்களில் முன்னேற்றம் காண உதவப்போவதில்லை.

சுருக்கமாகக் கூறுவதானால் அரசாங்கத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதம் சமாதானப் பேச்சுக்களில் முன்னேற்றம் காண்பதற்காக இல்லை. புலிகளைப் பலவீனப்படுத்துதல் என்ற நோக்கில் பேச்சுவார்த்தை மேசையில் நெருக்கடிகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகவே உள்ளது. ஆகையினால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுமா? என்பது குறித்து கேள்விக்குரிய தொன்றாகவேவுள்ளது.

இது அரசாங்கம்; பேச்சுவார்த்தை மேசை குறித்தும், புலிகள் குறித்தும் தவறாக விளங்கிக் கொண்டதன் விளைவே ஆகும். பேச்சுவார்த்தை மேசையில் குறிப்பிடப்பட்ட அதாவது வரையறை செய்யப்பட்ட விடயங்களே பேசப்பட முடியும் என்பதும் மேசையில் யுத்த நிறுத்த உடன்பாட்டை வலுவிழக்கச் செய்வதும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் பேச முனைவதும் விடுதலைப் புலிகளை வலுவிழக்கச் செய்துவிடும் எனக் கருதுவதும் தவறான சிந்தனையின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நன்றி: ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)