Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய களம்
#1
அனைவருக்கும் வணக்கம்,

நீண்ட கடும் முயற்சியின் பின்னர் இப்புதிய யுனிகோட் எழுத்துருவிலமைந்த கருத்துக்களத்தினைத் திறந்துள்ளோம்.

தொடர்ச்சியாக நாம் எடுத்து வந்த முயற்சிகள் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், யாழின் கடின உழைப்புத்தான் இக்கருத்துக்களத்தினை மிக விரைவாக உங்கள் முன் கொண்டு வர உதவியது. எனினும் உங்களில் பலரின் ஒத்துழைப்பு கூடியவரை பிழைகளைத் தவிர்த்து இதனைக் கொண்டுவர உதவியது. இன்னும் இதனைச்சிறப்பாக செய்ய முடியும் என்றாலும் நேரம் ஒரு பிரச்சனையாக அமைவதால் பலதினையும் தவிர்க்க வேண்டியுள்ளது.

புதிய கருத்துக்களத்தில் ஓர் ஒழுங்கு முறையையும், இறுக்கமான போக்கினையும் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளேன்.

இதன்படி
- தலைப்புக்களுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் முற்றாக நீக்கப்படும்.
- அத்துடன் கருத்துப்பிரிவுகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் பொருத்தமான பிரிவுகளுக்கு இடம்மாற்றப்படும்.
- நிபந்தனைகளை மீறும் கருத்துக்கள் கூடியவரை, மிகவிரைவாக மாற்றியமைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.

இது வரை காலமும் கருத்துக்களத்தில் உதவிக்கு "யாழ்" அவர்களையும் இணைத்து கருத்துக்களத்தினை நிர்வாகித்து வந்திருந்தேன். இப்புதிய களத்தில் நான், யாழ் ஆகியோர் பொறுப்பாளர் நிலையினையும் மேலும் உதவிக்கு பரணீ, இளங்கோ ஆகியோரையும் இணைத்துள்ளேன். இதில் பரணீ, இளங்கோ ஆகியோரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்

- தேவைப்படும் கருத்துக்களை அதன் அர்த்தம் கெடாத வகையில் மாற்றியமைப்பார்கள். (கள நிபந்தனைகளை மீறி வரும்பேதே இதனைச் செய்வார்கள்)
- தேவைப்படும் கருத்துக்களை இடம் மாற்றி விடுவார்கள். (பிரிவுகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பொருத்தமான பிரிவுகளுக்கு இடம்மாற்றி விடுவார்கள்)
- அவ்வப்பிரிவுகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வார்கள் (உதாரணமாக எழுதியவர் கேட்கும் பட்சத்தில் எழுத்துப்பிழைகளை மாற்றிவிடுதல் போன்ற செயற்பாடுகள்)


ஆகையினால் நிபந்தனைகளுக்கு அமைய எழுதுவதுடன், கூடியவரை பிழைகளைத் தவிர்த்து எமக்கு ஒத்துழைப்பு தருவதுடன், தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான நல்ல பயன்தரு கருத்துக்களை இக்களம் ஊடாக வழங்கி அறிவினை வளர்க்க, சந்தேகங்களை தீர்க்க, தகவல்களை தெரியப்படுத்த, இலைமறைகாய்களாக இருப்பவர்களை வெளிக்கொணர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

நட்புடன்
மோகன்
Reply
#2
[size=18]வாழ்த்துக்கள் மோகன்
Nadpudan
Chandravathanaa
Reply
#3
புதிய களத்தில்
அனைவரும் புதிதாகப் பதிந்து கொள்ள வேண்டும். அதாவது பழைய களத்தில் பதிந்திருந்தவர்கள் மீண்டும் பதிந்து கொள்ள வேண்டும். யுனிகோட் எழுத்துக்கள் எதாவது ஒன்றினை வைத்திருத்தல் வேண்டும். வின்டோஸ் 95, 98 பாவிப்பவர்கள் பழைய கருத்துக்களத்தில் இது தொடர்பாக எழுதப்பட்ட விபரங்களைப் பார்வையிடுங்கள்.
முகவரி: http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...der=asc&start=0

பரீட்சார்த்தக்களப்பிரிவு தொடர்ந்தும் திறந்துள்ளது. பரீட்சார்த்த முயற்சிகளை அங்கு மேற்கொள்ளுங்கள். பழைய களத்தில் யாழ் இணையம் பிரிவு தொடர்நதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய களத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் அதுபற்றி அங்கு கலந்துரையாடலாம்.
Reply
#4
ஏன் எனது டீ சரிவருது இல்லை மோகன் அதற்க ஆங்கிலப் பி வருது
Reply
#5
வணக்கம் யாழ் பொறுப்பாளர் மற்றும் யாழ் இணைய அங்கத்துவர்களுக்கும்.

உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#6
veera Wrote:வணக்கம் யாழ் பொறுப்பாளர் மற்றும் யாழ் இணைய அங்கத்துவர்களுக்கும்.

உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நல்வரவு வீரா..
உங்களையும் றான் பார்த்திருக்கிறேனே!.
ஆனால் ஒருமுறைகூட சுவிஸ் வந்ததில்லை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#7
அவர் சுவிஸ் இல்லை அனால் அங்கை இருந்தவர்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)