Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்
#1
[size=24]குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்
பிப்ரவரி 16, 2006

சென்னை:

நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kushbocc-350.jpg' border='0' alt='user posted image'>
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ், மேக்ஸிம் பத்திரிக்கை எங்கிருந்து அச்சாகி வெளியிடப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தற்போது பத்திரிக்கை ஹரியானாவுக்கு அருகே உள்ள தொழிற்பேட்டையில்தான் அச்சிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரது முகவரிகளும் கிடைத்துள்ளன. விரைவில் தமிழக போலீஸ் படை அங்கு சென்று அனைவரையும் கைது செய்யவுள்ளது.

சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவர் முன் ஜாமீன் கோரி டெல்லியில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற 2 பேர் குறித்துத் தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் நடராஜ்.

இறங்கி வருகிறது மேக்ஸிம்:

இந் நிலையில் குஷ்புவின் ஆபாசப் படம் பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக சமரசமாக போய் விடலாம், பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்று மேக்ஸிம் பத்திரிக்கையின் சார்பில் குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு ஒரு பெண்ணின் உடலை, குஷ்புவின் முகத்தை சேர்த்து ஆபாசமான படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மேக்ஸிம். கொந்தளித்துப் போயுள்ள குஷ்பு, மேக்ஸிமிடம் ரூ. 3 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விவகாரம் பெரிதாவதால் மேக்ஸிம் நிறுவனம், குஷ்புவுடன் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக மேக்ஸிம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீச்சல் உடைப் பிரச்சினை தொடர்பாக தொலைபேசி மூலம் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். அத்தோடு இரண்டு சமரச யோசனைகளையும் தெரிவித்துள்ளோம்.

வழக்கறிஞர் மூலம் குஷ்புவிடம் தெரிவித்த அந்த சமரச யோசனைகளை இப்போது பொதுமக்களிடம் வெளியிடுகிறோம்.

குஷ்புவின் புகைப்படத்தை, நகைச்சுவையாக பார்ப்பதற்கென, கலை நோக்கத்தோடு வெளியிட்டோம். அது உண்மையான படம் அல்ல, போலியானது என்ற வாசகத்தையும் படத்திற்குக் கீழே குறிப்பிட்டிருந்தோம். எனவே குஷ்புவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த படத்தை நாங்கள் வெளியிடவில்லை. வேறு உள்நோக்கமும் இல்லை.

ஆனாலும் குஷ்பு மன வருத்தம் அடைந்ததாகக் கூறியதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், சமரச யோசனைகளையும் அவரிடம் தெ¶வித்திருந்தோம்.

அதன்படி சென்னையிலிருந்து வெளியாகும் அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள், பத்திரிகைகளில் மேக்ஸிம் பத்திரிக்கை ஆசிரியரின் மன்னிப்பை வெளியிடுவதோடு, குஷ்புவோடு கூட்டாக பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.

இதில் ஏதாவது ஒன்றை குஷ்பு ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவரிடம் தெரிவித்துள்ளோம்.

குஷ்புவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த இதழில் குஷ்புவின் புகைப்படம் வெளியான அதே அளவில் மன்னிப்பும் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமரசத்தை குஷ்பு ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)