Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Top 10 Tamil Movies
#1
தமிழ் சினிமா 'பாக்ஸ் ஆபிஸ்'

இந்த வாரம் வசூலில் முன்னணியில் உள்ள தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு பார்வை:

* வெளியாகி இன்றுடன் (செப் 19) 50வது நாளை எட்டிவிட்ட நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் படம் 'காக்க.. காக்க..' தான். ஏ மற்றும் பி சென்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.

ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பும், வேகமுமாக படம் நகர்வதும், சூர்யாவின் மிக அட்டகாசமான நடிப்பும், சுறுசுறுப்பான கதையும், ஆர்.டி. பாஸ்கரின் ஹாலிவுட் தர படப் பிடிப்பும், ஹாரிஸ் ஜெயராஜ் தாமரைக் கூட்டணியின் அருமையான பாடல்களும் சேர்ந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.

இப்போதைக்கு ரிபீட் ஆடியன்ஸ் அதிகம் உள்ள படம் காக்க காக்க தான். தயாரிப்பாளர் தாணுவின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படம் இது தானாம். படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஏகப்பட்ட ஆபர்கள் குவிந்து வருகின்றன. ஆனால், நான் இயக்கும் அடுத்த தமிழப் படமும் தாணுவில் தயாரிப்பில் தான் இருக்கும் என்கிறார்.

* இதற்கு அடுத்த நிலையில் இருப்பது தனுஷ் சாயா சிங் நடித்த 'திருடா திருடி'. இதற்கு முன் வந்த தனுஷின் 'ஏ' ரகப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. இதனால் இந்தப் படம் ஓடுமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், எல்லோருடைய சந்தேகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது இந்தப் படம். வசூலில் காக்க.. காக்கவுக்கு அடுத்த இடத்தில் நிற்கிறது. மன்மத ராசா.. மன்மத ராசா.. பாடலுக்கு தனுஷ் சாயா போட்டுள்ள ஆட்டம் படத்தில் பெரிய பிளஸ் பாயிண்ட்.

* வசூலில் மூன்றாவது இடத்தில் இருப்பது 'பாய்ஸ்'. முதல் இரு வாரங்கள் முழுமையாக அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டிருந்ததால் பேய் வசூல் என்றார்கள். இப்போது சாதாரண வசூல் என்ற நிலையை இந்தப் படம் அடைந்துவிட்டது.

படத்துக்கு பெண்கள் கூட்டம் வராதது பெரிய குறை. படத்தை ஓட்டிக் கொண்டிருப்பது பள்ளி கல்லூரி இளவட்டங்கள் தான். ஆனால், தெலுங்கில் படம் நல்லபடியாக ஓடுவதால் ஓரளவுக்கு போட்ட பணத்தை தேற்றிவிடுவாராம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.

ஆனால், தமிழில் எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் தானாம். காதல் கொண்டேன், ஜெயம் போன்ற படங்கள் வந்து நெடு நாட்களாகிவிட்டதால் இப்போது தான் தட்டுத்தடுமாறி இந்த இடத்தைப் பிடித்துள்ளது பாய்ஸ். காட்சிகளை வெட்டி, ஆபாசத்தைக் குறைத்து 'அஜால் குஜால்' வேலை எல்லாம் செய்து பார்த்தும் படத்துக்கு கூட்டத்தை இழுக்க முடியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், ஷங்கர்!

* நான்காவது இடத்தில் இருக்கும் படம் 'காதல் கொண்டேன்'. ஒரே ஹீரோவின் இரு படங்கள் பாக்ஸ் ஆபிசில் முதல் 5 இடங்களில் இருப்பது தமிழில் மிக அரிய சமாச்சாரம். இந்த லக் தனுசுக்கு அடித்துள்ளது. அவரது அண்ணன் இயக்கி, அப்பா தயாரித்த 'காதல் கொணடேன்' நான்காவது இடத்தில் உள்ளது.

டைரக்ஷன், கதை, பாடல்கள், தனுசின் நடிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்து கஸ்தூரிராஜாவுக்கு மீண்டும் மறுவாழ்வு தந்துள்ளது.

* அடுத்த நிலையில் உள்ள படம் 'ஜெயம்'. புதுமுகங்களைக் கொண்ட இந்தப் படம் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றுள்ளது. திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட எடிட்டர் மோகன் தனது மகனை நடிக்க வைத்து எடுத்த படம் இது. அழகிய காதல் கதையுடன், நல்ல இசையுடன் வந்து வசூலிலும் வென்றுவிட்டது இந்தப் படம்.

சிலம்பரசன் நடித்த குப்பை படமான 'அலை' முதல் வாரத்திலேயே படுத்துவிட்டது. சிம்பு திரிஷா நடித்த இந்தப் படத்துக்கு ரொம்ப அதிகமாகவே பில்ட்அப் கொடுத்தார்கள். ஆனால், மகா மட்டமான கதை, சிலம்பரசனின் மட்ட ரக நடிப்புடனும் வெளியான இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்துவிட்டது.

காதல் கொண்டேன், ஜெயம் படங்களை ஒட்டி வெளியான விஜய்காந்தின் தென்னவன், இப்போது வெளியான ஜூனியர் சிவாஜி (சிவாஜியின் பேரன்) 'சக்ஸஸ்' போன்றவையும் பெரும் தோல்வி கண்டுள்ளன. ஜூனியர் சிவாஜி தனது தாத்தாவின் பெயரை நன்றாகவே கெடுத்துள்ளார்.

ஹீரோ யார், ஹீரோயின் யார் என்றெல்லாம் பார்க்காமல் நல்ல கதைகள் மட்டுமே வெல்லும் மிக ஆரோக்கியமான கால கட்டத்தில் தமிழ் சினிமா காலடி எடுத்து வைத்துள்ளது.

காட்சிக்கு காட்சி 5 பக்க வசனம், பறந்து பறந்து அடிப்பது, பெரிய சைஸ் விக்கும் ஒட்டுப் பல்லும் வைத்துக் கொண்டு மகள் வயது ஹீரோயினை விரட்டிக் கொண்டு மரத்தை சுற்றி ஓடுவது, கிராபிக்ஸ் மிரட்டல்கள் என குப்பை மேட்டில் இருந்த சினிமாவை புரபஷனலாக மாற்றிக் காட்டியிருக்கிறார்கள் இளம் இயக்குனர்கள்.

கதைக்கோ, காசு கொடுத்து படம் பார்ப்பவனின் உழைப்புக்கோ மரியாதை தராமல் எப்படி நடித்தாலும் சூப்பர் ஹிட் என்ற நிலையில் இருந்த பெரிய ஹீரோக்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், குழம்பிப் போய் மிச்சம் இருக்கும் முடியையும் பிய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தமிழ் சினிமா அடைந்துள்ள பெரும் பாக்கியம் தானே?


thatstamil.com
Reply
#2
மன்மத ராசா பாடல் அடிக்கடி முனுமுனுக்கவைக்கின்றது. ஆட்டம் அருமை. இருவரும் ஐ_ரம் வரும் வரைக்கும் ஆடினார்கள் என்று தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்த ஞாபகம். முக அழகைவிட தற்போது நடிப்பைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என்பதற்கு தனுஷ் ஒரு எடுத்துக்காட்டு

அப்பாவும் மகளும் நடித்த(விஐய்காந்த கிரண்) தென்னவன் ஓடியேவிடுவான் என்று அந்த படத்தின் டைட்டிலே சொல்கி;னறது

சிம்பு.......எப்போது தன் நடையை நடக்கின்றாரோ அப்போதுதான் அவரிற்கு படம்.........அதுவரை ????????????????????ஃ

காக்கா காக்க எனக்கும் பொலிஸ் ஆகவேண்டும் என்ற ஒரு அவாவை உண்டுபண்ணிய படம். சூர்யாவின் அருமையான நடிப்பு. தொப்பை அழகி (எனக்குபிடிக்காத நடிகை) இருந்தும் இதில் ஏதோ பிடித்திருக்கின்றார் அந்த முண்டக்கண்ணழகி. அருமையான நடிப்பு பாராட்டுக்கள் அனைவருக்கும்

மொதத்ததில் அப்பாக்கள் எல்லாம் அடங்கிக்கொள்ளுங்கள். தற்போது பிள்ளைகளின் காலம்......வெல்லட்டும்
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)