09-28-2003, 08:30 PM
தமிழ் பிசி என்று ஒரு அமைப்பை லினக்ஸ் ஆர்வலர்கள் சேர்ந்து அமைத்தோம்¢ (லினக்ஸா லைனக்ஸா? யாராவது விளக்கினால் உபகாரமாக இருக்கும்¢) ரெட் ஹாட் இதற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் ஆதரவளித்திருக்கிறது. தமிழ்சார்ந்த மென்பொருள் அமைப்பதற்கு ஓப்பன் சோர்ஸ்¢ என்னும் திறந்தவெளி அமைப்புத்தான் சரிப்பட்டு வருகிறது. ஆளாளுக்கு தமிழைக் காப்பபாற்றியே தீருவேன். நான் காப்பாற்றுவதுதான் சரியான காப்பாற்றல் உன் காப்பாற்றல் வெத்து என்கிற மனப்பாங்கு தமிழர்களிடையே இருக்கும்வரை அவரவர் போக்குக்கு காப்பாற்றட்டும் என்று விட்டுவிட்டு, அவைகளில் நல்லவை சிறந்தவை புழக்கத்தில் வந்து மற்றவை தாமாகவே வழியில் உதிர்ந்துவிடும். இல்லையென்றால் டிஸ்¢கி, டாம், டாப், இஸ்கி, யுனிகோடு என்று எத்தனை குறியீட்டுத்தரங்கள், ரோமன், ஃபோனிட்டிக், பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு என்று எத்தனை விசைப்பலகை ஒதுக்கீடுகள்! இவைகளில் எது பிழைக்கும்.
தமிழைக் கணிப்பொறியில் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும். இதுவரை செய்ததே போதும் என்று தமிழர்கள் உணரும்வரை தினப்படி புதிய முயற்சிகளில் நாம் நேர விரயம் செய்துகொண்டு, மற்ற அத்தியாவசியங்களை கவனிக்காமல் விட்டுவிடுவோம். இதன் காரணங்களை இப்போது அலசுவதில் பயனில்லை. புதிதாக தமிழில் ஏதேனும் மென்பொருள் சூழ்நிலையை முயலும்போது நமக்கு தேவைப்படுவது ஒருகலைச் சொல் அடைவு. எல்லோரும் பயன்படுத்துமாறு கலைச்சொற்களை ஓரிடத்தில் ஒரு வலைமனையில் பதிப்பித்து அதை ஊற்றுக்கண்ணாக எல்லோரும் பயன்படுத்தவேண்டும். இந்த கலைச் சொற்களின் அவசியத்தைத்தான் நாங்கள் முதலில் உணர்ந்தோம். இதற்கு ஓப்பன் ஆஃபீஸ் போன்ற மேல்மேசை சூழலுக்கு ஏற்ற எண்ணாயிரம் வார்த்தைகளை முதலில் பதிப்பித்தோம.¢ இப்போது கேடிஇ மோசிலா போன்றவைக்கு உண்டான தனிப்பட்ட வார்த்தைகளையும், செய்திகளையும், தமிழாக்கிக்கொண்டிருக்கிறோம். இவைகளில் மாறுதல்கள் செய்ய சில யோசனை கூறுகிறார்கள். இந்த யோசனைகள் மதிப்பிட்டு உடனடியாக மாற்றங்கள் செய்யவும் ஓப்பன் ஆபிஸ் சூழல் அனுமதிக்கிறது. தமிழ் மொழிக்கு இவ்வாறு அதன் உலகளாவிய ஆர்வக்கோளாறுகளையும் மீறி நல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழில் இந்த ஆண்டின் சென்னை இணைய மாநாடு முடிந்த கையோடு, தமிழில் இதெல்லாம் சாத்தியம். தமிழ் எழுத்துகளை கணிப்பொறியில் பார்க்கலாம், தமிழிலக்கியங்களை தகவல்தளமாக அமைக்கலாம் போன்ற மேம்போக்கான பயன்பாடுகளைக் கடந்து, தமிழில் வாணிபம் உலகளாவிய வர்த்தகம் செய்ய தமிழ் மொழி அறிவு மட்டும் போதும் என்கிற சூழ்நிலை உருவாகத் தொடங்கும்.
பாரதி, ''சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'' என்ற சொன்னது இப்போது யூனிகோடு மூலம் சாத்தியமாகியிருக்கிறது.
- சுஜாதா
நன்றி: அம்பலம்