10-06-2003, 02:07 PM
[size=18]கள நண்பர்களுக்கு வணக்கம் ! மின்னஞ்சலில் எனக்கு வந்திருக்கும் கீழ்க்காணும் கடிதத்தினை கள உறவுகளின் கவனத்துக்கும் அனுப்புகிறேன். இதில் விதண்டாவாதங்களைத் தவிர்த்து நமது ஆதரவையும் வழங்குவோம். இல்லை முரண்பாடெனில் தவிர்க்கலாம். இம்முயற்சியைச் செய்வோரின் அடிமுடிகளைத் தேடுவதை விடுத்து முடிந்தால் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் , யுவதிகளுக்கு ஆதரவளிக்கலாம். இதில் உடன்படுவோர் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள். அவர்களையும் இணையுங்கள்.
அன்புடன் சாந்தி.
................................. திகதி
................................................. யேர்மனிய நகரம்
பரிணாமப்படிநிலை வளர்ச்சியில் மிருகங்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்து கொண்ட மனித இனம், தன் சிந்தனை வளர்ச்சி காரணமாக தன்னை பக்குவப்படுத்தி, பண்படுத்தி உயர்திணை என உயர்ந்திடும் வழிகொண்டான். அந்தந்த குமுகாயங்கள் தம்மை மையப்படுத்தி வாழ்வியலை மேற்கொண்டபோது இனங்கள் உருவாகின. இவ்வாறே தமிழராகிய நாமும் நமக்கென்று, நம்மை நாம் என அடையாளப்படுத்தும் இன, மொழி, கலாச்சார, பண்பாட்டு, மரபியல் விழுமியங்களோடு தனியரு இனம் என உருவெடுத்தோம்.
இன்று நாம் பேணும், பெருமை பேசும் வழக்கங்களும், வாழ்வாதாரங்களும், உறவுமுறை பேணும் உன்னதங்களும் ஒன்றும் இயற்கை விதிகள் அல்ல ! நேரிய வழியில் நிமிர்ந்திட எண்ணி காலம் காலமாய் நம்மினம் கடைந்தெடுத்திட்ட, நம்மைத்தாங்கும் விழுதுகள் ! பல்வேறு காலகட்டங்களில் அந்நியப்படையெடுப்புக்களும், ஆக்கிரமிப்புக்காலனித்துவங்களும் நம்முடைய இருப்புக்கு சவால்களாகிய போதும், எம்மை நாம் இழந்து விடவில்லை.
இவ்வகயிலே நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இப்போது இருக்கின்றோம். ஆதிக்க சக்திகளின் திட்டமிடப்பட்ட நெருக்குதல்களுக்கிடையிலும், இனச்சுத்திகரிப்பு வலைகளுக்கிடையிலும் பல்லாயிரக்கணக்கான எம் இளைய உறவுகளின் உயிர்களின் மகோன்னத அர்ப்பணிப்பில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவ, அரசியல்,பொருளாதார விடுதலையுடன் , ஆணும் பெண்ணும் சரிசமபங்காளர்களான சமூகவிடுதலையையும் வென்றெடுக்க வேண்டிய பணி நம் அனைவரிடத்திலும் உள்ளது. தாய்வழிச்சமுதாயமான தமிழரிடையே, பெண்ணை பலவீனமான ஒரு போகப்பதுமையாகச் சித்தரிக்கும் ஊடுருவல்களின் உச்சக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியல் அடிமட்ட இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் கழிவாய்ப்பண்டமாகவே பெண்கள் தொடர்ந்தும் இந்தியத்தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகிறார்கள். சமூக, வாழ்வியல் அம்சங்களைப் பின்தள்ளி , அடிமட்ட இச்சைகளுக்குத் தீனி போட்டுப் பணம் சேர்க்கும் பண்பாட்டு விபச்சாரத்தில் பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருவது கண்கூடு. ஒரு பெண்தலைமையின் கீழே இந்நிலை தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது, வெட்கத்துக்குரியது. இருந்தும் பாரத மாதாவின் பலகாலப்பெருமைகளை வெறுமனே பேசிக்காலம் போக்காமல், வீச்சோடு இவற்றை எதிர்த்து நிற்கும் தமிழ்நாட்டின் அந்த ஒரு சில அமைப்புக்களோடும், தரமான படைப்புக்களைத் தரும் திரைத்துறையினரோடும் நாமும் மானசீகமாக இணைகின்றோம்.
எந்தவிதமான சமூகப்பொறுப்பும் அற்று பணம் பொறுக்குவதிலேயே கண்ணாயிருந்து, கலையென்ற போர்வையில் கேவலமான பாடல்வரிகளையும், காட்சிகளையும், படங்களையும் எடுத்துக்குவிக்கும் இத்துறையிலுள்ள அனைவரையும் நாம் கடுமையாக இத்தால் கண்டிக்கின்றோம். ஈனத்தனமான பாடல்வரிகளைக்கொண்ட கல்யாணம் தான் கட்டி, ஜெமினி ஜெமினி, நான் ரெடி நீ போன்ற தாயின் சேலையை விற்றுப் பணம் பண்ணுபவர்களை, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டு ஒதுங்குமாறு கண்டிக்கின்றோம்.
மதிப்புக்குரிய சுபாஷ் சந்திரபோஷ், பகவத் சிங், லக்ஷ்மி பாய் போன்ற மாபெரும் வீரர்களின் உறுதி செறிந்த அர்ப்பணிப்புக்களால் சுதந்திரத்தைப் பெற்றெடுத்த இந்திய மண்ணிலிருந்து , எங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தாற்பரிய, வரலாற்று அறிவு ஏதுமின்றி கும்மாளம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற உங்கள் முதலீடுகளை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் !
Discovery channel இல் வரும் மிருகங்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் வித்தியாசப்படுகின்றோம் என்பதை அறிந்து கொள்ளாத பாய்சிற்கும், அமரிக்ககொடியுடன் இந்திய ஏழைமக்களின் அடிவயிற்றைச் சுரண்டி, கடைநிலை வழியில் காசு பண்ணும் இவ்வெடுப்பிற்கு U/A முத்திரை போட்ட சென்சார் பார்டு (jzpf;iff;FO) விற்கும் எமது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாக மேடைகளில் முழக்கப்படும் இனம் , நாளை கல்லாகிக்கிடந்ததாலே மண்ணாகிப்போனவொரு இனமாகி விடக்கூடாது என்பதை மனதில் இருத்துவோம்.
பல்வேறு சமூகப்பொறுப்புகளில் உள்ள நாம், நம்முடைய மானிட சமூகப்பொறுப்புக்களை உணர்ந்தவர்களாக எமது கையெழுத்துக்கள் மூலம், இவ்வாறான சுயவிமர்சனமற்ற பொறுப்பற்ற பண்பாட்டு விபச்சாரத்தினை இனியும் நம்மிடையே அனுமதியோம் என்று உறுதிபூணுகின்றோம். இப்படியான தரமற்ற வெளியீடுகளை ஐரோப்பிய திரைப்பட- பாடல் விநியோகத்தர்கள், தமிழால் வாழும் தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி நிறுவனங்கள், தமிழ்-இந்திய கடைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் என அனைவரையும், இதுவரை உள்ளதை நீக்கவும், இனிமேல் தவிர்க்கவும் தமிழர் விழுமியங்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பை முன்வைக்கும் நாம் நம்மோடு இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம் !
ஒரு இனத்தின் நேரிய முன்னேற்றத்திற்கு சகல தளங்களிலும் அடிவருடிகளை இனம் காணுதலும், நீக்கி நிமிர்தலும் அவசியமானவை. அதுவே நம்மை சமூக, அரசியல், மொழி, பண்பாட்டுத் தளங்களில் முன்னேற்றி நிற்கும். நம்முடைய இக்கோரிக்கை உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றம் ஏற்படாத பட்சத்தில், யேர்மன் சிறுவர் பாதுகாப்பு அமைப்பினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய உயர்விழுமியங்களை காப்பாற்றத்துடிக்கும் தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுடன் அனைவரும் இதை உறுதியாக உரத்துச்சொல்வோம் ! வெல்வோம் ! !
இணைப்பு : கையெழுத்துப்படிவங்கள்

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com