Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய ஈராக்கிய பெண்கள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>இன்றைய ஈராக்கிய பெண்கள்</span>
<img src='http://idaho.indymedia.org/uploads/oakland_docks_opd_brutality.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39065000/jpg/_39065607_water_ap.jpg' border='0' alt='user posted image'>
(இக் கட்டுரை சென்ற முறை யாழ் களத்தில் எழுதப்பட்ட பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலையின் தொடராக...............இடம் பெறுகிறது.)
அக் கட்டுரை:-
http://www.yarl.com/forum/viewtopic.php?t=403

[size=14]ஈராக் நாட்டை ஆண்ட சதாமின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ஈராக்கில் நல்லதொரு திருப்பம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவும்- பிரிட்டனும் கூறி வருகிறது. ஆனால் அங்கு வாழும் இன்றைய பெண்களின் நிலை என்ன ?

இவற்றை அப் பெண்களின் வார்த்தைகளாலே முன்வைக்க விழைகிறது இக் கட்டுரை.

டொக்டர் எமிலியா கபீபி நரம்பியல் பெண்கள் மருத்துவ மனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இப்படிக் கூறுகிறார்:-
சதாமின் ஆட்சி காலத்தில் தமது மருத்துவ மனை முன் பெரியதொரு பெண்கள் கியுவே நிற்கும். இப்போது அப்படி இல்லை. தற்போது வீடுகளில் இருப்பதற்கும் மாலை வேளைகளில் வீதிகளில் நடமாடுவதற்கும் பெண்கள் மிகவும் அஞ்சுகிறார்கள்.

சதாம் ஆட்சி காலத்தில் எனக்கு ஒரு கார் இருந்தது. தேவையான போது என்னால் எங்கு வேண்டுமானாலும் போகக் கூடியதாகவும் இருந்தது. இப்போது அது சாத்தியமேயில்லை. எனது சேவைக்காகக் கூட அதை பயன் படுத்து முடியாமல் இருக்கிறது என்கிறார்.
<img src='http://tv.oneworld.net/ul/es_Basra_Cemetery_01_1_400_268.jpg' border='0' alt='user posted image'>
சுதாமின் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் பெண்கள்தான் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார் இன்னுமொரு பெண். ஈராக் பெண்கள் இன்று வீடுகளில் அச்சத்துடன் வாழ்வது மட்டுமல்ல சுதத்திரமாக உடைகளை அணியவும் முடியாத நிலையில் இருப்பதாக அவர் தவிக்கிறார்.

ஈராக் வியாபார நிறுவனங்கள் வெறிச்சோடிக் கிடப்பது அவரது பேச்சை ஊர்ஜிதம் செய்கிறது. அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் சொல்கிறார், யுத்தம் நடை பெறுவதற்கு முன் பெரும் திரளான கூட்டம் கடையில் நிரம்பி வழியும். இன்று அப்படியில்லை.

தமது குடும்பத்துடன் வரும் யுவதிகள் கூட கடைக்குள் வரப் பயப்பட்டு காருக்குள்ளேயே இருக்கிறார்கள். யுத்தத்துக்கு முன்னய நிலை இப்போதைய நிலையை விட எவ்வளவோ மேல் என்கிறார்.

அங்கு தற்போது பெரும் பாலான பெண்கள் கடத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுவதால் நாகரீக உடைகளைத் தவிர்த்து பழைமையான பர்தா போன்ற உடைகளை அணிவதே பாதுகாப்பானதென்று கருதி அனைத்து பெண்களும் அவற்றிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஆயிசா எனும் பெண்.

இவர் தனது 8 முதல் 12 வயதுக் குழந்தைகளுக்கு முன்னர் நவ நாகரீக உடைகளை அணிவித்தாலும் இன்று அவர்களுக்கும் பர்தா போன்ற உடைகளை அணிவித்து முகங்கள் தெரியாதபடி முகத்தை துணியால் மறைத்தபடி பள்ளிக்கு செல்லுமாறு தனது குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதாகக் கூறுகிறார்.

சதாமுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதற்காக சதாம் ஆட்சி காலத்தில் வேலை நீக்கமான பல்கி ஜமீல் இப்படிக் கூறுகிறார்: ஒரு பெண் இங்கு வேலை வாய்ப்பொன்றை பெறுவதே மிகக் கடினமானது. தற்போது இங்குள்ள நிறுவனங்கள் கூட ஆண்களுக்கே முதலிடம் தருகின்றன. ஈராக்கைப் பொறுத்தரையில் அதிகமான பெண்கள் விவாகரத்தானவர்களாகவோ, கணவரை அல்லது ஆண் மக்களை இழந்தவர்களாகவோதான் இருக்கிறார்கள். இவர்களது கணவர்கள் மற்றும் ஆண் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படியான பெண்களுக்கு ஈராக்கிய அரசு உதவ வேண்டும்.ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடைமுறையில் இல்லை.

சதாம் ஆட்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவத்தில் கூட 3 பெண்கள் மட்டுமே அங்கம் வகிக்கின்றனர் என்றால் பாருங்களேன் குறைபட்டுக் கொள்ளும்
அவர்
ஈராக்கிய குடும்பங்களிலும் , ஈராக் நாட்டிலும் ஆண் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது.........


அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)