Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள பெண்கள் சந்திக்கும் சித்திரவதைகள்
#1
<span style='font-size:23pt;line-height:100%'>சிங்கள பெண்கள் சந்திக்கும் சித்திரவதைகள்</span>

<img src='http://www.infolanka.com/photo/festivals/f8.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:21pt;line-height:100%'>
குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு எதிரான காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வேற்று இன - சாதி - மதம் சார்ந்த ஒருவருடன் வாழ முற்படும் இலங்கை வாழ் சிங்கள பெண்களும் சித்திரவதைகள் மற்றும் கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படல் ஒன்றும் சிங்கள சமூகத்திலும் வியப்பான ஒரு விடயமாகக் கருத முடியாது.

இஸ்லாமிய சமூகங்களில் தமது குடும்ப கௌரவத்தைக் காப்பதற்காக தமது மகள் அல்லது சகோதரியை கொலை செய்வது போன்ற ஒரு நிலை தற்போதைய சிங்கள கமூகத்தில் இல்லாவிடினும் , இந்நிலை ஆதிகால சிங்கள சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரபல வழக்கறிஞ்ஞரும் நீதிபதியுமான எச்.டீ.புஞ்சிஹேவா குறிப்பிடுகிறார்.

தற்போது அப்படியான கொலைகள் சிங்கள சமூகத்தில் இடம் பெறாவிடினும் ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்து சட்டவிதிகளை இயற்றிய கால கட்டத்தில் இது போன்ற வழக்குகள் அன்றைய நீதிமன்றங்களுக்கு வந்திருக்கின்றன.

ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தன்சாதியை விட்டு மற்றுமோர் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை விரும்பியதற்காக , அப் பெண்ணின் சதோரர்கள் தமது சகோதரியை பகிரங்கமாக கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். இவ்வழக்கு அன்றைய நீதிமன்றத்துக்கு வந்த போது , சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனாலும் பிரதிவாதி தரப்பில், இப்படியான கொலைத் தண்டனை கொடுப்பது தமது குல பழக்க வழக்கங்கங்களில் ஒன்று என்று அவர்களது தரப்பில் வாதமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகங்களில் இப்படியான முறைகள் சமய முறையொன்றாகக் கருதப்பட்டாலும் , சிங்கள சமூகத்தில் இவை குல பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

குல சம்பந்தமான பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்து வருபவரான மொனிக்கா என்பவர் , ஆதிகாலங்களில் இது போன்ற வழக்கங்களை பின்பற்றும்; ஒரு குலமாக சிங்கள ரொடியர் எனப்படுவோர் இருந்து வந்திருப்பதை பழைய சிங்கள இலக்கிய-காவியங்களை படிக்கும் எவரும் காணக் கூடியதாக இருப்பதாக கூறுகிறார். இவை இக்காவியங்களில் இடம் பெற்றிருப்பதே இதற்கு மிக முக்கிய சான்று என்கிறார்.

அவர் மேலும் பௌத்தம் இலங்கையில் பரவுவதற்கு முன்னமே இப்படியான கொடுமைகள் இருந்திருப்பதற்கான ஆவனங்கள் இவற்றை ஆராச்சி செய்யும் போது கிடைத்திருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்.

இப்படியான கொடுமைகள் அண்டைய நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் நாடுகளோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாக இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

அன்று மட்டுமல்ல இன்றும் குலம்-சாதி-சமயம் தொடர்பான பெண்களுக்கு ஏற்படும் சித்திரவதைகள் , தொடர்ந்தும் நடைபெற்றே வருகிறது என்று கூறும் மனித நேய அமைப்பின் நிமல்கா பர்ணாந்து , வசதி வாய்ப்புள்ளவர்கள் பெண்களை வீடுகளை விட்டு வெளியேறாதவாறு அறைகளில் புூட்டி வைக்கிறார்கள் அல்லது அவர்கள் போகுமிடமெல்லாம் குடும்பத்தின் யாராவது அவர்களை பின் தொடர்கிறார்கள் என்கிறார்.

<img src='http://www.infolanka.com/photo/festivals/f14.jpg' border='0' alt='user posted image'>
சில தாய்மார்கள் இப்படியான பெண்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் தமது குல-கோத்திரங்களின் மேல் உள்ள அதிக ஈடுபாடுகள் காரணமாக இப்படியான பெண்களைக் கொடுமைப்படுத்துவதில் இவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை என்கிறார்.

இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வது அல்லது வீட்டை விட்டு ஓடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி வீட்டை விட்டு ஓடும் பலர் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் , கேகாலை நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கொன்றை குறிப்பிடும் பிரபல வழக்கறிஞ்ஞரும் நீதிபதியுமான எச்.டீ.புஞ்சிஹேவா , வேறோர் குலத்தில் வாழ்கைப்பட்ட காரணத்தை முன்வைத்து ஒரு பெண்ணுக்கு உரிய சொத்து-நிலங்களை கொடுக்க முடியாது என்று வாதங்கள் நடந்திருப்பதை குறிப்பிட்டு , இதுபோன்ற சட்டவிதிகள் மற்றும் சரத்துகள் ஆங்கிலேயர் காலத்திலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்.இந்நிலை இன்றும் சில சிங்கள குல மக்களிடம் , தொடர்ந்தும் இருந்து கொண்டு இருப்பதை காணலாம் என்கிறார்.

பெண்கள் கல்வியில் உயரத் தொடங்கிய பின்னர்தான் இந் நிலையில் மாற்றமே காணத் தொடங்கியிருக்கிறது.

ஆனாலும் மத்திய தர வர்க்கத்தினரிடமே இவ் வழக்கங்கள் பெரும்பாலும் வேர் ஊன்றி இருக்கிறது. இவர்கள் தங்களது குடும்ப கௌரவங்கள் குலையக் கூடாது என்பதில் கடினப் போக்குடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இதுவே தமது தகமை எனக் கருதுவதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலை தொடர்வதால் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இப் பிரச்சனையை உருவாக்குபவர்களே அதே பெண்களாக இருப்பதுதான் வியப்புக்கும் , வேதனைக்குமுரியது.
இவ்வகையான பெண்கள் குல-சாதி வழி முறைகளை தலை போகிற ஒரு விடயமாகவே கருதுகிறார்கள். அதற்கான முக்கிய காரணியாகக் காணப்படுவது இப் பெண்கள் தொலை நோக்கற்ற நிலையில் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருப்பதாகவே உள்ளது. இவற்றிற்கு எதிராக குரலெழுப்பும் பொறுப்பு பெண்களையே சாரும் என்கிறார் மொனிக்கா.

மேலும் , அடிப்படை வாத குல-சாதிகள்-குடும்ப மற்றும் மத எண்ணங்கள் சிங்கள சமூகத்தில் இல்லவே இல்லை என்று எவரும் கூற முடியாது. கொலை செய்வது போன்றதொரு நிலை இங்கு இல்லாவிடினும் , தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்வதோ ,தமது குடும்பங்கள் மற்றும் சாதி-சமய-குலத்தை விட்டு ஒதுக்கி வைப்பதோ போன்றவையும் கொலை செய்வதற்கு ஒப்பான விதத்திலான பாதகச் செயல்தான் என்கிறார் மொனிக்கா.</span>

அஜீவன்

Idea ஏற்கனவே வந்த பெண்கள் தொடர்பான கட்டுரைகள்: :- http://www.yarl.com/forum/viewtopic.php?t=442
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)