Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாப்ட்வேரை மேம்படுத்த எந்த தளங்களில் நுழையலாம்?
#1
ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைத்தான் நாம் முதலில் அடைக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துகிறோம். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெப் தளத்தில் நுழைவதுதான் முறை.

http://windowsupdate.Microsoft.com என்ற தளத்தில் நுழைந்தால் விண்டோஸை புதுப்பிக்கலாம். அந்த தளத்தில் உள்ள Product updates என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆபரேடிங் சிஸ்டத்தை முற்றிலும் ஆராய்ந்து எவற்றை மேம்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் தளம் அறிவிக்கும். Recommended updates என அது கூறுகிற எல்லாவற்றையும் மேம்படுத்துவது நல்லது.

விண்டோசிற்குப் பிறகு பெரும்பாலோர் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பு சாப்ட்வேரைத்தான். அதிலுள்ள பிழைகளை நாம் களைய வேண்டும் அல்லவா? எனவே http://office.microsoft.com என்ற வெப்தளத்தில் நுழையுங்கள். product updates என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் சாப்ட்வேரை அலசி, நிறுவ வேண்டிய அப்டேட் சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் வெளிப்படுத்தும். அதன்படி செயல்படுங்கள். அடுத்ததாக நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்புளோர் பிரவுசரில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை அடைக்க வேண்டும். எனவே http://www.microsoft.com/windows/ie/default.asp என்ற முகவரியை பிரவுசரில் கொடுத்து நுழையுங்கள். Downloads என்பதிலுள்ள Critical updates என்ற லிங்கை கிளிக் செய்து ஒட்டு சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஆன்டிவைரஸ் சாப்ட்வேருக்கான தளத்தில் நுழையுங்கள். அப்டேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். எ.கா:அஙஎ என்ற ஆன்டிவைரஸைப் பயன்படுத்துகிறவர்கள் http://www.grisoft.com என்ற தளத்தில் நுழையலாம்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)