Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசிகனுக்காய் மகனான விஜய்....
#1
ரசிகனுக்காய் மகனான விஜய்....

இது படத்தில் அல்ல நிஜத்தில்...இதற்காக விஜயை மனிதாபிமானத்தின் பெயரால் பாராட்டலாம்...வாக்குறுதி காப்பாற்றப்பட்டால் மட்டுமே....!
.......................................
<img src='http://thatstamil.com/images15/cinema/vijay-n2-330.jpg' border='0' alt='user posted image'>

கொல்லப்பட்ட ரசிகர் குடும்பத்துக்கு விஜய் உதவி

தனது ரசிகர்கள் மோதலில் கொலை செய்யப்பட்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கினார்.

தீபாவளியன்று வெளியான விஜய்யின் திருமலை படத்துக்கு காரைக்குடி தியேட்டர் ஒன்றில் போஸ்டர் ஒட்டுவதில் ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது ஜாதிப் பெயரையும் சேர்த்து போஸ்டர் அடிக்க, அதை இன்னொரு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

இதில் நடந்த மோதலில் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் விஜய் காரைக்குடிக்கு வந்தார். சுரேஷின் வீட்டுக்குச் சென்ற விஜய்யை கட்டிப்பிடித்து அவரது தந்தை ஆறுமுகம், தாயார் லட்சுமி ஆகியோர் கதறியழுதனர்.

கணகலங்கிய விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சுரேஷின் படத்துக்கு மாலை அணிவித்தார். பின்னர் ரூ. 50,000 வழங்கிய விஜய், சுரஷைப் போல நானும் உங்கள் மகன்தான். உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வேன் என்று உறுதியளித்த விஜய், பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

விஜய் வந்துள்ளதை அறிந்து அப் பகுதியில் ஏராளமானோர் கூடினர். ஆனால், வழக்கமான தன் உற்சாகத்தை இழந்திருந்த விஜய் அமைதியாய் அவர்களை நோக்கி கும்பிட்டுவிட்டுச் சென்றார்.

Our Thanks to Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
உயிருக்கு விலை ரூ. 50,000.
அதுவும் அவரது ரசிகர்கள் மோதலில்......கொலை செய்யப்பட்டவருக்கு ? ? ?
ம்.....
Reply
#3
ஏதோ.. பத்திரிகை அறிக்கையோடு நின்றுவிடாமல்.. நேரே சென்று உதவினாரே.. அதே போற்றத்தகுந்ததுதானே.. இரசிகர்கள் மோட்டுத்தனமாகச் செய்வதற்கு பாவம் விஜயால என்ன செய்யமுடியும்?
.
Reply
#4
Idea
.
Reply
#5
ஓம். போற்றத்தகுந்ததுதான்.
ஆனால்.....அவர்கள் பல லட்சங்களை ஊதியமாக பெற்றுக்கொள்ளும்போது....இந்தப் பணம் பெரிதல்ல தானே !
ரசிகர்கள் இல்லாவிட்டால் இவர்கள் எங்கே ? ? ?
Reply
#6
அது சரி.. நாட்டு பிரச்சினைகளைக்கூறி இங்கே வசிப்பவர்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள்? அதில் எவ்வளவு வீதத்தை நாட்டுக்காக பயன்படுத்துகிறார்கள்? 1 வீதம் வருமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#7
இதை எல்லாம் அறிய முற்பட்டால். அதிர்ச்சியில் ... நீங்கள் ஓடுவதையே நிறுத்திவிடுவீர்கள்
Reply
#8
உதவுகின்ற மனமே பலகோடிகளிற்கு சமன்
வாய் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உதவிய அவரிற்கு நன்றிகள்
[b] ?
Reply
#9
<img src='http://www.dinakaran.com/daily/2003/Nov/04/photos/vjy.jpg' border='0' alt='user posted image'>

thanks for www.dinakaran.com
[b] ?
Reply
#10
நல்ல விடயம்தான் இருந்தாலும் "ஜாதி ஜாதி என்று ஏண்டா அடிச்சுட்டு சாகிறியள்" என்று விஜய் படங்களில் சொல்வதை ஒருவரும் கேட்கிறார்களில்லையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)