Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்
#1
<img src='http://www.trinetratours.com/gifs/people-of-sri-lanka.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்.</span>

நவசமசமாச கட்சியின் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்களுடனான ஒரு பேட்டி

இனவாதத்தை பேசுவதாக சொல்லப்பட்ட LTTE முன் வைத்துள்ள கோரிக்கைகள் பற்றி நாம் பேச வேண்டிய சரியான தருணம் இதுதான்.விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் முன் வைத்துள்ளது இனவாதக் கருத்தல்ல.விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற தாயக கோட்பாட்டை தவிர்த்து வேறெதையும் யோசிக்காதவர்கள்.அவர்களே நல்லதொரு தருணத்தை உருவாக்கித் தந்துள்ள இந் நேரத்தில், தேன் கூட்டுக்கு கல்லைறிந்தது போல சந்திரிகாவை ஒரு சிலர் முட்டாளாக்கி ஆட வைத்து விட்டார்கள்.

இதையெல்லாம் விடுத்து, சமாதன முன்னெடுப்புகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

சந்திரிகா , சமாதான பேச்சுகளை நடத்துங்கள் என்று ரணிலுக்கு சொல்லி விட்டு, அரசின் பலம் கொண்ட அமைச்சுகளையும் இராணுவத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டிருப்பது, அகப்பையை (கரண்டி) கையில் வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டு சாப்பிடுங்கள் என்பது போல் இருக்கிறது.
<img src='http://www.yarl.com/forum/files/ajee.gif' border='0' alt='user posted image'>
[quote]இதே போன்ற ஒரு வார்த்தையை அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், ரணில், சந்திரிகாவை முதன் முறை சந்தித்து விட்டு வெளியே வரும் போது சொன்னார்.
<span style='color:brown'>\"யானையை என்னிடம் தந்துவிட்டு,யானையை அடக்கும் ஆயுதத்தை நீ வைத்துக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? யானையையும் நீயே வைத்துக் கொள்\"
நாட்டின் இரானுவத்தை கையில் வைத்திருப்பவர்தான் சமாதானத்தைப் பற்றி பேச முடியும்.அதை மற்றுமொருவரால் செய்ய முடியாது.

பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, தமிழ் பகுதிகளின் இரானுவத்தைக் கையில் வைத்திருக்கும் திரு.பிரபாகரன்தான் பேச்சு வார்த்தைக்கு வந்திருக்கிறார்.அதுபோல நமது இரானுவத்தை வைத்திருப்பவர்தான் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும்.

ஆனால் சந்திரிகா இதுவரை கொண்டு சென்ற சமாதான முன்னெடுப்புகளை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருபக்கம் , கண்காணிப்புக் குழுவிலுள்ளோரை வெளியேற்றுகிறார்.இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகள், முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்,அவரது கட்சியோடு சேர்ந்து கிழித்து எறிய வேண்டுமென்று கத்துகிறார். இப்படியிருக்கம் போது , இவரால் எப்படி சமாதான முன்னைடுப்புகளை நடத்த முடியும்?

இதைப் புரிந்து கொண்டு ரணில் கொண்டு செல்லும் சமாதான முன்னெடுப்புகள் சரியானதென்று ரணிலுக்கு ஒத்துழைத்தாலே கபினட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இவற்றைத் தீர்க்க இன்னுமொரு தேர்தல் தேவையற்றது.சமாதானத்துக்கு ஆதரவானவர்கள்தான் இன்று பாராளுமன்றத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வருமானால் ரணிலுக்கு 1 அல்லது 2 ஆசனங்கள் அதிகமாகக் கிடைக்கலாம்.

இங்கே உள்ள பயங்கரம் இதுவல்ல. இத் தருணத்தைப் பயன்படுத்தி சில சுயநல இனவாதிகள் பாராளுமன்றத்துக்குள் வருவதற்கு தேர்தல் ஒரு வாய்ப்பாகிவிடும் என்பதே.

அப்படி ஒரு நிலை வந்தால், நாடு தாங்காது.

அஜீவன்
</span>

<span style='font-size:16pt;line-height:100%'>சேது கொண்டு வந்த படத்தைப் பார்த்த போது ,இங்கே இணைக்கத் தோன்றியது.நன்றி</span>
Reply
#2
என்ன இப்பொது மட்டும் சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவாதிகள் இல்லையா? ரணிலுக்கு இரண்டு மூன்று ஆசனங்கள் அதிகமாக் கிடைத்தால் அவரும் ஆச்சியின் வழியைத் தான் பின்பற்றுவார். ஆச்சி ஜேவீபீ அணைக்கமட்டும் தேர்தலைப் பற்றி மூச்சு விட மாட்டா.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#3
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->என்ன இப்பொது மட்டும் சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவாதிகள் இல்லையா?  ரணிலுக்கு இரண்டு மூன்று ஆசனங்கள் அதிகமாக் கிடைத்தால் அவரும் ஆச்சியின் வழியைத்  தான் பின்பற்றுவார். ஆச்சி ஜேவீபீ அணைக்கமட்டும் தேர்தலைப் பற்றி மூச்சு விட மாட்டா.  

அன்புடன்
சீலன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மைதான். ஆனால் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்கள் சிகளஉறுமய, JVP போன்றவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வெளியே இருந்து அவர்கள் போடும் கத்தல் பிரயோசனமற்றது. ஆனால் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வந்து விட்டால்,எல்லோரையும் குழப்புவார்கள் என்பதே...........அவரது கருத்தாக இருக்கிறது.
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->செய்தி தினமலர்

.  இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு

கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதையே வேறொரு கம்யுனிச சிங்கள அரசியல்வாதி(பெயர் ஞாபகம் இல்லை) ரணில் , சமாதன பேச்சு வார்த்தையை நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன போது , ரணிலிடம் சொன்னார்.

பண்டாவால் முடியாதது.
DSசால் முடியாதது.
டட்லியால் முடியாதது.
சிறிமாவால் முடியாதது.
JRரால் முடியாதது.
பிரேமதாசவால் முடியாதது.
சந்திரிகாவால் முடியாதது.

[highlight=red:c372272635]எப்படி ரணில், உன்னால் மட்டும் முடியும்?[/highlight:c372272635]

நீங்கள் பேச்சுக்கு போனால் அவர்கள் முறிப்பதும்,
அவர்கள் பேச்சுக்கு போனால் நீங்கள் முறிப்பதும்,
இதுதானே நீங்கள் எல்லோரும் இதுவரை செய்தது.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் ஒருவேளை முடியலாம்.
என்றார்.

அதுதான் இதுபோல கிடக்கு............பார்க்கலாம்.
Reply
#4
உண்மைதான் இவர்களிடம் பேரினவாத எண்ணமும் அகம்பாவமும் இருக்கும் வரை தமிழர் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவருவது அத்தனை சுலபமல்ல. அஜீவன் அ வர்களே இப்படி எண்ணிப் பார்ப்போமா? இனவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக எமது பக்த்திற்கு பலங்கள் கூடும் என நான் நினைக்கின்றேன். இவர்கள் என்ன தான் காட்டுக்கூச்சல் கத்தி மன்று வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்ததை சீர்ப்படுத்த முடியாது. அதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தேவை. இவர்கள் மன்றம் நுழைந்தால் வெளிநாடுகள் உதவ முன் வருவார்களா? மாட்டார்கள். ஏனேனில் இவர்கள் இப்போது சமாதானத்திற்கு விரோதமாக ஆடும் ஆட்டங்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டுதானே உள்ளார்கள். ஆச்சியின் தற்போதைய ஆட்டத்தினால் பொருளாதாரம் பின் நோக்கிப் போகும் வேகம் புரிகிறதல்லவா? எமக்கு அதுவும் ஒரு பலமாக இருக்கும் அல்லவா?

அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
நேற்று ரணில.. இண்டைக்கு ஆச்சிபோலைகிடக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
விரோதங்களை வளர்ப்பது இச்சமயத்தில் உசிதமல்ல.

அவர்களது , மூதாதையர் செய்த தவறுகள் அவர்களுக்கு புரியாமலில்லை.குடும்பத்தை பகிரங்கமாக விமர்சிக்கவும் , தமது கதிரைகளைத் துறக்கவுமே யோசிக்கிறார்கள்.

சந்திரிகா, தாம் செய்ததை, தவறென்று உணர்ந்த போதுதான்,கதையை மாற்றி , கூட்டு தேசிய அரசு பற்றி பேச முயல்வதாகச் சொல்லத் தலைப்பட்டார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம் சந்திரிகாவுக்கு இல்லை என்றும்,சந்திரிகாவின் கட்சி ,JVP யுடன் கூட்டு ஒன்றை அமைப்பதான நோக்க பேச்சுகள் பற்றிய ருபவாகினி செய்திகள், கட்சி பேச்சுகளே என்றும் சந்திரிகாவின் ஆலோசகர், மனோ தித்தவல்ல தற்போது கூறுகிறார்.

இந் நிலையில் , ரணில் பேச மறுத்தால் அதுவே சந்திரிகாவுக்கு வாய்ப்பாகி விடும் என்ற கருத்தில்,ரணில் இணைந்து செயல் ஆற்றுவது பற்றிய புரிந்துணர்வை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதே இப்போது நல்லது என்ற நிலையைக் கொண்டுள்ளார்.

தவிரவும் பாராளுமன்றத்தை தடை செய்தது தவறு என்றும் ,அதை பிரதமருடன் கலங்தாலோசித்தே சந்திரிக்கா செய்திருக்க வேண்டும். தடை தொடர்ந்தால் அதை கண்டு கொள்ளாமல் பாராளுமன்றத்தைக் கூட்டுவேன் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இதேவேளை புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் அவர்களின் வருகை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஆனாலும் தற்போதைய நிலவரங்கள் பற்றி விடுதலைப்புலிகள் கருத்துக் கூறுவதை தவிர்த்து வருகின்றனர்.

ரணில் பகுதி , பறிக்கப்பட்ட அமைச்சுகளை மீளப் பெறுவதிலே முக்கிய குறியாக தற்போது இருக்கிறது.அதனால்தான் இவ் அமைச்சுகள் தம்மிடம் வராத வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாதென்று கூறுகிறது.

தவிரவும் 500 லட்சம் 600 லட்சம் தருவதாக சந்திரிகாவின் கட்சியினர், ஏனைய பா.உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்க முயன்றதை லஞ்ச ஒழிப்புக்கு முறையீடு செய்ய முயல்கிறது ரணில் பகுதி.

நோர்வே தரப்பும், தமது நிலைகளை அயல் நாடான இந்தியாவுக்கு விளக்கி மறைமுகமாக , இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க முயல்கிறது.

இந்நிலையில்தான் சந்திரிகா, தான் கையெழுத்திடாத சமாதான உடன்படிக்கை செல்லாது என்று கூறிவந்ததை விடுத்து, சமாதானப் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்ல தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான பேச்சை தொடங்கியுள்ளார்.

இங்கே மறைமுக பின் அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு அதிகரித்து வருவதையே இவை காட்டுகிறது.
Reply
#7
தேசிய அரசாங்கத்தில் இடம் பெறப் போவது யார் யார்? இதில் தமிழ்க்கட்சிகளின் பங்கென்ன. இவர்களால் அதற்குள் இருந்து கொண்டு எமது பிரச்சனைகளை தீர்க்கும் தைரியம் வருமா? நிச்சயமாய் விரோதங்கள் வளர்க்கவில்லை. ஆனால் ஆச்சியின் வரலாறு பற்றி புரியாமல் பேசுகின்றீர்கள். அவர் எப்போழுதும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணியதேயில்லை. பிரச்சனைகள் முடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற்று வந்த போதே அதைச் செய்திருக்கலாம். காலம் கடந்த ஞானோதயங்கள் அவர்களுக்கு உதிப்பது, இன்றைய அரசியல் நிலைமையே காரணம். மற்றது வெளிநாடுகளின் அழுத்தங்களும். மதி, ஆச்சி என்ன அண்ணா என்ன பேரினம் யார் வந்தாலும் இது தான் என் பதில். நிச்சயமாய் அயல் நாடு வி.புலிகள் கொடுத்த தீர்வுத்திட்டத்தினை அங்கிகரீக்க விட மாட்டார்கள். பேரினவாதம் சரி என்று சொன்னாம் கூட. இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை ஒரளவு அழுத்தங்களை கொடுக்கலாம். ஒன்று பட்டுச் செயல் படுவார்களா?

அன்புடன்
சீலன்
seelan
Reply
#8
சிங்கள கட்சிகள் எப்போதுமே தமது வாக்கு வங்கிகளை நிரப்ப போட்ட ஒரு முத்தாப்புதான் சிங்கள இனவாதமும்,பெளத்தவாதமும்.

S.W.R.D.பண்டாரநாயக்க( சந்திரிகாவின் தந்தை) தொடக்கி வைத்து விட்டு , ஆட்சிக்கு வந்த பின்னர் அதை மாற்றியமைக்க முற்பட்டார். ஆனால் அவர் ஒரு புத்த பிக்குவால் கொலை செய்யப்பட்டார். பலர் பண்டாரநாயக்க அரசியல் காரணமாக கொலை செய்யப் பட்டதாக எண்ணுகின்றனர்.ஆனால் பண்டாரநாயக்கவுக்கும் , சோமாராமாவுக்கும் (பண்டாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிக்கு) இடையேயான வியாபார - அரசியல் தகராரே அக் கொலைக்கு காரணம் என்பது பலர் அறியாத உண்மை.

உண்மைகளை மறைத்து ஒருவரை தியாகியாக்க ஒரு சிலர் ஆடிய திரைமறைவு நாடகம் , தொடர் இனவாதமாகியது.

இது பின்னர் தொடர் கதையானது யாவரும் அறிந்ததே.

தமிழ் கட்சிகள் அரசுக்கு கை உயர்த்த தேவைப்படும் நிலையிலேயே இருக்கிறார்கள்.இவர்கள் அரச கொடுப்பனவுகளை நம்பி வாழும் , பேட்டிக் கதாநாயகர்கள்.

செல்வநாயகம், ஜீ.ஜீ , திருச்செல்வம் , அமிர்தலிங்கம் ,தொண்டமான் போன்றோருக்கு இருந்த வன்மையும், உலக அரங்கின் அங்கிகாரமும் தற்போதைய தமிழ் கட்சியினருக்கு இல்லையென்பதை தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆகவேதான் உலகம் விடுதலைப்புலிகளுடன் பேசுகிறது.

பேச வேண்டியவர்களுக்கு , யாரோடு பேச வேண்டும் என்று தெரியும். இல்லாவிடில் இவர்கள் வன்னிக்கு போக வேண்டிய தேவையில்லை.

தமிழ் பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கொலைகள்,சதிகள்,கலவரங்கள்,.......................இவை கூட பலருக்கு பீதியை உருவாக்கியது.

இதனால்தான் பாதுகாப்பும், சட்டமும் விடுதலைப் புலிகள் வசமானால் பலரது நிலை மோசமாகிவிடும் என்ற கருத்தை டக்ளஸ் போன்றோர் கூறினார்கள். இக் கருத்து சிங்கள தரப்புகளை யோசிக்க வைத்தது.

இதன் பின்னரே சில நடவடிக்கைகள் குறைந்தன.எனவேதான் சந்திரிகா விடுதலைப்புலிகள் மாறியுள்ளனர் என்று கூறுமளவுக்கு வந்தார்.

JVP எப்போதுமே வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரானவர்கள். கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக இருந்தது போலவே நோர்வே தரப்பினருக்கு எதிராக சந்திரிகாவோடு கைகோர்க்க முடிவெடுத்தனர்.
இவர்களது முன்னைய தேசியவாதமும்(விஜயவீரா காலத்து) தற்போதைய தேசியவாதமும் வித்தியாசமான போர்மூலாவைக் கொண்டது.

JVPயையும், சிகள உருமயவையும் வளர விடாமல் தடுப்பதும் ,சந்திரிகாவை திசை திரும்ப விடாது சிறிது காலத்துக்கு குழப்புவதையும் ரணில் பகுதியினர் தற்போது செய்யத் தொடங்கியுள்ளனர்.எனவேதான் எந்தவொரு கோரிக்கையையும் முன் வைக்காமல் ரணில் மீண்டும் சந்திரிகாவை சந்தித்தார்.

இந்த நாடகம் சந்திரிகாவின் அதிபர் பதவி இழக்கும் வரை தொடருமா?இல்லையா என்பது கேள்விக் குறியே?

இதை பயன்படுத்தி சில சிங்கள இனவாதக் கட்சிகள் ஆதாயம் தேட முயல்கின்றனர்.ஆகவேதான் ஒரு தேர்தல் வருவதை ரணிலும், சந்திரிகாவும் தற்போது விரும்பவில்லை.

வெளி நாடுகளின் தாக்கங்கள்தான் நிழல் ஆட்சிக்கு பின்னணியில் நிற்கிறது என்பதை வல்லுணர்கள் தெரிந்தே வைத்திருக்கின்றனர்.

கையேந்தி நிற்போர் , எதிர்த்தால் கிடைப்பதும், கிடைக்காமல் போகலாம். இதுவே பிரச்சனை.
ஆனால் உடனடி யுத்தமொன்று வர வாய்ப்பில்லை.

புலம் பெயர்ந்து அகதிகளாக விண்ணப்பித்துள்ள பலருக்கு ஒரு ஆறுதல்.
_____________________________________________________________________________________அஜீவன்
Reply
#9
நேற்றுவரை வன்னிக்குள்ளை அடைபட்டுக்கிடக்காதவனெல்லாம் துரோகி.. வெளிநாடு போனவனெல்லாம் நிர்வாணி.. வெட்டுவன் கொத்துவன்.. சுடுவன் புதைப்பன்..
இண்டைக்கு ஒன்று சேர்வார்களாகேள்வி வருகிறதே.. அது எப்படி..?
:!: :?: Idea
Truth 'll prevail
Reply
#10
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->நேற்றுவரை வன்னிக்குள்ளை அடைபட்டுக்கிடக்காதவனெல்லாம் துரோகி.. வெளிநாடு போனவனெல்லாம் நிர்வாணி.. வெட்டுவன் கொத்துவன்.. சுடுவன் புதைப்பன்..  
இண்டைக்கு ஒன்று சேர்வார்களாகேள்வி வருகிறதே.. அது எப்படி..?
:!:  :?:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்

_____________________________________________________________________________________அஜீவன்
Reply
#11
ஆட்டுக்கு ஓநாயழுகின்ற கதைதான் மதி. எல்லோரையும் ஒரே தட்டில் நான் வைத்துப் பேசவில்லை. திரும்பத்திரும்ப எழுதியுள்ளேன். ஆதரவாளர்களை சேர்க்க பொய் சொல்லாதீhகள். நாம் என்ன சிங்கள பேரினவாதிகளுக்கா தேர்தலில் வாக்குக் கொடுத்தோம். இவர்கள் பொய் பேச்சுக்களைக் கேட்டுத் தானே புள்ளியிட்டு பாராளுமன்றுக்கு அனுப்பினோம். அவர்கள் தமது சுயநலத்தினால் அவர்களின் தலையில் மட்டுமல்ல முழு தமிழரின் தலையிலும் மண்ணள்ளி போட்டு விட்டு சதிராடிக் கொண்டு நிற்கின்றார்கள். அவர்கள் ஒன்று சோந்து நின்று பேரினத்திற்கு அழுத்தம் கொடுத்தாலே போதும். எமது பிரச்சனைகளில் பாதி தீர்ந்து விடும். அன்று தமிழ் தலைவர்களின் சொல்லை நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட இன்று கூத்தணியை ஓரம் கட்டி விட்டார்கள் அவர்களுடைய தளும்பல் நிலைகளால். ஜேவீப்பியையும் சிங்கள உருமையையும் வளர விடுவதில் தமிழருக்கும் அதிகமாக பாதிப்படையப் போகின்றவர்கள். இனவாதிகளும் அப்பாவி சிங்கள மக்களும் தான்.

அப்பா(எஸ்.டபிள்யு.ஆர்.டீ தமிழழை அழிக்க நினைத்தார்.
அம்மாக் கிழவி தமிழனின் கல்வியை அழிக்க நினைத்தார்.
ஆச்சி தமிழனையே அழிக்க நினைத்து ஆட்டம் போடுகின்றார். யுத்தம் வராதென்பது நிச்சயம். ஒன்று நிதி நிலைமை சீராக இருக்கவேண்டும். அல்லது இராணுவம் பலமாக இருக்க வேண்டும். இன்று இரண்டும் அங்கில்லை. அது ஒரு ஆறுதல். அதென்ன அஜீவன் அப்படிச் சொல்லி விட்டிர்கள். தெரிந்த அறிந்தவர்களைக கேட்கும் போது தமிழீழம் தான் என்று சொல்லிக் கொண்டல்லவா இருக்கின்றார்கள். ஏன் வதிவிடம் கிடைக்காது என்று எண்ணிக் கொண்டா சொல்கின்றார்கள். பாவம் அவர்களை வரவிடுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#12
சீலன் ஐயா நீங்க்ள் எழுதிய பதில்களை வைத்துத்தான் நான் பதில் எழுதுகிறேன். நீங்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் ஒருமுறை படித்தால் நான் எழுதிய கருத்தின் உண்மைத்தன்மை புரியும். தூற்றுவதும் போற்றுவதும் உங்கள் உரிமை. ஆனால் வன்னியில் இருக்காமல் வெளிக்கிட்ட அத்தனைபேரையும் தூற்றி எழுதியதை மீண்டும்போய் வாசியுங்கள். சகல வசதியுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை ஆட்டுப்பட்டிக்குள் அடைத்துவத்திருப்பது உங்களுக்கு எவ்வளவு வேண்டப்பட்டதாகத் தெரிந்ததோ அதேயளவு அவர்களுக்கு அவர்கள் சுதந்திர வாழ்க்கை அவசியமாகப் பட்டிருக்கலாம். வெளியேறியுமிருக்கலாம். உங்களுக்கு எவரையும் தூற்றும் உரிமை கிடையாது. எல்லோரும் தமிழர்களே. காலஓட்டத்தில் முன்னேறியவர்களை 50 வருடங்கள் பின்னுக்கு கொண்டுசெல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அதற்காக துரொகிப்பட்டக்கொடுக்க நீங்கள் யார். நிர்வாணிப்பட்டம் கொடுக்க நீங்கள் யார். அவரவர் வசதிக்கேற்ப அவரவர் தங்களது நிலையை தாங்கள் நிர்ணயித்தது தவறா.? இவ்வளவு தூற்றியபோது உங்கள் மண்டையை என்ன காலுக்கிடையில் வைத்திருந்தீர்களா.
நன்றி வணக்கம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
ஆமாம் குட்டி அடக்கி வைத்திருந்தவர்களை எல்லாம் தெற்கில் சுதந்திரமாய் வாழ விட்டது பேரினத்தின் சாணக்கியம். தெற்கில் பொட்டு இட்டுக் கொண்டு ஒரு பெண்ணால் அன்று சுதந்திரமாய் வெளியே செல்ல முடிந்ததா? சுதந்திரம் மின்சாரமும், ரயிலும் தான் என்னும் உங்களைப் போனறவர்களுடன் பேசுவதில் லாபமில்லை. ரயிலில் வந்திருப்பீர்கள் யாழிலிருந்து வவனியா வரும் வரை தான் தமிழனாய் வந்திருப்பீர்கள் அதன் பின் கூனிக் குனிந்து தான் வந்துள்ளீர்கள். இதுதான் சுதந்திரமா? அவர்கள் சுதந்திர வாழ்வுக்கல்ல சோதரனே சொகுசு வாழ்விற்காக வந்தவர்கள். தெற்கில் மட்டும் என்ன லொட்ஜூகளிலும் சிங்களவனின் வீடுகளிலும் அடைந்து வாழாமல் என்ன சகல சுதந்திரங்களுடனுமா வாழ்ந்தீர்கள். பர தேமழா, தோசை வடை என்றும் ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கு தொழிலில் பதவியுயர்வும், மெத்தபடித்தவன் தமிழன் என்ற காரணத்தால் அடிமைச் சேவகமும் பண்ண அடக்கி வைத்தவர்களைப் பற்றி புரியாமல் பேசுகின்றீர்கள். கிணற்றுத தவளையாய் குடாநாட்டில் வாழ்ந்த படியால் அப்படி எழுதுகின்றீர்கள். ஆனால் என் அனுபவம் பேசுகின்றது. நிச்சயமாய் வன்னியில் வசதி குறைவாக இருந்தாலும் அவர்கள் ஆட்டுப் பட்டியில் அடைந்திருந்தாலும் அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாய் வாழ்ந்தார்கள். பேரினத்தின் தடைகளினால் அவர்கள் துன்பப் பட்டார்களே ஒழிய வேறு காரணமில்லை. நீங்கள் தான் உங்கள் களிமண் மண்டையை காலுககடியில் அல்ல பேரினச் சேற்றுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு எழுதுகின்றீர்கள். தங்கக் கூண்டில் வாழ்ந்தாலும் கிளிக்கு அது சிறைக்கூடம் தான். சிங்களவனின் ஒரு சில சலுகைகளுக்காக அவமானத்துடன் வாழ்ந்த உங்களைப் போல் எம்மால் வாழ முடியாது. மானம் ரோசமுள்ள தமிழன் வாழவும் மாட்டான். தன் மண்ணை விட்டு ஓடியிருக்கவும் மாட்டான். ஓடினாலும் பரவாயில்லை தன் இனத்தை, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வாழ்ந்திருக்க மாட்டான் உங்களைப் போல.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#14
சீலன் நீங்கள் சொல்லும் சாட்டுக்கள் அத்தனையும் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சந்திகளில் சிகரட்டுக்கும் வெத்திலைக்கும் யாரிடம் தண்டலாம் என பார்த்துக்கொண்டிருந்தவர்கள்கட்டிய புரளி.. உயர் பதவியில் தமிழர்கள்தான் இருந்தார்கள் சிங்களவர்களல்ல.. பலமுறை பல சிங்கள இடங்களுக்கும் போய்வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சொல்லு சிங்களம் தெரியாது.. ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி கேட்டுத்தான் பிரயாணம் செய்தேன்.. யாரும் எவரும் சிங்களத்தைப்பற்றியோ தமிழன் என்ற வேறுபாட்டையோ காட்டிப் பார்க்கவில்லை.. நான் அப்படி எதையும் காணவில்லை.. மானம் ரொசம்தான் குடாநாட்டில் யாழ்ப்பாணத்தில் சிங்களவன் சிங்களத்தில் சொல்லுவதற்கு சிங்களத்தில் தமிழன் பதில்கொடுப்பதிலிருந்தும் சிங்களக் கட்டளைகளுக்குப் படிந்து தமிழன் சொல்வதைச் செய்வதிலிருந்தும் தெரிகிறதே.. யாருக்கும் உங்கள் கதைகளை சொல்லுங்கள் எனக்கு வேண்டாம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
எமக்கு சந்திகளில் நின்று பழக்மும் இல்லை. இன்றுவரை சிகரட்டோ வெற்றிலையோ போட்டுப் பழக்கமும் இல்லை. பாதியில் படிப்பை விட்டிருந்தால் இங்கு வந்து தெருத்தான் கூட்டிக் கொண்டிருப்பேன். என் பெற்றோர்கள் அப்படி என்னை விடவில்லை. கல்லடிக்கு என்னை பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கே சந்திகளில் நின்று செய்தவைகளை எம் மீது போட்டுச் சமாளிக்க வேண்டாம். ஒருநாளோ இரண்டு நாளோ சிங்களப்பகுதிக்கு வந்திருந்து விட்டு சிங்களவர்களைப் பற்றி தெரிந்தது போல் நீங்கள் தான் புரளிகளைக் எழுதிக் கொண்டிருப்பீர்கள். எனக்கு சிங்களம் எழுதவும் தெரியும் படிக்கவும் தெரியும் பேசவும் தெரியும் அப்படி இருந்தும் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புற்றவன். இன்று நடப்பைவைகளுக்கு உங்கள் வெள்ளை வேட்டி அரசியல் உறவினரே பொறுப்பு அவர்களிடம் போய்த் தான் கேட்க வேண்டும். அவன் வெறியன் முட்டாள் அதனால் அவனுக்கு மற்றவர்களின் மொழிகளைத தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர் அப்படியல்ல. சிங்களவர்களின் கட்டளைக்கு பணிந்து வாழ்ந்தது ஐம்பது வருடங்களுக்கு மேலாக. நான் என் காலுக்கிடையில் தான் என் தலையை என் காலுக்கிடையில் தான் வைத்து எழுதுகிறேன். ஆனால் நீங்கள் வேறு யாருடைய காலுக்கிடையில் வைத்துக் கொண்டு எழுதுவது போல உள்ளது. உங்களைப் போல சகல வசதிகளுடன் வாழ்ந்தவர்கள் தான் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு திரிவது. பேரினத்தின் காலை நக்கியாவது உங்களைப் போன்றவர்கள் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். எமக்கு அதற்கு முடியாது. சுதந்திரமாய் காற்றைச் சுவாசிக்கவே விரும்புகிறோம். அதுவும் எனது இனத்தின் தலைமையிலே. அந்நியனிடம் மண்டியிட்டு வாழும் சுதந்திரம் எனக்கு வேண்டாம். உங்கள் கற்பனைக் கதைகளை உங்களைப் போன்ற மண்மானம் மறந்த நன்பர்களிடம் அவிழ்த்து விடுங்கள். இங்கு செல்லாது.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#16
அப்படி நானும் சந்தியிகளில் நின்று கல்லடிகளைப் பிராக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் என் காதையும் பிடித்து என் அம்மாவோ அப்பாவோ ஐரோப்பியவிற்கு அனுப்பியிருப்பார்களோ என்னவோ?

அன்புடன்
சீலன்
seelan
Reply
#17
மதி போராட்டத்தின் மூலமே அறியாத உங்களைப் போன்றவர்களுடன் பேசுவது வீண். எதற்காக தமிழன் ஆயுதம் ஏந்தினான்? சிங்களம் இன்று நேற்றல்ல என்று பிரித்தானியனிடமிருந்து சுதந்திரத்ததை வாங்கிக் கொண்டானோ அன்றே தமிழனின் அவல வாழ்விற்கும் அத்திவாரமிட்டு விட்டான். அனைத்திலும் கல்வியிலோ வேலை வாய்ப்பினிலோ வாழ்விடத்தினிலோ அனைத்தினிலும் பாராபட்சம் பாகு பாடு காட்டப்பட்;டதனால் தான் இந்தப் போராட்டமும் அழிவுகளும். அவர்கள் போராடுவதும் போராடிக் கொண்டிருப்பதும் இவைகளை அகற்;றி ஒரு சமத்துவமான நிம்மதியான வாழ்வை தம்மை நம்பியவர்களுக்கு கொடுப்பதற்காகவே. அதை விடுத்து அழுக்குப்படாமல் வெள்ளையும் சொள்ளையுமாய் பாரளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கிக் கொண்டு தமது வங்கிக் கணக்குகளுக்கு புனர்வாழ்வு அளிக்கவல்ல. படித்தவனோ படிக்காதவனோ, எழையோ, பணக்காரனோ அத்தனை தமிழரும் முழு இலங்கையிலேயும் பேரினத்தின் பாராபட்சத்தால், பாகுபாடால், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் தாம். உலகுக்கே அது புரியும் உமக்கு அது புரியாமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல. ஏனென்பது உமக்கே தெரியும். நீங்கள் குடாநாட்டினில் கிணற்றுத் தவளையாயிருந்து ஒரிரு நாட்களுக்கு கொழும்பிற்கு உல்லாசபயணம் வந்து போனவர்களுக்கு அது புரியாமலிருக்கலாம். ஆயினும் எனக்கு அப்படியல்ல. நன்றாக நிறைய அனுபவமிருக்கின்றது. அந்த நாடே வேண்டாம் என்று வெளியேறியதன் காரணமும் அது தான். அவ்வளவு அசிங்கங்களை அவலங்களை அனுபவித்து விட்டதனால். நிச்சயமாய் போரட்டமோ வி.புலிகளோ இல்லாமலிருந்தால் இன்று முழுதும் பௌத்த சிங்கள நாடாகியிருக்கும். காங்கேசன் துறையிலிருந்து மாத்தரை வரை போராட்டம் ஒரளவாவது இவைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. அல்லது தமிழர் அணைவரும் சிங்களவனின் கழிப்பிடங்களைக் கழுவிக் கொண்டு தான் இருந்திருக் வேண்டும். எங்கோ ஆயுத பாதுகாப்புடன் வல்லரசுக்களின் உதவியுடன் இருந்து கொண்டு தமிழனை அடக்கி ஆண்டு கொண்டிருப்பதைத் தவிர. அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஆயினும் உங்களைப் போன்று கைவிட்டு எண்ணக் கூடிய சிலரால் தான் இன்னமும் ஈழத்தில் வாழும் தமிழருக்கு ஆபத்து. இரண்டெழுத்து அதிகம் படித்துவிட்டேன் அதுவும் அந்நிய நாட்டில் சொகுசுடன் பாதுகாப்புடன் வாழ்கின்றேன் என்ற மமதையில் இனத்தையும் போராட்டத்தையும் அந்நியனுக்கு விலை பேசி உங்கள் பேச்சுக்களினால் விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களை அறியமலே. ஏனெனில் வயிற்றெறிச்சல். அட நாம் படித்து வி;ட்டு பகட்டாய் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் போது படிப்பறிவில்லாத(உங்கள் கருத்துப்படி) சின்னப் பெடியள் இத்தனை பெரியதொரு காரியத்தைச் சாதித்து விட்டார்களே என்ற குரோத உணர்வு. இது இன்றும் அங்கு (ஈழத்தில்) சில பெரிய அரச கந்தோர் வெள்ளைக் காட்சட்டைக்காரரிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு மேலும் எழுதலாம். ஆனால் அது நாமே எம் முகத்தை அசிங்கப்படுத்திக் கொள்ளும் செயலாகி விடும். கொழும்பின் அவலவாழ்க்கை வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் அங்கு வாழ்ந்து அசிங்கப்பட்ட நிலைமைகளை. தமது பொருளாதாரபலத்திற்காகவே தமிழனை தெற்கில் இன்று இப்படியாவது வாழ விடுகின்றார்கள் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் ஜேவீப்பியோ சிங்கள உறுமையோ எருமையோ உறுமாதிருக்கும் வரை தான் அங்கும் உங்கள் சுதந்திரம். விரைவில் உணர்வீர்கள். மண்ணின் விடுதலையே, சுதந்திரமே ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அதுவே உறுதியான சுதந்திரமும் ஆகும்.

இன்று காலை சுப்பிரபாதம் கேட்கும் போது இந்த வரிகள் என் காதுகளில் வீழ்ந்தது படித்துப் பாருங்கள் :

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டிற்கு தோரணமானது வாழை
நீயும்; நாட்டில் உன்னை அழித்தவன் காலை நக்கினால் நீ ஒரு கோழை
சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை.....
கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை கும்பிட்டு வாய் பொத்தி நின்றாய்
அவன் சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அல்லோ நீ சாக்கடை..... போல தின்றாய்.
(நன்றி : இருப்பாய் தமிழா நெருப்பாய் இசைவட்டு , சாந்தி செல்லப்பாவின் வெண்கலக் குரலில்)

எத்தனை உண்மையான வசனங்கள். சத்தியமாக ஒருவரையும் காயப்படுத்வோ அவமானப்படுத்தவோ இங்கு எழுதவில்லை. என்மண் மீது ஆணை தாத்தா உங்களை அவமானப்படுத்தவோ காயப்படுத்தவோ எழுதவில்லை. உங்களுக்கு பதவிகள் பட்டங்கள் இனி கொடுப்பதில்லை என்று நான் முடிவெடுத்துவிட்டேன். நாங்கள் கொடுத்தால் அது சாதாரணம் கேவலம். ஆனால் பேரினம் கொடுத்தால் கழுத்தில் அணிந்து கொண்டு துள்ளித் திரிவிர்கள். புரிந்து கொள்ளவே எழுதுகின்றேன.; புரிந்து கொண்டால் நாமும் வாழ்வோம் தமிழும் வாழும்.
நன்றி வணக்கம்.

அன்புடன்
சீலன்
விடுதலை ஒன்றே மானிடத்தின் பெரும் பொருள்!
விடுதலை ஒன்றே உயிர்களின் உயிர் மூச்சு!!
விடுதலை ஒன்றே மானஸ்தர் சூடும் மகுடம்.!!!
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)