சாமி Wrote:உலகின் முதலாவது புகைப்படம்.
<img src='http://www.yarl.com/forum/files/1st_photo.jpg' border='0' alt='user posted image'>
இப் புகைப்படத்தினை எடுத்தவர் : Joseph Nicephore Niepce
ஆண்டு: 1826
படம் :J. PAUL GETTY MUSEUM/AP
எங்களுக்கெல்லாம் முகவுரை எழுதியது இந்த புகைப்படமா?
கலைஞனே உனக்கு நன்றி.
நீ எவ்வளவு துன்புற்றிருப்பாய்? அது எமக்கு புரியும். உன் கண்டு பிடிப்பு வெற்றி கொண்ட போது , நீ எவ்வளது மகிழ்ந்திருப்பாய்? மனிதன் சந்திரனில் கால் வைத்த போது உலகமே திக்கி நின்றது. அப்போது இலங்கைக்கு தொலைக் காட்சியே வரவில்லை. லேக்ஹவுஸில் மட்டுமே சின்னதாக கறுப்பு வெள்ளை தொலைக் காட்சி ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப் பட்டது. அது பத்திரிகைச் செய்திக்காக மட்டுமே.
அந்த தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டு ,சந்திரனிலிருந்து பார்ப்பது போல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன அறிவிப்பாளர்கள் அப்பல்லோ.11லிருந்து நீல் ஆம்ஸ்ரோங் இறங்குவதை வர்ணனை செய்து ஒலிபரப்பிய வேளை உலகமே கை தட்டியது. அப்போதெல்லாம் அப்படி முடியுமா என்று எண்ணிவர்களை பார்த்து புரியாமல் விழித்ததுண்டு.
இதற்கெல்லாம் உரமான உன் வாழ்வு எமது முகங்களையும், எம் குடும்பங்களையும் துாரத்தேயிருந்து பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு சில வரிகளாவது எழுத முடிந்ததே. அதுவே பாக்கியம்தான்.அந்த படமே சினிமாகவும்,தொலைக்காட்சி வழியும்,...................எத்தனை மாற்றங்களைத் தந்திருக்கிறது.
உன் முதல் புகைப்படம் , இன்றைய நவீன கலையின் மொடர்ன் ஆர்ட்.
நன்றிகள்..................உன் நினைவுகள் வாழட்டும் ஐயா.