Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்பாவிப் பெண்களும் வன்முறையும்...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39526000/jpg/_39526252_dolls-afp-203body.jpg' border='0' alt='user posted image'>

26-11-2003

அம்னஸ்ரி இன்ரனஸல் (Amnesty International) விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகில் வாழும் மனிதப் பெண்களில் ஐவரில் ஒருவர் அவரின் வாழ்க்கைக் காலத்தில் ஏதாவது ஒரு நிலையில் தாக்குதலுக்கு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார் எனும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 120 மில்லியன் பெண்கள் அவர்களின் மீதான வன்முறைக்கு ஆளாவதுடன் அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்கும் தகுதியைக் கூட இழந்து நிற்கின்றனர்...!

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 0.7மில்லியன் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்...!

அது மன்டுமன்றி இன்னோர் பரிதாப நிலை என்னவென்றால் பெண்கள் மீதான வன்முறைக்கு அதிகம் பாவிக்கப்படும் இடமாக அவர்கள் யாரைச் சார்ந்து எங்கு வாழ்கிறார்களோ...அதுதான் அவர்கள் வாழும்.... வீடுகள்...விளங்குகின்றன..!

உலகில் வீட்டுக்குள்ளேயே பெண்களைக் அதிகம் கொலை செய்யும் நாடாக வங்காளதேசம் எனும் தெற்காசிய முஸ்லீம் நாடு விளங்குகிறது....!

அத்துடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சைபிரசின் ஊடாக ஆண்டுக்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்காக ஐரோப்பாவுக்கும் அரபு நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றனர்....!

பிரித்தானியாவில் ஒவ்வொரு நிமிடமும், வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் உதவி கேட்டு எழுப்பும் தொலைபேசி அழைப்புக்களைப் பெற கூடியதாக இருக்கிறதாம்....!

அதிகம் பெண்கள் மீது வன்முறையை செய்பவர்கள் அவர்களின் கணவன்மாரும் காதலர்களும் கூடிவாழ்பவர்களும்...!(partners)

----------------------------
என்னே கொடுமை மனிதனே மனிதனைத் துன்புறுத்தும் கொடுமை...இதை யார் செய்வது.....?! ஏன் செய்கிறார்கள்....அவர்கள் பெறும் லாபம் என்ன....இவற்றைச் செய்யத்தூண்டும் காரணிகள் என்ன...?! அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது....சட்டங்கள் என்ன செய்கின்றன...???! எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானம் எங்கே...செத்துவிட்டதா......?!

:evil: Idea :evil:

http://news.bbc.co.uk/1/hi/world/3238556.stm

தகவல் BBC.COM...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சட்டங்கள் அதிகரிக்கின்றன என்றால்.. மனிதாபிமானம் சுருங்குகின்றது என அர்த்தம்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)