Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதெப்படி இருக்கிறது....
#1
அண்மையில் மன்னார் கடற்பரப்பில் மன்னார் பகுதி மீனவர்களால் இந்திய மீனவர்கள் இணக்கப்பாடுகள் எதுவுமின்றி எல்லை மீறிவந்து மீன்பிடித்ததற்காய் பிடிக்கப்பட்டு பின்னர் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் விடுவிக்கப்பட்டும் விட்டனர்...இதே போன்று இலங்கைக் கடற்படை செய்வது நாளாத்த நிகழ்ச்சி அதற்கெல்லாம் மெளன விரதம் இருந்த இந்திய மத்திய அரசு..தற்போது இப்படி ஒரு அறிக்கை விட்டுள்ளனர்...இவர்கள் சமாதானத்தின் பங்காளிகள் ஆனால் தமிழர்கள் நிலை என்னாவது......??????!
--------------------------------
டிசம்பர் 05, 2003

கடற் புலிகளின் செயல்பாடு கவலை தருகிறது: இந்தியா

டெல்லி:

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்பிரிவு செயல்பாடுகள் குறித்த கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளித்ததாவது:

வங்காள விரிகுடா கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்திய கடலோரப் பகுதிகளில், முக்கியமாக பாக் ஜலச் சந்தியில் கடலோரப் பாதுகாப்புப் படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டுக்கு இரு கடற்படைகள் இருக்கக் கூடாது. இது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையைத் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் பாதுகாப்பு குறித்து தனது அக்கறையையும் இந்தியா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீவிரவாதிகளின் ஊடுவல் தொடர்கிறது என்றார்.

Thanks thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் உள்ள வங்கிக்கு கிறிஸ்மஸ்தாத்தா உடையில் வந்த ஒருவர் அங்கிருந்தவர்களை பொய்த்துவக்கு காட்டி 10000 ஈரோக்களை கொள்ளையடித்துவிட்டு சைக்கிலில் தப்பி செல்ல முயன்றார் போகும்பொழுது அவர் தான் அணிந்திருந்த கிறிஸ்மஸ்தாத்தா உடைகளை களைந்துகொண்டே சென்றார் அவர்
இறுதியாக சிவப்புநிறகாற்சட்டையை கழற்று முன் பொலிசார் அவரை அடையாளம் கண்டு பிடித்து விட்டார்கள் தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)