Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீரிழிவு நோய்க்கு புதிய மூலிகை மருந்து கண்டுபிடிப்பு
#1
சர்க்கரை வியாதியை வேரறுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

மருந்தே இல்லாத வியாதி என்றும், விதி இது... சாகும் வரை இத்தோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்று சர்க்கரை வியாதி பீடிக்கப்பட்டோர் தொடர்ந்து வந்த புலம்பலுக்கு பதில் கிடைத்துவிட்டது!

ஆம். நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை வியாதியை ஒழிக்க மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்!

கொல்கட்டாவில் நடைபெற்ற சர்க்கரை வியாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய இரசாயன உயிரியல் கழகத்தின் தலைவரான டாக்டர் எஸ். பட்டாச்சாரியா இத்தகவலை வெளியிட்டார்.

ஐ.சி.பி. 201 என்றழைக்கப்படும் இந்த மருத்து, மேற்குவங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் செழித்துக் கிடக்கும் மூலிகை இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.

புருளியா மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது தெரிந்தவுடன் இந்த மூலிகை இலைகளை பறித்து தின்று நோயிலிருந்து விடுபட்டதை அறிந்து அந்த இலைகளை ஆய்வு செய்ததாகவும், அதிலிருந்து இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் பட்டாச்சாரியா கூறினார்.

இந்த புதிய மருந்து சுண்டெலிகளுக்கு செலுத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது கட்ட ஆய்வு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் கூறிய பட்டாச்சாரியா, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்குள் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தை அளித்த அந்த மூலிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட டாக்டர் பட்டாச்சாரியா, இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுச் சொத்துரிமைக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் டயாபடிஸ் ஒழிந்துவிடும் என்று பட்டாச்சாரியா கூறினார்.

இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது என்றும், அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்றும் கூறிய பட்டாச்சாரியா, குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது என்று கூறினார்.

இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.

---------------
Message from webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b><span style='font-size:30pt;line-height:100%'>டைப்-2 நீரழிவு நோயாளிகளுக்கு நல்லது செய்யும் சோயா </b></span>


ஏழரைச் சனி சும்மா போகாது என்பது போல ஒருவனுக்கு நீரழிவு வியாதி வந்தால், கூடவே இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களையும் கூட்டி வந்து விடும். இதில் யாரும் விதி விலக்காக இருக்க முடியாது. நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது.

<img src='http://www.dinakaran.com/health/daily/2004/aug/05/soy.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தொpய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீhpல் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீhpல் உள்ள புரோட்டீன் அளவை குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது. அதாவது ஒன்று சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றெhன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகாpத்தால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.


நன்றி
தினகரன்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)