02-22-2006, 09:43 AM
பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?
சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு:
* பறவைக் காய்ச்சல் என்பது என்ன?
"ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது.
* பறவைக் காய்ச்சல் மனிதர்களை எவ்விதம் பாதிக்கிறது?
பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால், 1997ம் ஆண்டிற்குப் பின்னர் 180 பேர் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1997ம் ஆண்டில்தான், முதல்முறையாக ஹாங்காங்கில் ஒரு நோயாளிக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. "எச்5என்1' டைப் 1 என்ற முதல்ரக தொற்றுநோய் வைரஸ் கிருமியே அதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
* பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?
இதுவரை இல்லை.
* தற்போதைய பிரச்னை என்ன?
பறவைகளும், மனிதர்களும் தற்போது அதிகமாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயத்தில் பன்றி, குதிரை போன்ற விலங்குகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் அபாயக் கிருமி, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிற வகையில் வளர்ச்சி மாற்றம் பெற்றுவிடக் கூடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்து விட்டால்... அதற்கு சாத்தியக் கூறுகள் கொஞ்சம் தான். மனிதர்களிடையே தொற்றக் கூடிய சக்தி பெற்று புதிதாக பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளோ, உரிய மருந்துகளோ நம்மிடம் இல்லை.
* இதுவரை பறவைக் காய்ச்சல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
கடந்த 1997ம் ஆண்டில்தான் ஹாங்காங்கில் பல லட்சக்கணக்கான பறவைகள் இறந்துபோன பிறகு தான் "எச்5என்1' கிருமியையே அறிய முடிந்தது. இதன் பிறகு அங்கு ஏராளமான கோழிகள் கொல்லப்பட்டதன் மூலம் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இதே வகை கிருமிகள் தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் துளிர்விட்டு, 10 கோடி பறவைகள் கொல்லப்பட்டன. 2004ம் ஆண்டிலேயே ஜுன் மாதம் ஆசிய நாடுகளில் பல இடங்களில் மீண்டும் பயமுறுத்தியது.
மனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்று பார்த்தால், இதுவரை 180 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில், 90 பேர் இறந்துள்ளனர். இந்த கிருமி தற்போது, மத்திய ஆசிய நாடுகள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு பரவியுள்ளது. துருக்கி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வந்த பறவைகளிடமும் இந்த நோய்க் கிருமி காணப்படுகிறது.
* பறவைக் காய்ச்சல் நோயில் இருந்து மனிதர்களை காப்பாற்ற ஏதும் மருத்து உள்ளதா?
ஆசிய நாடுகளில் காணப்படும் "எச்5என்1' கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க தற்போது எந்த மருந்து வகையும் இல்லை. எனினும், இதற்காக நடைபெற்று வரும் சில மருத்துவ பரிசோதனை முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, சுவிஸ் நாட்டு தயாரிப்பான "தமிப்ளூ' எனும் மருந்து, நோய் வராமல் தடுக்கவும் மற்றும் நோயின் ஆரம்பகட்டத்திலும் மட்டுமே பயனளிக்கும். பிரிட்டனில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து தயாரிக்கும் ரோக் என்ற நிறுவனம், 30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கத்தக்க மருந்துகளை உலக சுகாதார அமைப்புக்கு தருவதாக கூறியுள்ளது.
http://www.dinamalar.com/