Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விரும்பப்படாத வீதி விபத்துக்கள்
#1
<img src='http://sooriyan.com/images/stories/jvp/acci.jpg' border='0' alt='user posted image'>

எல்லோருக்குமே ஓர் ஆசை அடிமனதில் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. அது வேறொன்றுமல்ல. எனக்கு அகால மரணம் வந்துவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பிரார்த்தனை. இயற்கையாக நோய்வாய்ப்பட்டு இறப்பது என்பது வேறு. அநியாயமாகச் சாவைத் தழுவிக் கொள்வது வேறு. அதிலும் கோரச் சாவைத் தழுவிக் கொள்வது வாழ்க்கையில் எவருக்குமே வரக்கூடாத ஒன்று. ஆனால் நம் கையில்தான் எதுவும் இல்லையே. நம்மை மேலிருந்து ஆட்டுவிக்கும் அந்த இறைவனின் தீர்மானந்தான் நமது வாழக்கையின் நிகழ்வுகளாகின்றன.

சென்ற வாரம் அதாவது ஏப்ரல் மாதம் 7ந் திகதியன்று, உலகமெங்கும் உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வருடம் உலக சுகாதார அமைப்பு, வீதி விபத்துக்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதும், அநியாயச் சாவுகள் இடம்பெறுவதும், இந்த அமைப்பின் கவனத்தை ஈர்த்தது காரணமாக, இந்தத் தினத்தை பாதுகாப்பாகத் தெருக்களில் பயணித்தலுக்காக ஒதுக்கி இருக்கின்றது.

இவர்கள் தரும் புள்ளி விபரங்களை நோக்கும்போது, வீதி விபத்துக்கள் எந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெளிவாகவே புரிகின்றது. <b>ஒவ்வொரு வருடமும் 1.2 மில்லியன் தொகையினர்</b>, வீதி விபத்துக்களால், உலகமெங்கும் கொல்லப்பட்டு வருகின்றார்களாம் என்ற தகவல் நமக்கு நிச்சயம் அதிர்சசியூட்டும் தகவல்தான். WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பும், உலக வங்கியும் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இறந்தவர்கள் தொகையை விட, விபத்துக்களில் காயமடைந்தவர்கள் தொகை 50 மில்லியனாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.

இன்றைய நிலையில் இருதய அதிர்சசியினாலும், எயிட்ஸ் நோயின் தாக்கத்தினாலும் இறப்பவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இன்று விபத்துக்கள் இடம்பெறும் இந்த வேகம் தொடர்ந்தால், 2020ம் ஆண்டளவில், வீதி விபத்துக்களினால், இறப்பவர்கள் தொகைதான் முன்னிற்கப் போகின்றது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கின்றது

ஒவ்வொரு நாளும் வீதி விபத்துக்களில், 3000பேருக்கு மேற்பட்டவர்கள் இறப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இறப்பவர்கள் அனேகமாக 15க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட இளைய வயதினர்களாகவே இருப்பதாகவும் இந்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் எடுக்கத் தவறினால், அடுத்த 16 வருடங்களில், இத் தொகை 60வீதத்தால் அதிகரிக்கும் என்று இவர்கள் எச்சரிக்கவும் தவறவில்லை.

உலக நாடுகளில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவது எதனால் என்று ஒரு பட்டியல் இட்டதில். இருதய வியாதிதான் முதலிடத்தில் நிற்கின்றது. 12.6 வீதமானவர்கள், இருதய வியாதிகளுக்குப் பலியாகி வருகின்றார்கள். அடுத்தது இருதய அதிர்ச்சி. 9.6 வீதமானவர்கள் இப்படி இறக்கின்றார்கள். இதைத் தொடர்ந்து எயிட்ஸ், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், வயிற்றோட்டம், புற்றுநோய், மலேரியா, நீரழிவு போன்றனவற்றுடன், வீதி விபத்துக்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 16 ஆண்டுகளில் இது பட்டியலில் வீதி விபத்துக்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றுவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கின்றது.

மேற்குலக நாடுகளின் தெருக்கள்தான் இன்று உலகில் பாதுகாப்பானவைகளாக இருக்கின்றன என்கிறார்கள். இங்கு ஒவ்வொரு 100,000 பேரில் 11 பேர் வீதிவிபத்துக்கள் காரணமாகக் கொல்லப்பட்டு வருகின்றார்களாம். ஆனால் ஆபிரிக்க நாடுகளில் இதே தொகையில், இறப்பவர்கள் தொகை 28ஆக இருக்கின்றது.
உலகின் முதல் கார் விபத்து எப்பொழுது நடந்தது என்று அறிவீர்களா?
முதன்முதலாக கார் விபத்தில் இறந்த பெண்ணின் பெயர் Bridget Driscoll. இலண்டனில் Crystal Place என்ற தெருவில்,மணிக்கு 12கி.மீற்றர் வேகத்தில் ஓடிவந்த காரில் இவர் மோதி இறந்த காலம் ஆகஸ்ட் 17 ,1896 ஆகும்.

Ferrari, Lamborghini, Maserati என்ற பெயர்களில் வேகமாக ஒடக் கூடிய Sports Car களுக்கு இத்தாலி உலகப் பிரசித்தி பெற்றது. கண்மூடித்தனமாக காரை ஓட்டுபவர்களை அதிகமாகக் கொண்ட ஐரோப்பிய நாடும் இதுதான். வீதி ஒழுங்குகள் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இங்கு தினமும் சராசரி 925 பேர் வீதிவிபத்துகளில் காயமடைந்து வருகின்றார்கள். தினமும் 18 பேர் வரையில் உயிரிழந்தும் வருகின்றார்கள் இந்த நிலையில் உலக சுகாதார தினத்தை, அதிகாரிகள் வீதிப் பாதுகாப்பு நாளாகப் பிரகடனம் செய்தார்கள். இந்த ஒரு நாளிலாவது விபத்துக்கள் ஏதும் நடக்கக் கூடாது என்பது இவர்கள் நப்பாசையாக இருந்தது.

ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.பொழுது விடிந்தபோது ஒரு மரணத்தோடுதான் விடிந்தது. இந்த நாளில் கொல்லப்பட்டவர்கள் தொகை 12 ஆகக் குறைந்ததேயொழிய, மரணத்தை இவர்களால் வீதிகளில் தடுக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், சுவீடன், ஒல்லாந்து போன்ற நாடுகளில், ஒவ்வொரு 100,000 பேரில் 5 தொடக்கம் 6பேர் வரையில்தான் இறக்கிறார்களாம். சராசரியாக ஐரோப்பிய நாடுகளில், 100,000 பேருக்கு 11 பேர் வரையில் இறந்தாலும், இத்தாலி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.

2010ம் ஆண்டளவில் வீதி விபத்து மரணங்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இணங்க இத்தாலி, புது விதிமுறைகளை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. மக்கள் உடனடியாகவே எச்சரிக்கை உணர்வோடு நடக்க செயற்பட்டாலும், இது சொற்ப காலத்திற்குத்தான் தொடர்ந்தது. 3 மாதங்கள் கழிய, பழைய குருடீ கதவைத் திறவடி என்ற கதைதான்.

வீதியிலே விதி சிரிக்கவைக்கும் இந்த விபத்துக்கள் என்றுதான் குறையுமோ?


A.J.Gnanenthiran- sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)