Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைச்சரின் மனைவி கட்டுநாயக்காவில் போதையில் மயங்கி வீழ்ந்தார
#1
அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும்
பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும்
கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.
இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு:
சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர்.
பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆனால் அமைச்சரோ தனது குடும்பத்துடன் இரவு 8மணிக்கு அதாவது விமானம் புறப்படும் நேரத்திற்கே விமான நிலையத்தை வந்தடைந்தõர். இதனால், விமானம் புறப்படுவதில் தாமதம் எற்பட்டது.
எவ்வாறாயினும் விமான நிலைய ஊழியர்களின் கடும் முயற்சிகள் காரணமாக அமைச்சரின் குடும்பத்தினர் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அமைச்சர் குடும்பத்தினரின் இந்த நடவடிக்கையால் விமான நிலைய ஊழியர்கள், மட்டுமன்றி விமானத்திலிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். விமானத்திலிருந்த பயணிகள் விமானநிலைய ஊழியர்களைக் காரசாரமாகத் திட்டித் தீர்த்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் மனைவி அதிகமாக மது அருந்தி நிலத்தில் மயங்கிவிழுந்த சம்பவமானது, அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தியதுடன் அமைச்சரின் மனைவியின் இந்த நடவடிக்கை குறித்து விமான நிலைய ஊழியர்கள் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும் அருவருக்கும் விதத்தில் தம்முள் பேசிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக மதுபோதையிலிருந்த அமைச் சரின் மனைவி மயங்கிவிழுந்து, அவர் கைத்தாங்கலாக விமானத்திற்கு அழைத் துச் செல்லப்பட்டமை, விமானம் புறப்படும் நேரத்திற்கே விமான நிலையம் வந்தது மற்றும் விமான நிலையப் பணியாளர்கள் ஓடியாடி அவர்களை அழைத் துச் சென்றது ஆகிய அனைத்தும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் "கமெராவில்' ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று அதில் உள் ளது
http://www.uthayan.com/pages/news/today/20.htm
Reply
#2
அமைச்சரின் மனைவி குடிபோதையில் விழுந்தால் என்ன விமானத்தில் இருந்து குதித்தால் நமக்கென்ன.. யாழ் பாணத்திலும் இதர தமிழீழ பகுதிகளிலும் எத்தனையோ விடையங்கள் இருக்கும் போது கட்டுநாயக்காவில் அமைச்சரன் மனைவி மயங்கி விழுந்தது மட்டும் உதயனின் காசுகளுக்கு கிட்டியிருக்கிறது அதுவும் பலநாள் கழித்து...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
உதைச் சொல்லுகின்றர்கள். முந்தி சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில கில்டன் கொட்டலில் மூக்கு முட்ட ஏத்திப் போட்டு, கோல் பேஸ் றோட்டில் இறங்கி நிண்டு சத்தியாக எடுப்பாராம். பாதுகாப்புக்கு போறவங்கள் பாடு அந்தே கதி தானாம்.

இது தான் மேட்டுக்குடிகள். பதவிக்கு வந்தால் மக்களின் வரிப்பணத்தில் என்னவல்லாம் செய்வினம் தெரியுமோ!!
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)