Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தவறில்லாமலே தண்டணைகள்...!
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>தவறில்லாமலே...
தண்டணைகள்...!</b></span>


நீ
என் கரம்பற்றி நடக்கின்றாய்
என்றால்....
நெருப்பின்மேல் கூட
நடந்துவருவேன்...!
அனலின் வெப்பத்தில்
என்
மேனி பொசுங்குவதை
அப்போது..
உணரமாட்டேன்...!

நீ
என் வருகைக்காக
காத்திருக்கின்றாய்
என்றால்...
முள்ளின்மேல் கூட ஓடிவருவேன்
முட்கள் என் பாதங்களை
பதம்பார்பதை
அப்போது..
உணரமாட்டேன்..!

நீ
என் அன்புக்காக
ஏங்குகின்றாய் என்றால்...
எந்தத்தொலைவில் இருந்தாலும்
தேடிவருவேன்..!
தேசத்தின் தூரங்களை
அப்போது..
உணரமாட்டேன்...!

ஆனால்
நீ
மொனத்தை...
தாய்மொழியாய்க்கொண்டால்
என் இதயம்
மரித்துப்போவதையே...
இப்போது...
உணருகின்றேன்...!

ஆண்மையை...
சில சமயங்களில்
மொனங்களும்...
தண்டிக்கின்றன...!!!


த.சரீஷ்
08.06.2004 பாரீஸ்
sharish
Reply
#2
கவிதையில் அன்பின் ஆழம் பரிணமிக்கின்றது.
வாழ்த்துக்கள்...
Reply
#3
அருமை அருமை வாழ்துக்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)