Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குப்பை
#1
குப்பை


ஷீலாவை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட நாட்கள் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும், மின்னல் மாதிரி விருட்டென்று கண்ணில் அடித்து விட்டுப் போன வித்தியாசமான அனுபவம்.

வாய்ஸ் மெயிலில் அவள் பெயரைக் கேட்டதும் முதலில் இந்தியப் பெண் என்றுதான் நினைத்தேன். அபார்ட்மென்ட்டைப் பகிர்ந்து கொள்ள ஆள் வேண்டும் என்று லோக்கல் பத்திரிகையில் இலவச விளம்பரம் தந்ததால் - கூப்பிட்டிருந்தாள். நேரில் வந்து, " நான் ஷீலா தாம்ஸன் ! " என்று கை குலுக்கியபோதுதான், அட அமெரிக்கா எனத் திகைத்தேன்.

சரியா, தப்பா? ஒத்து வருமா, வராதா? என்றெல்லாம் சாலமன் பாப்பையா பண்ண அவகாசமில்லாமல் - மிச்சமாகப் போகும் முன்னூத்தி சொச்சம் டாலர்கள் மட்டுமே மனசின் அகலத் திரையில் தெரிந்தது. லீசிங் ஆபிசில் கையெழுத்துப் போட்டு, காரிலிருந்து மூன்று பெரிய சூட்கேஸ்களை அவளுடைய படுக்கையறையில் உருட்டிக் கொண்டு வந்து வைத்து, முறைப்படி என் வீட்டுப் பங்காளி ஆனாள்.

ஒரு ஷவர் அடித்து விட்டு, டொவ் சோப்பு வாசனையுடன் நிதானமாய் அந்த டூ பெட்ரூம் அபார்ட்மென்ட்டை முழுசுமாய் ஒரு வலம் வந்தவள், கண்களை விரித்து சந்தோஷப்பட்டாள். " வாவ், வீட்டை நீட்டா வெச்சிருக்கே. சோ·பா, மைக்ரோ வேவ் ஓவன், ரீடிங் டேபிள், அயர்னிங் போர்ட் எல்லாமே இருக்கு ! இந்த செளகரியத்துக்காகத்தான் நான் எந்த ஊருக்குப் போனாலும் ஏற்கெனவே செட்டிலான ஆளோட பங்கு போட்டுக்கறது. அட மியூசிக் சிஸ்டம் வேற இருக்கா? பட்டி ஜ்வெல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெச்சிருக்கியா? "

" இல்லே. என் கிட்டே ஏ ஆர் ரெஹ்மான்தான் இருக்கு. "

" ஹூ ஈஸ் தட்? " என்றவள் என் விளக்கம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த சங்கதிக்குத் தாவினாள். " ஆமா, எல்லாமே இருந்தாலும் என்னவோ மிஸ் ஆகிறதே? டிவி இல்லையா? "

நான் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே - " இன்னும் கிடைக்கலை. " என்றேன்.

" வாட் டூ யு மீன்? ஆர்டர் பண்ணிருக்கியா? "

" யாரும் ஒரு டிவியைக் கொண்டு வந்து இன்னும் குப்பைத் தொட்டில போடலை. "

என்னுடைய பதில் அவளுக்கு ரொம்ப விநோதமாய் இருந்திருக்க வேண்டும். புன்னகைத்தேன். " ஷீலா, இந்த வீட்டிலிருக்கிற அத்தனை பொருட்களும் அதோ அந்தக் குப்பைத் தொட்டியிலிருந்து ஒவ்வொண்ணா சேகரிச்சதுதான். யாஹூ மெயிலையும், அந்தக் குப்பைத் தொட்டியையும் ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி செக் பண்றது என்னோட தினசரிக் கடமைகளில் ஒண்ணு. ஒரு பொருள் லேசா மக்கர் பண்ணினா உடனே குப்பையில் தூக்கிப் போடறதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. ஒரே ஒரு ஸ்பிரிங் அறுந்து போன சோ·பா கம் பெட், நாப் மட்டுமே உடைஞ்சு போன ஓவன், இந்த ரைட்டிங் டேபிளில் என்ன குறைன்னு இன்னிக்கு வரைக்கும் என்னால கண்டு பிடிக்க முடியலை. தினமும் இங்க ஒரு ஆள் கொட்டற குப்பையில் எங்க ஊரில் நாலு குடும்பம் பிழைக்கும். "

அவள் சிரித்தாள். " நீ சொல்றது சரி போல தோணினாலும் லாஜிக்கலா யோசிச்சா அது தப்பு. இங்கே ரிப்பேர் கான்சப்ட் இல்லை. ரீப்ளேஸ்மென்ட்தான். ஸ்பேர் பார்ட் விலையும், அதை மாத்த லேபர் சார்ஜூம் புதுசு வாங்கறதை விட எக்ஸ்பென்சிவ் . அதனால பழசு குப்பைத் தொட்டிக்கு வருது. அதே போல ஊர் விட்டு மாத்தலாகிப் போறப்ப சில பொருட்களை எடுத்துட்டுப் போறதுக்காக மூவர்சுக்கு தர பணத்தை விட தூக்கி எறிஞ்சிட்டுப் புதுசு வாங்கறது சல்லிசா இருக்கு. ஒரு விஷயம் குடைச்சல் தரும்ன்னா தூக்கி எறிஞ்சிட்டுப் போயிடறதுதான் சரியான தீர்வு. கட்டிட்டு அழக் கூடாது. "

அடுத்த நாள் வால்மார்ட்டில் போய் வீட்டு சாவியை ட்யூப்ளிகேட் போட்டு விட்டு வரும்போது, அட அதிர்ஷ்டமே - ட்ராஷ் குவிக்கும் இடத்தில் ஒரு டிவி பெட்டி உட்கார்ந்திருந்தது. நான் கேட்டுக் கொண்டதால் வேண்டா வெறுப்போடு ஒரு கை பிடித்தாள் ஷீலா. அதை நான் கழட்டிப் போட்டு ஒயர்களை ஆராய்ந்து, கடைசியில் ஒரு ட்ரான்சிஸ்டர் இணைப்பை மாற்றிக் கொடுத்து உயிர் கொடுத்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள். இன்னும் என் சாம்பார், ஆந்திர நண்பரின் சகவாசத்தால் அதில் கொஞ்சம் அதிகப்படியாய் மிதக்கும் மிளகாய்த் தூள், அதிகாலை பூஜை எல்லாமே அவளுக்கு ஆச்சர்யம்தான்.

அன்றைக்கு ஆபிசிலிருந்து திரும்பிய போது - வீட்டுக்குள் டிவி சத்தம் கேட்டது. ஷீலா நேரமே வந்து விட்டாள் போல. யோசித்தபடி கதவைத் திறந்த நான் திடுக்கிட்டுப் போனேன். ஹால் சோபாவில் ஒரு வெள்ளைக்காரனின் மேல் சரிந்து தீவிரமாய் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஹாய் என்பது போல் கையை அசைத்ததைத் தவிர என்னை அவர்கள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. எனக்குக் கொஞ்சம் கால்கள் நடுங்க ஆரம்பிக்க - வேகமாய் என்னுடைய அறைக்குள் போய் விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து கதவைத் தட்டினாள் ஷீலா. என்னைப் பார்த்து பலமாகச் சிரித்தாள். " என்ன இப்படி வெக்கப்படறே? அவன் என்னோட பாய் ·ப்ரெண்ட் ஸ்டீவ். இனிமே இங்க அடிக்கடி வருவான். "

" வர்றது இருக்கட்டும். இதெல்லாம் உன்னோட ரூமுக்குள்ளே வெச்சிக்கக் கூடாதா? " என்று நான் கேட்டதற்கு கெக்கே பிக்கே எனச் சிரித்தாள்.

" ஸ்டீவ் ஒரு முரடன். இடமெல்லாம் பார்க்க மாட்டான். நானும்தான். " என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

முன்னூறு டாலர்களை மிச்சம் பிடிக்கப் போய் இதென்ன கண்றாவி. லீசில் அவளுக்கும் சம உரிமை கொடுத்துத் தொலைத்திருக்கிறேன். இவர்களை எப்படி விரட்டுவது என்று நான் குழம்பிப் போனேன். இப்படிக் குழப்பத்திலேயே இரண்டு வாரம் ஓடிப் போயிருக்க - ஒரு சுபயோக சாயந்தரத்தில் சூட்கேஸ்களை பேக் பண்ணி வைத்துக் காத்திருந்தாள் ஷீலா.

" நியுயார்க்கிலிருந்து ஒரு ஆ·பர் வந்திருக்கு. மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வேலை பார்க்கணும்ங்கறது என் ரொம்ப நாள் ஆசை. வீட்டைக் காலி பண்றேன். உனக்கு நான் பணம் தரணுமா, அல்லது நீ எனக்குத் தரணுமான்னு கணக்கைப் பார்த்து செட்டில் பண்ணிடறியா? என்னை ஏர்போர்ட்டில் டிராப் பண்ண இன்னும் பத்து நிமிஷத்தில் ஸ்டீவ் வந்துருவான். "

பெரியதாய் ஒரு கும்பிடு போட்டு - அவசர அவசரமாய்க் கணக்கை பைசல் பண்ணி, அவளை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் குப்பைத் தொட்டி அருகே லேமினேஷன் கிழிந்திருந்த ஒரு அழகான போட்டோ ஆல்பம் கிடந்தது. புரட்டிப் பார்த்த போது - எல்லா போட்டோக்களிலும் ஷீலாவும், ஸ்டீவும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

Thanx: சத்யராஜ்குமார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ம்.. குப்பைதான்.. பிபிஸி உலகசேவையும் கடந்த 3 நாட்களாக பழைய செய்தியைத்தான் கொட்டிக்கொண்டிருக்கிறது.. நல்ல செய்திகளை தந்துகொண்டிருந்த ஒரே தளம் மண்டையைப்போட்டுவிட்டதே..!
Truth 'll prevail
Reply
#3
Mathivathanan Wrote:ம்.. குப்பைதான்.. பிபிஸி உலகசேவையும் கடந்த 3 நாட்களாக பழைய செய்தியைத்தான் கொட்டிக்கொண்டிருக்கிறது.. நல்ல செய்திகளை தந்துகொண்டிருந்த ஒரே தளம் மண்டையைப்போட்டுவிட்டதே..!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
CNN WORLD REPORT இல SRILANKA பற்றி ஏதோ காட்டுகிறார்கள்போலுள்ளதே..
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)