Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
தமிழர் விடுதலைக் மூட்டணியின் தலைவர் என தானே சொல்லிக் கொண்டவரின் கருத்திலிருந்து முக்கியமான சிறு விடையம்:
<img src='http://www.tulf.org/leader1.jpg' border='0' alt='user posted image'>
ஏறத்தாள அரைநூற்றாண்டு காலமாக அரசியலில் இருக்கும் மூத்த அரசியல்வாதி நான். பெரியார் அமரர் சா.Nஐ.வே.செல்வநாயகம் கியு.சி.உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளேன். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் பெரியார் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் கியு.சி. அவர்களின் இறுதி நாட்களில் அவர்களுடன் சில நாட்களைக் கழித்த பெருமைக்குரிய கடசித் தமிழ் அரசியல்வாதி நானே.ஆகவே குறிப்பாக எமது மக்கள் சம்பந்தமாகவும் பொதுவாக நம்நாடு சம்பந்தமாகவும் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் உரிமையும் தகுதியும் எனக்கு உண்டு எனக் கருதுகிறேன். சுயநல நோக்கின்றி என்னால் வழங்கப்படும் ஆலோசனையைத் தீவிரமாகப் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.
இது சுயவிளம்பரமா?
உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டீர் போல. நீங்கள் சொன்னது எல்லாம் உண்மையே ஆனால் ஆலோசனை வழங்கும் தகுதி உங்களுக்கிருக்கலாம். உரிமையும் கூட இருக்கலாம் அனால் கடந்த பொதுத்தேர்தலை சற்று திரும்பிப் பாருங்கள்....அன்று உங்களுக்கு ஈ.பி.டீ.பி. யும் புலி எதிர்பாளர்களுமே நண்பர்கள் இன்று எதற்காய் இது.........
இது இவருடைய முதலாவது ஆலாசனை:
முதல்கட்டமாக தயவு செய்து கருணா அவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்து பெறுமதிமிக்க உயிர்கள் இரு பகுதியிலும் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்
ஏன் கருணா தாணே உங்கள் நண்பராமே உடனே அவரிடம் சொல்லுங்கள் அரசியல் என்ற பெயரிலே அலையாமல் அண்ணணிடம் மண்டியிடும் படி எத்தனையோ பேர் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் மன்னிக்க முடியாது ஓர் துரோகியாக கருணா வருவதற்க்கு; நீங்களும் ஓர் காரணம் என்றே நாம் எண்ணுகின்றோம். இன்று நீங்கள் இதைச் சொல்லு முன் இந்தப்பிரச்சினை ஆரம்பித்த நாட்களில் தலைவரால் கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பை கருணா ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டிருக்கலாம் அல்லவா? ஏன் கேட்க வில்லை
கேள்விகள் நிறைய கேட்க முடியும் ஆனால் பதிளலிக்க நீங்கள் முன்வர மாட்டீர்கள். லண்டனில் இருந்து உங்கள் இணையத்தை நடாத்துபவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எமக்கு (தமிழின உணர்வாளர்களுக்கு) .......
உச்சந்தலையிலிருந்து......
உள்ளங்கால் வரை நனகு தெரியும்....
<span style='font-size:30pt;line-height:100%'>நேசமுடன் நிதர்சன்</span>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வாங்கோ மணிதாசன் அங்கிள்... மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி...!
உந்த சங்கரியாரின் பழைய வேசங்களை கொஞ்சம் விலாவாரியாச் சொல்லுங்கோவன்... உவரை உந்த இந்திய இராணுவம் நடத்தின தேர்தலோடதான் எங்களுக்குத் தெரியும்.. அதுக்கு முதல் எங்களுக்கு உவையின்ர அரசியலையும் தெரியாது சங்கரியையும் தெரியாது....தெரிஞ்சதெல்லாம் நம்ம பொடியளைத்தான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஆனந்தசங்கரிக்கு தன்மானத் தமிழனின் பகிரங்கக் கடிதம் ஆனந்தசங்கரி அவர்களுக்கு!
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகப் பத்திரிகைகளில் வாசித்து அறிந்தேன். பொதுத்தேர்தல் படுதோல்வியோடு, வெளிநாட்டுச் சுற்றுலா என்ற பெயரில் இங்கில்லாது போன நீங்கள், மீண்டும் "தமிழர் விடுதலைக் கூட்டணி" பெயரிலான கடிதத் தலைப்போடு உங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டீர்கள். வெளிநாட்டில் ஏந்திய கைகளுக்குக் கிடைத்த சன்மானத்துக்கு கைமாற்றாக அங்கு ஏவப்பட்ட பணியை நீங்கள் ஆற்றுகின்றீர்;கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது.
தலைவர் பிரபாகரனுக்கு அரசியல் விவகாரங்களில் ஆலோசனைக் கடிதம் வரையும் தகுதியும், தைரியமும் உங்களுக்கு உள்ளதாக நீங்கள் கருதும்நிலை இருப்பது ஈழத்தமிழர்களின் துரதிர்ஸ்டமேயன்றி வேறில்லை. கருணா என்ற தனிமனிதப் பிறழ்வுடன் - நம்பிக்கைத் துரோகியுடன் - ஒரு விடுதலைப் போராட்டத் தலைவரை இணங்கிப்போக ஆலோசனை கூறுகின்றீர்கள். கருணாவின் தரத்தில் இருக்கும் உங்களுக்கு "ஜாரியான" கருணாவுடன் நீங்கள் இணங்கிப் போவதன் வெளிப்பாடே இக்கோரிக்கையன்றி வேறில்லை. கருணாவின் கழுத்தில் விழக்கூடிய யமனின் பாசக் கயிற்றிலிருந்து கருணாவை விடுவித்தால், உங்கள் பக்கமும் யமனின் வருகை இருக்கும் என்ற பயத்திலிருந்து நீங்கி விடலாம் என நப்பாசை கொள்கின்றீர்;கள் போலும். ஜயா சங்கரியாரே! இப்போது நீங்கள் அரசியலில் போக்கிடமற்ற அநாதை, வெறும் துரும்பு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடிதத் தலைப்புத் தவிர, உங்களுக்குத் தடுப்புச்சுவர் வேறேதுமில்லை. எனவே, உங்களுடன் மினக்கெடுவதற்கு புலிகளுக்கு தேவையோ, அர்த்தமோ, நேரமோ இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
எனவே, பயமின்றி உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தொடருங்கள், "என்ன வேடிக்கை மனிதர் இவர்!" என்று ஒரு விது}ஷகனைப் பார்த்து, அனுபவிக்கும் வாய்ப்பு தமிழருக்குத் தொடரட்டும். கருணாவைப் போன்று பல துரோகங்களைத் தமது விடுதலைப் போராட்டத்தில் கண்டவர் தலைவர் பிரபாகரன், அந்தத் துரோகத் து}சுகளின் பட்டியலில் மற்றொரு தூசாக வலம் வரும் தாங்கள், விடுதலை வேள்வியின் தாற்பரியம் புரியாமல் உங்களின் குள்ளநரித்தனமான அரசியலின் அங்கமாக அதைக் கருதி "தத்துவம்" பேச முனைகின்றீர்கள். "நீங்கள் கேட்பதை சிங்களவர்களும், முஸ்லிம்களும் தருவார்களா?" - என்று தலைவர் பிரபாவிடம் நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட்பதில் விந்தையில்லை. ஏனென்றால் கேட்டும், இரந்தும் பெறும் பிச்சைதான் உரிமை என நினைப்பவர் - கருதிச் செயற்படுபவர் - நீங்கள். இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக நீங்கள் அப்படித்தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை. "நீங்கள் கேட்பதற்கு உடன்படும் ஏதேனும் அரசு, அதன்பின் பதவியில் நிலைக்கமுடியுமா?" - என்று தலைவரைப் பார்த்து வினாவுவதன் மூலம் அவர்கள் தரக்கூடியதை மட்டும் கேளுங்கள் என்கிறீர்கள்.
நல்லது. சங்கரி ஐயோவே!
கடந்த ஐம்பது ஆண்டு காலம் ஈழத்தமிழரை ஏமாற்றி, நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் நாடாளுமன்றை அலங்கரிப்பதற்காக காலத்துக்குக்காலம் முன்வைத்த கோரிக்கைகள் எவையேனும் அவ்வப்போது இருந்த அரசுகளால் நிறைவேற்றப்பட்டனவா? தரப்பட்டனவா? அவை தரமாட்டா என்பதற்காக நீங்கள் கேட்காமல் விட்டீர்களா? இடைக்கால நிர்வாகமே இன்று எட்டமுடியாது என்று இப்போது கூறும் நீங்கள் தானே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் "தனித் தமிழீழம்" என்று பெரும்கதை அளந்தீர்கள். 2001 தேர்தல் வரை அதே கயிற்றை அவிழ்த்து விட்டீர்கள்.
தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு நியாயமானதை அவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தவறினால் பிடுங்கி எடுக்கவும் முடியும்; எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதை அவர்கள் கேட்கின்றார்கள். இப்போது உயிரிழப்புப் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள், "அடுத்த மேதினம் தமிழீழத்தில்!" என்ற நிறைவேற்ற முடியாத விவகாரத்தை உங்களின் அந்நேரத் தலைவருடன் சேர்ந்து தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றலாகச் சுற்றிப் பேய்க்காட்டிய போது ஒரு தடவை சிந்தித்திருக்கலாம். உங்களைப்போன்று வாக்குகளுக்காக மணலைக் கயிறாகத் திரிக்கும் வாக்குறுதிகளை அவிழ்த்து விடுபவர்களல்லர் புலிகள். சொன்னதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் திராணியும், வீரமும், வலுவும் பொருந்திய விடுதலைப் போராளிகள் அவர்கள். அவர்கள் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளாக நினைத்து நீங்கள் பிரபலாபிப்பது உங்களின் அறியாத்தனத்தைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.
உங்கள் கடிதத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நீங்கள் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய புலிகளின் திட்டம், இலங்கை அரசு பரிசீலிக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரே இந்த யோசனையைப் புலிகள் முன்வைத்து விட்டனர். அதுமட்டுமல்ல, அந்த யோசனையை தேர்தலில் ஒரு பிரேரணையாக முன்வைத்தே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் போட்டியிட்டு தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவோடு தெரிவானார்கள். இந்தத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஈழத் தமிழர்களால் - வாக்கெடுப்பு மூலம் - அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்று, அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருத்தமற்ற வியாக்கியானத்தை - தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கொடுத்திருப்பீர்களேயாயின், கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு கிடைத்த ஐயாயிரம் வாக்குகளும் ஐநூறாகியிருக்கும். தப்பி விட்டீர்கள் போங்கள். இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய அரசமைப்பு மாதிரியில் தீர்வு என்பது பற்றியும் உங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறீர்கள். இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக இதையாவது நீங்கள் கூறாவிட்டால் உங்களுக்காகத் தொடர்ந்து வேறு யார்தான் இருப்பார்கள்? எனவே, இனத்தை விற்றாவது உண்ட வீட்டுக்கு நன்றி செய்ய முயல்கிறீர்கள். வாழ்க உங்கள் நன்றிமறவாப் பண்பு!
வீரர்களோடுதான் எட்டப்பர்களும் வளர்ந்தார்கள். அதுதான் சரித்திரம் நமக்குத் தரும் கடந்தகால அனுபவம். தந்தை செல்வாவுடனும், ஜீ.ஜீ.பொன்னம்பலத் தோடும் உறவாடிப் பழகியதை நீங்கள் உங்களுக்குச் சான்றிதழாகப் பட்டியலிடும்போது எட்டப்பர் கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன. "இறுதியாக, நாம் பழைய விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண்டும்" எனத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கின்றீர்கள். அப்படிப் பேசுவதை நிறுத்தினால், உங்கள் துரோகச் செயல்களும் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறீர்;கள் போலும். எத்தனை தடவை நீங்கள் மண்டியிட்டாலும் நீங்கள் புரிந்தசெயல்கள் - அதுவும் நீங்கள் அலங்கரித்த பதவி, உங்களுக்குத் தமிழினம் தந்த மரியாதை மற்றும் பொறுப்பு - ஆகியவற்றுக்கு மத்தியில் நீங்கள் செய்த வேலைகள், வரலாற்றில் என்றும் உங்களுக்கு மன்னிப்புத் தர இடமளிக்கா என்பதே உண்மை. பிராயச்சித்தமே செய்யமுடியாத வகையில் பிழைமேல் பிழை - தவறு மேல் தவறு - புரிந்துவரும் நீங்கள், உங்களைப் பொறுத்தவரை ஆனந்தசங்கரியாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழருக்கு துக்க சங்கடமே!
அன்புடன்
தன்மானத் தமிழன்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஆனந்தசங்கரியின் கடிதத்திற்கு யாழ். பொது அமைப்புக்கள் கண்டனம்
தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றியோ, தமிழ் மக்கள் உணர்வுகளைப் பற்றியோ, தமிழ் மக்கள் தங்களது இதய தெய்வமாக போற்றும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றியோ புரிந்து கொள்ளமல் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கடிதமொன்றினை வெளியிட்டதற்கு யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு ஆனந்த சங்கிரியின் கடிதத்திற்கு யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த பொதுத்தேர்தலில் கட்டுப்பணத்தைக்கூட பெற முடியவில்லை உங்கள் அரசியல் சாணக்கி;யம் என்னவென்று மக்களுக்குத் தெரியும் எதற்குமே அருகதையற்ற உங்கள் செயற்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அரசியல் என்று நீங்கள் செய்யும் மோசடிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தில்லுமுல்லுகளும் நாமறிவோம்.
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த கனடாவில் பொங்கு தமிழ் பொங்கிப்பிரவாகித்தது அந்த பொங்கு தமிழைக் குழப்ப நீங்கள் எடுத்த பகீரதப் பிரயத்தனத்தை எம்மால் மறக்க இயலவில்லை நீங்கள் அந்த முயற்சியில் தோற்றுப்போனது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி.
உங்கள் பழைய பொய்ப் பித்தலாட்ட அரசியலிற்கு எடுபடும் நிலையில் தாயகம் தொட்டு சர்வதேசம் வரை வாழும் தமிழர்கள் இல்லை என்பதனைப் புரிந்த கொள்ளுங்கள் இது தமிழ்த் தேசிய தலைவரின் பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு நின்று விடுதலைக்குப் போராடும் காலம் என்பதனை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?
தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, கௌரவம், பாதுகாப்பு தொடர்பாகவோ அல்லது தமிழர்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ சங்கரிக்கு அரசியல் முதிர்ச்சி இருந்திருந்தால் யாதார்த்தற்திற்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டிருக்க மாட்டார்.
வடக்கு கிழக்கு இணைந்தது தான் தமிழர் தேசியம் அதுவே எமது தாயக கோட்பாடு அது இரத்தம் சிந்திப் பெற்றது ஆயிரமாயிரம் மாவீரர்களின் தீரத்தாலும், தியாகத்தாலும் அது விளைந்தது அதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் அருகதை கிடையாது.
ஆயிரமாயிரம் மாவீரர்கள் பெற்றுத் தந்த தமிழ்த் தேசியத்தை கூறு போட எவருக்கும உரிமை கிடையாது. இடைக்கால தன்னாட்சி அதிகார சபை புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என கடந்த பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். இதனைச் சர்வதேச சமூகமும் அங்கீகரித்திருக்கின்றது. ஆதலால் பல வழிகளிலும் பலம்கொண்ட புலிகளிடம் தானே இடைக்கால அரசு கொடுக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இதைவிடுத்து அரசு மாற்று யோசனை வைத்தாலும் அதனால் எதுவும் ஏற்படப்போவதில்லை. தமிழ்த் தேசியத்திற்கு வலுவ10ட்டக்கூடிய தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வு திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதன் மர்மம் என்ன?
கிழக்கு மாகாணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் ஏனைய இனத்தவர் சம எண்ணிக்கையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், இராணுவ ஆக்கிரமிப்பும் தான் இதனை சங்கரி அவர்களே நியாயப்படுத்துகிறீர்களா?
இடைக்கால தன்னாட்சி அதிகார சபையானது தமிழ் மக்களால் தான் முன்வைக்கப்பட்டது என்பதை அறியவில்லையா? சர்வதேச நாடுகளில் வைத்துத் தானே நகல் வரையப்பட்டது அது உங்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. அதைவிட்டு புதுக்கதை விடாதீர்கள் வயதாகிவிட்டால் வாலைச் சுருட்டிக்கொள்வது தானே வீண் வம்புக்கு ஏன் போவான்? தமிழ் மக்களின் தன்மான விடுதலைப்போராட்டத்திற்கு துணை நிற்காமல் விட்டாலும் அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்.
தியாகமும், தீரமும் நிறைந்த போராளிகளின் தலைவன் உலகில் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு தலைவன் தமிழர்களின் விடுதலைக்காக கழுத்திலே நஞ்சை ஏந்திக் காத்திடும் தலைவன் தன்னலமில்லாத அந்த தலைவனுக்குப் புத்திமதி கூறுகிறாயா? சங்கரியே உன் புத்தி எங்கே போனது? உமக்கு என்ன தகுதி இருக்கிறது? புத்தி கூறும் அளவுக்கு உமக்கு எங்கே யோக்கியதை இருக்கிறது? விடுதலை என்னவென்று தெரியாதா? வெற்று வேலையாகி விளையாட்டாகத் தழிழனது வீரத்தை சோதித்துப் பார்க்கின்றாயா? வேண்டாம் சங்கரி ஐயாவே! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஈழநாதம்