Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பன் மரணமும் புளுகு மூட்டைகளும் திசைதிருப்பல்களும்.....!
#1
<img src='http://www.thatstamil.com/images24/sheelarani-360.jpg' border='0' alt='user posted image'>

<b>வீரப்பனை வெளியே இழுத்து வந்த 'இலங்கை திட்டம்'</b>

கண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றி வந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம் வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல் போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்ப வைக்கதாகவும் 'பிட்டை' போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்ட திட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக் கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள் செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான் சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராய ஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள் ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம் மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழைய கோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரை ரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம் உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப் புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாக ஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப் பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லி ஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால் அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான் யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையை வெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில் கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்தது ஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்அன்ட்டௌன் 30 கி.மீ. தூரம் ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில் வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும் கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்த ஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

கைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில் ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனை சூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனை குறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும் வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படை டிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

thatstamil.com

++++++++++++++++++++++++++++++

20 வருடமா இலங்கைக்குள் நடப்பதையும் அங்கு செல்வதில் உள்ள ஆபத்தையும் அறியாதவனாக பால்குடியாக வீரப்பனை ஜெயலலிதா ஆட்சிகாட்ட நினைக்கிறது போல...பாவம் ஜெயலலிதா இன்னும் பால்குடிதான்..புலியைச் சீண்டுவதிலேயே குறியா இருக்கிறார் அம்மையார்.... சீறாது என்ற துணிவு போல.... இல்ல ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தும் இந்திய உளவுப்படைகளின் பேராசையின் பிந்திய திட்டமோ...??! உண்மை எது என்பதைச் சொல்ல வீரப்பன் இல்லைத்தானே...எனிக் கட்ட வேண்டியதுதானே விதம்விதமா சினிமா ஸ்ரோறி....! (our view) :evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அப்படியா செய்தி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<img src='http://www.vikatan.com/av/2004/oct/31102004/p9.jpg' border='0' alt='user posted image'>
[size=15]Üட்டிக் கழித்துப் பார்த்தால்
நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டிய
காவலர்கள்
வீரப்பனை
கொலை செய்திருக்கிறார்கள் என்பது
தெட்டத் தெளிவு.

<b>காக்கக் காக்க........
என்கவுண்டர்</b>
Reply
#4
நன்றி
[b][size=18]
Reply
#5
வீரப்பனை உயிரோடு பிடித்து நீதியின்முன் நிறுத்தி நியாயமான வழியில் விசாரணை செய்வதையே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் விரும்பினோம். இதற்கு முட்டுக்கட்டை என்பது அரசியல்வாதிகள்தான். ஒருவேளை வீரப்பன் உயிரோடு பிடிக்கப்பட்டிருந்தால் பல அரசியல் தலைகள் உருண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை. தினசரிகளுக்கு நல்ல தீனியாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக புதுப் புதுச் செய்திகள் கிடைத்திருக்கும்.
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply
#6
<b>3 நாள் சித்திரவதைக்கு பின் வீரப்பன் கொலை...?</b>

<img src='http://www.thatstamil.com/images25/team250.jpg' border='0' alt='user posted image'>
உண்மை கண்டறியும் குழு

வீரப்பனை பொறி வைத்துப் பிடித்தோம், ஆம்புலன்சில் வந்தபோது கொன்றோம் என்று அதிரடிப்படை கூறிக் கொண்டிருக்க, இது குறித்து விசாரிக்கச் சென்றுள்ள உண்மை அறியும் குழுவுக்கு பல திகீர் விவரங்கள் கிடைத்து வருகின்றன.

தமிழக அதிரடிப் படையினரிடம் ஏற்கனவே வீரப்பன் சிக்கிவிட்டதாகவும், அவனை 3 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்து,
உதைத்து கடும் சித்திரவதை செய்த பின்னரே பாடி கிராமத்தில் வைத்து அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் அப் பகுதியினர் உண்மை அறியும் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த 19 பேர் கொண்ட குழுவில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட இடம், பாடி, பாப்பாரப்பட்டி கிராம மக்கள், வீரப்பன் மனைவி, தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் என பலரிடமும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடிப்படை அதிகாரிகளை சந்திக்க சத்தியமங்கலம் சென்ற இவர்களை அதிகாரிகள் சந்துக்க மறுத்து விட்டனர். இதனால் அதிரடிப்படையினரின் கருத்தை இவர்களால் அறிய ¬முடியவில்லை.

அதே போல வீரப்பன் கும்பல் சுட்டுக் கொல்லப்பட்ட ஆம்புன்ஸையும் பார்வையிட இந்தக் குழுவுக்கு அனுமதி தரப்படவில்லை.

இந் நிலையில் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 3 கோணங்களில் எங்களது சந்தேகங்களை நாங்கள் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று குழுவின் தலைவரான சேஷய்யா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்தது போலத் தெரியவில்லை. அவனது சாவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

<img src='http://www.thatstamil.com/images25/team-muthulakshmi300.jpg' border='0' alt='user posted image'>
முத்துலட்சுமியிடம் விசாரணை

வீரப்பன் சுடப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை அதிகம் இல்லை என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பலமாக நம்புகிறார்.

இது தவிர 3 நாட்களுக்கு முன்பே வீரப்பனை அதிரடிப்படையினர் பிடித்து விட்டதாகவும், தங்களது காவலில் வைத்து அவனை சித்திரவதை செய்ததாகவும், அதன் பின்பே வீரப்பனை சுட்டுக் கொன்றதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விரிவாக நாங்கள் விசாரித்து வருகிறோம்.

<img src='http://www.thatstamil.com/images25/team-veerappan250.jpg' border='0' alt='user posted image'>
கிராமத்தினரிடம் விசாரணை

வீரப்பன் பிணத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துவோம். விசாரணை தொடர்பான விரிவான விவரங்கள் இன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும் என்றார் சேஷய்யா.

இந்தக் குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உளவுப் பிரிவினரும்,
அதிரடிப்படையின் உளவுப் பிரிவினரும் ஏராளமான அளவில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இந்தக் குழுவினரின் விசாரணைகளைக் கண்காணித்தனர்.

<b>அதிமுகவினர் தகராறு:</b>

இந்தக் குழுவினரை பல இடங்களில் அதிமுகவினர் வழிமறித்தும் தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக மலைப் பகுதி மக்கள் பேச முன் வந்தபோது அவர்களையும் அதிமுகவினர் தடுத்தனர். இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.

<b>எஸ்.பி. பேட்டி:</b>

இதற்கிடையே அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

காட்டில் வீரப்பன் ஆங்காங்கே பணத்தை புதைத்து வைத்திருப்பது உண்மைதான். அரசு அனுமதி கொடுத்தால் அந்தப் பணத்தை தேடி எடுத்து வர அதிரடிப்படை வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ã÷ò¾¢ Wrote:வீரப்பனை உயிரோடு பிடித்து நீதியின்முன் நிறுத்தி நியாயமான வழியில் விசாரணை செய்வதையே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் விரும்பினோம். இதற்கு முட்டுக்கட்டை என்பது அரசியல்வாதிகள்தான். ஒருவேளை வீரப்பன் உயிரோடு பிடிக்கப்பட்டிருந்தால் பல அரசியல் தலைகள் உருண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை. தினசரிகளுக்கு நல்ல தீனியாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக புதுப் புதுச் செய்திகள் கிடைத்திருக்கும்.


அவன் செத்தே இவ்வளவு செய்தி.. இருந்திருந்தால்...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#8
வீரப்பன் உடல் உறுப்பு ஆய்வு:"ரகசியம்' காக்கின்றனர் அதிகாரிகள்
கோவை:கோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனின் குடல், கணையம், கல்லீரல் ஆகியவை பரிசோதனைக்கு பின்பு சென்னைக்கு ஆய்வறிக்கை ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அதிரடிப்படை வீரர்களால் தர்மபுரியில் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் உடல் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வீரப்பனின் முக்கிய உடல் உறுப்புகள் குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் சில பகுதிகள் கோவை மற்றும் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவையில் இந்த ஆய்வுகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஆய்வு அறிக்கைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு கோவை மற்றும் சென்னையில் இந்த ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால் வீரப்பன் சாவில் மர்மம் நீடித்து வருவதால், இரு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையில் ஏதாவது வித்தியாசங்கள் தெரிகிறதா என்பதை பார்ப்பதற்காக இப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை தடயவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக இரண்டு அதிகாரிகள் மட்டுமே இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கைகள் நேற்று சென்னைக்கு ரகசியமாக

அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இது குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படமாட்டாது. மிக ரகசியமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றனர்
http://www.dinamalar.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)