11-02-2004, 08:41 PM
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவின் இடமாற்றம் தொடர்பாக... காங்கிரஸ் மத்திய ஆட்சியின் உள்துறை அமைச்சருடன் தர்க்கம் புரிந்த ஜெயலலிதா....அமைச்சருடனான தொலைபேசிப் பரிவர்த்தனையை.... அரச சத்தியப் பிரமாணத்துக்கு புறம்பாக களவாக ஒலிப்பதிவு செய்து... ஆளுநர் இடமாற்றத்தை எதிர்த்து நீதிமன்றில் பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு சாட்சியாக சமர்ப்பித்ததனால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக.... அவர் விட்ட சமீபத்திய அறிக்கையை கீழே காணலாம்....!
<b>நினைவாற்றலில் நான் நெப்போலியன் மாதிரி: ஜெயா</b>
மற்றவர்களுடன் பேசும்போது அவர்கள் கூறியதையும், முன்பு படித்தையும், பிறரது பேச்சையும் மீண்டும் அப்படியே நினைவுகூறும் நெப்போலியனைப் போன்ற மிகச் சிறந்த நினைவாற்றல் தனக்கு உண்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதியும் ராமதாசும் சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கவர்னர் இடமாற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று மீண்டும் இன்று மறுத்துள்ள முதல்வர், தான் நினைவுப்படுத்தித் தான் அந்த விவரங்களை தலைமைச் செயலாளரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இன்றுடன் கவர்னர் ராம்மோகன் ராவ் தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லும் சூழலில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர்களை நியமிக்கும் முன், மாற்றும் முன் மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரையை குப்பையில் தூக்கிப் போட்டுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.
டீ பார்ட்டி தரவில்லை என்ற மட்டமான காரணத்துக்காக மாநில ஆளுநரை மாற்றியிருக்கிறார்கள். இந்த உண்மை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான எனது உரையாடலின் மூலம் வெளியாகிவிட்டது.
முறையாக ஆட்சி நடத்தினால், எந்த கவர்னர் இருந்தால் என்ன?, ஜெயலலிதா ஏன் கவலைப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிரிஜா வியாஸ் கூறியிருக்கிறார்.
நான் வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்கி வருகிறேன். ஆனால், கவர்னரை மாற்றும் விஷயத்தில் மத்திய அரசின் தவறை நான் ஆதாரப்பூர்வமாக (தொலைபேசி உரையாடல்) வெளியிட்டுவிட்டதால் கிரிஜா வியாசுக்கும் அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் கவலையில் ஆழ்ந்து போயுள்ளன.
உச்ச நீதிமன்றம் ஆதாரம் கேட்டதால் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலின் சாரம்சத்தை ஒளிவு, மறைவில்லாமல் தாக்கல் செய்தோம். எங்களது இந்த வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற செயல் காங்கிரசுக்கும் கிரிஜா வியாசுக்கும் வேண்டுமானால் தவறாகத் தெரியலாம்.
எனக்கு முன்பு படித்ததை, மற்றவர்கள் சொன்னதை, பேசியதை அப்படியை முழுமையாக மீண்டும் நினைவுகூறும் நினைவாற்றல் உண்டு. இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு (கருணாநிதி, ராமதாஸ்) சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.
போர் விவரங்கள், வரைபடங்கள், எண்கள் அப்படியே மிகச் சிறப்பாக நினைவுகூறும் திறன் கொண்ட நெப்போலியன் மாதிரியானவர்கள் வரலாற்றில் பலர் உண்டு.
நீதித்துறைகளில் கூட பழைய தீர்ப்புகளை அப்படியே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் சட்ட நிபுணர்கள், நீதிபதிகள் இருக்கிறார்கள். அது போலத்தான் எனக்கும், பழைய சம்பவங்களை, உரையாடல்களை மறக்கமால் அப்படியே நினைவு கூறும் திறன் உண்டு.
உண்மை இப்படி இருக்க, அமைச்சருமான பேச்சை நான் டேப் செய்தேன் என்று கருணாநிதி போன்றவர்களின் மோசடி பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
உரைடாலை டேப் செய்த ஜெயலலிதா, இதனால் சட்டரீதியான பிரச்சனை வரும் என்பதால் அதை மறைக்க முயல்வதாக நேற்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். டான்சி வழக்கில் ஆவணத்தில் இருப்பது தனது கையெழுத்தே இல்லை என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன ஜெயலலிதா என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக ஜெயலலிதா இன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->