Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2
#1
அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.

இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.

IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.

நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/
.

.
Reply
#2
சிவில் அணு உலைகளை தான் சர்வதேச ஆணையம் பார்வையிட இந்தியா அனுமதி தந்துள்ளது. கல்பாக்கம் போன்ற ராணுவ உலைகளை பார்வையிட அனுமதி இல்லை. இடது சாரி கட்சிகளின் தரகர் அரசியலை கொண்டு இந்த விழ்யத்தை அலச வேண்டாம்
.
.
Reply
#3
காத்ரீனா போன்ற புயல்கள் தாக்கிய நேரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை நினைவுபடுத்தி புஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்....

உலகின் நெ. 1 வல்லரசே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவை கவுரவப்படுத்தி இருப்பதை சீனாவைத் தாய்நாடாக நினைப்பவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.....
,
......
Reply
#4
Luckyluke Wrote:காத்ரீனா போன்ற புயல்கள் தாக்கிய நேரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை நினைவுபடுத்தி புஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்....

உலகின் நெ. 1 வல்லரசே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவை கவுரவப்படுத்தி இருப்பதை சீனாவைத் தாய்நாடாக நினைப்பவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.....

இது கற்பனையான ஒரு விசயத்தை பற்றிய கருத்து.!

ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதற்கான தருணத்தை பார்த்து நிற்க்கும் நேரம். கற்பனையான கருத்துக்களால் மக்களை திசை திருப்பாதீர்கள்.

கத்திரீனாக்கு இந்தியா உதவியது எண்றால் காரணம் இந்தியாவின் வலிமையை அமெரிக்காவுக்கு காட்டுவதற்காக, அமெரிக்கா நண்றி சொல்கிறதெண்றால். அமெரிக்கா அதைப்புரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ளாமை. அது நல்ல நடிப்பு.

இண்றய இந்தியாவின் முக்கிய தேவை. வல்லரச நாடுகள் வரிசையில் ஒரு இடம். அதற்கான அடித்தளமாக வேண்டியது ஐநா நிரந்தர உறுப்புரிமை. கொடுக்க விடமாட்டோம் என்கிறது அமெரிக்கா. இந்தியா வேறுவளைகளில் அணுகும் முறைதான் உலகநாடுகளிற்கு உதவும் பொறுளாதார ஆள் உதவிகள்.

அமெரிக்கா இந்தியாவின் நண்பன் எண்றால். பிரான்ஸ், இங்கிலாந்துபோல அணு உலை சோதனைக்கு இந்தியாவையும் உட்படுத்த மாட்டார்களே.

இன்னும் தீவிரமாக சொன்னால். வெளியுறவுக் கொள்கையில் இருவேறு முனைகளான அமெரிக்கா இந்திய நல்லுறவு என்பது, ரஸ்ய அமெரிக்க சந்திப்புக்கோ. இல்லை பகைமைக்கு நிகரானது.

இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.

விளக்கம் போதுமா.! :wink:
:::::::::::::: :::::::::::::::
Reply
#5
அமெரிக்கா ஒரு சுய நலம் பிடித்த நாடு என்று அனைவரும் அறிந்ததே , எங்கள் சுய நலம் கருதி அவர்க்ளோடு தற்போது உறவு பேனுவதில் என்ன தவறு ?? இது வியாபாரம்
.
.
Reply
#6
rajathiraja Wrote:சிவில் அணு உலைகளை தான் சர்வதேச ஆணையம் பார்வையிட இந்தியா அனுமதி தந்துள்ளது. கல்பாக்கம் போன்ற ராணுவ உலைகளை பார்வையிட அனுமதி இல்லை. இடது சாரி கட்சிகளின் தரகர் அரசியலை கொண்டு இந்த விழ்யத்தை அலச வேண்டாம்

அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.

இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும்.

இது நடைபெறக்கூடாது என்பதுதானே எமது அவா.
.

.
Reply
#7
[quote="அகிலன்"]இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.[quote]

ஆமா... எங்களுக்கு யாரு நண்பர்கள்னு இவங்களுக்கு தான் தெரியுமாம்... எங்களுக்கு தெரியாதாம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#8
rajathiraja Wrote:அமெரிக்கா ஒரு சுய நலம் பிடித்த நாடு என்று அனைவரும் அறிந்ததே , எங்கள் சுய நலம் கருதி அவர்க்ளோடு தற்போது உறவு பேனுவதில் என்ன தவறு ?? இது வியாபாரம்

செய்யலாம் ஆனால் அதை சரியானது எண்று சொல்லாதீர்.

அமெரிக்கா விரித்திருப்பது வலை. இந்தியா விழுந்து விடக்கூடாது எண்று இடதுடது சாரிகள் எச்சரிப்பதில் என்ன தவறு வந்தது.?

பெரும்பாலான அமெரிக்காவிற்க்கு எதிரா வளரும் தொழில்களை அல்லது சக்திகளை ஒடுக்க அவர்கள் போடும் திட்டம்தான் இந்த ஒப்பந்தங்கள். அதில் உள்ள சரத்துக்களை வைத்தே தடை போடும் சூள்ச்சி அவர்களிடம் உண்டு.

இதே ஒப்பந்தத்தைக்காட்டி அமெரிக்க ஐநா உறுப்புரிமை தரவேண்டியதில்லை நாங்களே இந்தியாவின் அனுதாபிகள், அவர்களின் வளற்சிக்கு உதவுபவர்கள். அவர்களிற்க்கு வேண்டிய உறுப்புரிமையை எங்களூடாகவே அவர்கள் பயன் படுத்தலாம் எண்று சொன்னாலும் ஆச்சரியப்படவேண்டி இருக்காது.

காரனம் இண்று அமெரிக்க ஆதரவு நாடுகள் அருகிவிட்டது. பிரான்ஸ் நடுநிலமை நாடு. பிரித்தானியா, அமெரிக்கா இரண்டும் நட்புநாடுகள். ரஸ்யா, சீனா நட்புநாடுகள். ஆகவே பிரான்ஸை எப்போதும் அமெரிக்கா சமாதானமாக வைத்த்ருந்து காரியத்தை சாதிப்பது. ஆனால் இந்தியா இந்த அணிகளில் சேர்ந்தால் ஒருபோதும் அமெரிக்காவுடன் சேரப்போவதில்லை. அப்படியானால் ஐநாவின் முடிவுகளில் அமெரிக்கா ஆதிக்கம் குறைந்துவிடும். உலகபோலீசாரின் நிலமை கவலைக்கிடமாகும்.

ஆதலால் அமெரிக்கா இந்தியாவை பெட்டிக்குள் அடக்கி வைக்கவே பாடுபடும்.

இதன்மூலம் சொல்வது என்ன எண்றால். இந்தியா அமெரிக்க ஜனாதிபதியை கூப்பிட்டு மகிழ்விக்கலாம், அது அவர்கள் விருப்பம், ஆதோடு ஒப்பந்தமும் செய்யலாம். அது நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது. அதனால் பொருளாதாரத்தையும் பெருக்கலாம். அதனால் இந்தியா வளற்ச்சி முடக்கப்படும் அபாயமும் பொரும்பாலும் உள்ளது.!

இதைச் சொல்ல வரும் மக்கள் இந்திய எதிரிகள் இல்லை.
:::::::::::::: :::::::::::::::
Reply
#9
Luckyluke Wrote:
அகிலன் Wrote:இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.

ஆமா... எங்களுக்கு யாரு நண்பர்கள்னு இவங்களுக்கு தான் தெரியுமாம்... எங்களுக்கு தெரியாதாம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? Confusedhock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:
:::::::::::::: :::::::::::::::
Reply
#10
அகிலன் Wrote:
Luckyluke Wrote:
அகிலன் Wrote:இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.

ஆமா... எங்களுக்கு யாரு நண்பர்கள்னு இவங்களுக்கு தான் தெரியுமாம்... எங்களுக்கு தெரியாதாம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? Confusedhock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:

ஏன்- அகிலன் இனியும் இந்த லக்கிலுக் கேஸுகளூக்கு பதில் சொல்லி ஆகணுமா?

எனக்கு என்னமோ -அவங்க- வாயில வந்தது எல்லாதையும் பேசி -யாரும் எங்களுக்கும் - பதில் சொல்லட்டுமே என்னு பேசுறாங்க போல இருக்கு-!! 8)
-!
!
Reply
#11
அகிலன் Wrote:அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? Confusedhock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:

விடுங்கோ அகிலன்!!
இந்த ஆட்களை விட்டுவிட்டு, பிரியோசனமான விடயங்களை கதையுங்கள்!! மரியாதை கொடுத்தால் தானே பிரச்சனை!
[size=14] ' '
Reply
#12
அது சரி அகிலன் ஈழத்தவருக்கு இருக்கிற இந்தியாவின் மீதான பற்றும் இந்திய வளற்ச்சியின் அக்கறையும் இந்தியர்களான சிலருக்கு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களிற்க்கு நாட்டின் வளர்ச்சி என்னதை விட பணம்தான் முக்கியமாம்.....! அதனால் இவர்கள் வளர்ச்சியை பற்றியோ இல்லை அபாயங்கள் பற்றியோ அறியாமையில் உழலுகிறார்கள்..... (அதில் கவலை படதேவைப்படாதவிடயம் என்னவெண்றால்.... எல்லோருமே இப்படி இல்லை.). இங்கு வரும் இவர்களுக்கு பதில் கொடுத்தோ இல்லை விளங்கப்படுத்தியோ பிரயோசனம் இல்லை..... விட்டுதள்ள பட வேண்டிய கூட்டம்.
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)