Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை
#1
(2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை
[புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்]
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன.

சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

திருமலை மூதூர் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கிராமங்களான கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், சேனையூர், ஈச்சிலம்பற்று உள்ளிட்ட கிராமங்களில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 12 தமிழர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் சடலங்கள் என மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே மூதூரில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வட்டம் என்ற முஸ்லிம் கிராமம் மீது விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டுள்ளார். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிந்திய தகவல்களின் படி விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா தரப்பில் பதில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகென்ன நேற்று தெரிவித்திருந்தார்.

இன்றும் தாக்குதல் நடத்துவதை ஒப்புக்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்தே முப்படைகள் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ளார்.

"கடற்படையினர் பாரிய சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையினர் விமானப் படையினரது ஆதரவைக் கோரியிருந்தனர்" என்றும் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கம் போர்ப் பிரகடனம் எதனையும் வெளியிட்டுள்ளதா என்பதை அறியத்தரவும்" என்று நேற்று திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் அறிவிக்கப்படாத போரைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் சிங்கள முப்படைகளும் தாக்குதலை 2 ஆம் நாளாக நடத்தி வருகின்றன.

www.puthinam.com
Reply
#2
இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
,
,
Reply
#3
இன்று மீண்டும் கிபிர் தாக்கி மேலும் 4 பலி, 14 பேர் காயம்.
http://www.sankathi.com/index.php?option=c...15c4c656f23cf4a
! ?
'' .. ?
! ?.
Reply
#4
தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து வெளியேற தயாராகி வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள்...
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
Reply
#5
திருமலையில் நேற்றிலிருந்து விமான சத்தங்கள் குறைந்தாலும் நகர மக்கள் றோட்டுக்கு வருவதுக்கே அஞ்சுகிறார்கள் பிள்ளைகளை பாடசாலைக்கே விடுகிறார்கள் இல்லை அரச நிறுவனங்கள் 12மணியுடன் மூடப்படுகிறது மாலை 2மணிக்குப்பின் மக்கள் நடமாட்டமே றோட்டில் இல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன....... ஒரு யுத்த சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்.....இதுதான் இண்டைக்கு திருமலையின் நிலமை.............திருமலையிலிருந்து முகத்தார்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
முகத்தார் திருமலையில் என்ன செய்கிறிர். எட்டப்பர்களும் பேரினவாதிகளும் நிப்பார்கள்.கவனம்.
வன்னிக்குப்போய் நில்லும்.
! ?
'' .. ?
! ?.
Reply
#7
MUGATHTHAR Wrote:திருமலையில் நேற்றிலிருந்து விமான சத்தங்கள் குறைந்தாலும் நகர மக்கள் றோட்டுக்கு வருவதுக்கே அஞ்சுகிறார்கள் பிள்ளைகளை பாடசாலைக்கே விடுகிறார்கள் இல்லை அரச நிறுவனங்கள் 12மணியுடன் மூடப்படுகிறது மாலை 2மணிக்குப்பின் மக்கள் நடமாட்டமே றோட்டில் இல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன....... ஒரு யுத்த சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்.....இதுதான் இண்டைக்கு திருமலையின் நிலமை.............திருமலையிலிருந்து முகத்தார்

எதுக்கும் உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்!! திருமலையில் இப்போது ஜேவிபியின் காடையர் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கின்றது
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)