Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடுமாற வைக்கும் உறவுகள்
#21
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இருக்கலாம் தான் ஆனால் படிக்க போகக்கூடாது வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டாரே அண்ணா.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சாறி..எனக்கு இப்படி மனைவி சொல்லை கேட்டு ஆடும் அண்ணர்களை சுத்தமாக பிடிப்பதில்லை..
:evil: :evil:
வித்திய..முடிந்த வரை அண்ணரை மாற்ற பார்க்கலாம்..
முடியா விட்டால்..நம்பிக்கையானவர் என்றால்..அவருடனேயே போய் வாழலாம்..பட்..நான் சொல்லி என்ன..அவங்க தான் முடிவு எடுக்கணும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்படிப்பட்ட அண்ணண்களை யாருக்கு தான் பிடிக்கும் சகி? நம்பிக்கைக்குரியவனுடன் போய் வாழலாம் தான். பட் அவரும் ஓர் அண்ணன் என்றா நிலை என்பது தடுக்கின்றது சகி.
நீங்கள் சொல்லித்தான் முடிவு எடுக்கணும் என்று இல்லை ஆனால் முடிவு எடுக்க தடுமாறுகிறவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

Reply
#22
ராமா அக்கா.. கதை நல்லா இருக்கு..வித்யாவை அவ காதலனோடு சேர்த்து வையுங்க.......
Reply
#23
ரமா
களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல. திருமணம் முடிந்து குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது நிச்சயம் நெருங்கிய உறவுகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்களின் வருங்காலச் சந்ததியினருக்கு இவை அவசியம். இதனை யாரும் அனுபவித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல. அடுத்தவர்களைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

இது கற்பனைக்கதையாக இருந்தாலென்ன, நாளாந்தம் நடக்கும் கதையாக இருந்தாலென்ன எதனையும் ஆலோசித்து முடிவெடுப்பதுதான் நல்லது.

வித்தியா கூறியதுபோல் இன்னும் 3 வருடங்களுக்குள் அவளின் வாழ்வில் ஒரு திருப்பம் வரத்தான் போகிறது. அவள் வசிப்பது தாயகம் என்றால் நிலமை வேறாக இருக்கலாம். ஆனால் அவள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பதால் தனது வாழ்க்கையை, வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை வித்தியாவுக்குத்தான் உண்டு.

"அன்பால் எவரையும் வெல்லலாம்" இதுவே எனது கருத்து.
நன்றி

Reply
#24
Selvamuthu Wrote:ரமா
களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல. திருமணம் முடிந்து குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது நிச்சயம் நெருங்கிய உறவுகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்களின் வருங்காலச் சந்ததியினருக்கு இவை அவசியம். இதனை யாரும் அனுபவித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல. அடுத்தவர்களைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

இது கற்பனைக்கதையாக இருந்தாலென்ன, நாளாந்தம் நடக்கும் கதையாக இருந்தாலென்ன எதனையும் ஆலோசித்து முடிவெடுப்பதுதான் நல்லது.

வித்தியா கூறியதுபோல் இன்னும் 3 வருடங்களுக்குள் அவளின் வாழ்வில் ஒரு திருப்பம் வரத்தான் போகிறது. [b]அவள் வசிப்பது தாயகம் என்றால் நிலமை வேறாக இருக்கலாம். ஆனால் அவள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பதால்.

"அன்பால் எவரையும் வெல்லலாம்" இதுவே எனது கருத்து.
நன்றி



இன்னும் அண்ணா அண்ணி என்று வாழப்போவது ஒரு சிறிய காலம். அதற்குள் தன் வாழ்நாளை சிறைப்படுத்தி பல சந்தர்ப்பங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். அவை அவர்கள் திருந்தியோ அல்லது மனம்மாறியோ வரும் போது காலம் கடந்திருக்கும். அதன் பின் அவள் வாழ்வு சீரழியும்போது இவர்கள் வந்து நிற்பார்களா அல்லது தமது குழந்தை அவர்களின் வாழ்க்கை என்று இவளை ஒதுக்குவார்களா? இவள் அவர்களிற்கு ஒரு பாரம் என்றே தள்ளிவைப்பார்கள். அதன் பின் படும் வேதனைகள்??????

தாயகத்திலோ புலம்பெயர்ந்து வாழ்ந்தாலோ தன் வாழ்வு பற்றி தீர்மானிக்க வேண்டிய நியாயமான உரிமை அது ஆணோ பெண்ணோ அனைவருக்கும் இருக்க வேண்டும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#25
ரமா
நீங்கள் கூறும் உரிமை சரி. நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமக்குள் இருக்கும் குடும்பப் பிணைப்புக்கள், பாசங்கள் எல்லாம் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கின்றன. காலம் மாறி வருகின்றதுதான் ஆனால் நாம் வாழும் நாட்டவர்கள்போல் நமது பழக்க வழக்கங்கள் முற்றாக மாறிவிடவில்லை.

இன்னும் 25 வருடங்களின் பின்னர் என்றால் கதை வேறாக இருக்கலாம் ஆனால் இது தற்காலக் கதைதானே!

Reply
#26
செல்வமுத்து Wrote:ரமா
களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல.

இந்த கதையைப் பொறுத்தவரையில்... எனது கருத்தும் இதுவே.. <b>அண்ணன் அடித்துவிட்டான், என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல...அண்ணன் அடித்துவிட்டான்.. அதட்டிவிட்டான் என்பதற்காக அண்ணன் கொடியவனும் இல்லை.</b>

இங்கு கருத்துக்கூறியவர்களை வைத்துப்பார்த்தாலே நன்கு புரிகின்றது. அனுபவம் கூடியவர்களின் கருத்து எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. உறவுகளை வெறுப்பது எப்போதும் நியாயமாகிவிடாது. இப்படியான ஒரு விவாத்ததை படிப்பவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு முடிவினை எடுக்க உதவும் என்பது தான் கதை புனைந்தவரின் நோக்கம். ஆதலால் சிறியவர்கள் பெரியவர்களின் கருத்துக்களுக்கு வழிவிட்டு இளையோர்கள் நல்ல செய்தியை பெற வழிசெய்யலாமே.. :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
Jenany Wrote:ராமா அக்கா.. கதை நல்லா இருக்கு..வித்யாவை அவ காதலனோடு சேர்த்து வையுங்க.......

நன்றி ஐனனி உங்கள் கருத்துகளுக்கு. விதி எப்படி விளையாடப்போகுது என்று பார்ப்போம்.

Reply
#28
வீட்டை விட்டு் வெளியில் வந்த பல பெண்கள் சீர்குலைந்து போயிருக்கிறார்கள். காதலனுடன் போகலாம் தான் ஆனால் அவருக்கும் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. ஆகவே காதல் கதையை புறம்பாக வைப்போம். வித்தியா தனது எதிர்காலத்தை நினைத்து என்ன செய்யவேண்டும். அதாவது மற்றவர்களின் உதவியை நாடி அண்ணனின் மனதை மாற்ற முயலமா? இல்லாவிடின் வெளியில் போய் தனிய வாழ்வது சரியா?

எல்லோருடைய கருத்துகளுக்கும் நன்றிகள்.

Reply
#29
ம்ம் நன்றாக இருக்கு உங்கள் கதை ரமா. வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்க. ம்ம் தாயாரின் பிரிவால் துயருற்றிருந்த அண்ணா தங்கையின் காதல் விவகாரம் அறிந்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் அதனால் தான் போல் அடித்து இருக்கார். இருந்தாலும் அடித்தது ரொம்ப ஓவர். நான் நினைக்குறன் ஒரு நல்ல சூழலில ஒருவரின் தலையீடுமின்றி அண்ணாவிற்கு தனது நிலைமையை எடுத்து கூறி.. அண்ணாக்கும் அவகாசம் கொடுத்து.. அவரை புரிய வைக்க முயற்சி செய்யலாம். அதற்கு அண்ணா சம்மதிக்கவிட்டால்.. வீட்டை விட்டு வெளியேறி தனது வாழ்வை தானே அமைக்கிறது தான் நல்லது. வாழப்போவது அவதானே.. அடுத்தவரின் விருப்பத்தை விட அவாவின் விருப்பம் தானே முக்கியம். இருந்தாலும் எஞ்சி இருக்கிற ஒரே ஒரு உறவு அண்ணா தான் அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது.
<b> .. .. !!</b>
Reply
#30
அண்ணன்மார் காதலித்து கைப்பிடித்திருந்தாலும் தத்தமது சகோதரிகள் காதலிப்பதை ஏற்க மறுப்பதற்கான காரணம் தான் என்னவோ? Cry Cry :evil:
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)