Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக
#1
மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் பலி. 8பேர் காயம்.

(திருகோணமலை)
நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடற்சியாக இன்றும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் வாழ்விடங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. விமானத்தாக்குதல்கள் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் கடற்படை பீரங்கித்தாக்குதல்கள் என இவை தொடர்கின்றன.

இன்று காலை திருமலை விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிமீது ஆட்லெறி மற்றும் விமானத்தாக்குதல்கள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் இதுவரை பதின்நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இது இவ்விதமிருக்க இன்று காலை 8.10அளவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் இறங்கு துறைமீது சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இவருவர் சிறிலங்காக் கடற்படையினர் எனத் தெரியவருகிறது.

]http://www.battieezhanatham.com/2005/modul...sid=6971[b]</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)