Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் மனிதர்கள்
#1
இன்று மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிகொண்டிருக்கும் போது வான் ஒன்றில் வந்த இருவர் என்னை அழைத்து ஓர் டிஜிற்ரல் கமறாவை காண்பித்து 350 டொலர் வாங்குகிறாயா என கேட்டார்கள். நானும் கிட்ட போய் பார்த்தேன் அது ஓர் Canon EOS 6.3MP Digital Rebel Camera கமரா. அதன் சந்தைப்பெறுமதி கிட்டத்தட்ட 1200 டொலர்கள். நானும் நினைத்தேன் அதிஸ்டம் என்பது இப்படியா அடிக்க வேண்டும் என.... எல்லாம் புதிது போல பக்கிங் சுப்பராக இருந்தது. கமறாவை எடுத்து கையில் தந்தார்கள் பார்க்கும்படி. ஆனால் கமறா பொலித்தீனினால் சுற்றி இறுக்கமாக ஒட்டப்பட்டிருந்தது. நான் அப்பொலித்தீனை அவிழ்க்க முற்பட்ட போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்... "நீ வாங்காமல் விட்டால் தாங்கள் மற்றவர்க்கு விற்க முடியாதாம் என" இவ்வளவு நேரமும் ஏமாந்த சோனகிரியாட்டம் நின்ற எனக்கு அப்போ தான் மூளையில் ஏதோ பொறி தட்ட ஆரம்பித்தது. பின்னர் கமறாவை உற்று பார்த்தேன் அது ஓர் உண்மையான கமறாவே கிடையாது. அது ஓர் விளையாட்டுப்பொருள். அப்போ தான் என் அதிஸ்டம் என்னை விட்டு விலகியதையும் அதே சமயம் நேரவிருந்த துரதிஸ்டம் விலகியதையும் புரிந்து கொண்டேன்.

இப்படியான சம்பவங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ நடந்திருந்தால் இங்கே அறிய தாருங்களேன் :!: :!:
Reply
#2
எங்கட ஆட்கள் தான் இப்படி ஏமாறுகிறது பாருங்கோ. சந்தை விலையுடன் ஒப்பிட்டு குறைவாக இருக்கிறது என்று ஏமாறுகிறது.
<b> </b>
Reply
#3
ஜரோப்பாவில் நிறையவே இப்படியான விளையாட்டுகள் நடக்கின்றது.கூடுதலாக கிழக்கு ஜரோப்பியர்களே இப்படியான செயலில் ஈடுபடுகின்றனர்
; ;
Reply
#4
ஏமாறுபவ÷கள் இருக்கும் வரை ஏமாற்றுபவ÷கள் இருப்பா÷கள்.
<b> </b>
Reply
#5
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ¸ûÙô§À¡ò¾¨Ä ²Á¡ò¾¡§¾í§¸¡¼¡
[b]
Reply
#6
[size=18]சுமார் 2 மாதத்திற்கு முன்பு புதிதாக London வந்த என் நண்பருக்கு 60 Poundsக்கு ஒரு Colour TVயை Tottenham court Roadல் ஒரு "புத்திசாலி" தள்ளிவிட்டான். நண்பருக்கோ London வந்து 2 மாதத்தில் TV வாங்கிவிட்ட புளுகு. :mrgreen: படாத பாடெல்லாம் பட்டு எப்படியோ Londonல் இருந்து Kentற்கு கொண்டு சே÷த்தா÷. எம்மையும் அழைத்தா÷ "Show" காட்ட.. :wink: ஆனால் தலைகீழாய் வைத்தும் TV வேலை செய்யவில்லை!! ஒரு mechanic நண்பன் TVயை கழற்றி பா÷க்க முற்பட TV நண்பன் "எடே! எடே!! 5 வருச guaranteeடா! கழட்டாதே" என தடுக்க.. இறுதியில் திறந்து பா÷த்தால் அந்தப்புதிய TVக்குள் அடுக்கடுக்காக செங்கட்டிகள் வைத்து அழகாக sellotape ஒட்டப்பட்டிந்தது!!! :roll: பிறகென்ன? கோவிந்தா!! கோவிந்தா!!!
<< j e e n o >>
Reply
#7
இஞ்சை போட்டதை அப்படிய அபேஸ் பண்ணிப்போட்டியள்? ம் பாப்பம் எங்கைபோய் முடியுதொண்டு????
Summa Irupavan!
Reply
#8
பிரித்தானியாவின் இலண்டன் அரோவ் பகுதியில் அமைந்திருந்த பிரபல தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரித்தானியப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதால் 15000 ஈழத்தமிழ் உறவுகள் நிர்க்கதியாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மேற்படி சட்டத்தரணிகள் நிறுவனம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களுக்குரிய தமிழ் சட்ட ஆலோசனைக்காக பிரித்தானிய அரசால் வழங்கப்படும் பணத்தைத் தவறாகக் கையாண்டதுடன் பல மில்லியன் பவுண்டுகளை வருமானமாக சட்டரீதியற்ற முறையில் திரட்டியதாகப் பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.


மேற்படி தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனத்தில் கடமையாற்றியவர் ஒருவர் கொடுத்த இரகசியமான தகவலையடுத்தே இந்த நிறுவனம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் சட்டத்தரணிகள் நிறுவன உரிமையாளர் தமிழ்த்தேசியத்திற்குப் பங்களிப்புச் செய்பவர் போன்ற ஒரு மாயை பலர் மத்தியில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தில் சுமார் 6000 ஈழத்தமிழர்களின் அகதிகள் தொடர்பான கேவைகள் மட்டும் இருந்ததாகவும் சுமார் 10000 க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்திருந்ததாகவும் சொத்து முதலீட்டாளராகவும் அண்மைக் காலத்தில் தன்னை விஸ்தரித்துக் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனங்களில் அதிக கோவைகளை வைத்திருந்த பிரபல முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர்;; வடமாரட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொன்டவரும் பிரபல ஆசிரியர் ஒருவரின் மகனும் ஆவார்.

********
இந்தச் செய்தி தொடர்பாக இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கெட்டபோது தமிழ்த் தேசியத்திற்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத நிறுவனம் பாரிய பங்களிப்புச் செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி மிகவும் மகிழ்ச்சியைத் தந்ததாகவும் தெரிவித்தார்.

இவருடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிதிக்கணக்குகளில் உள்ள மிகப்பெரும் முரண்பாடுகளும் வியாபாரப் போட்டியுடன் கூடிய இனப்பாகுபாடுமே காரணம் என்று தெரியவருகின்றது.




© 2004 Niவாயசளயயெஅ.உழஅஇ யுடட சiபாவள சநளநசஎநன
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பிரித்தானியாவின் இலண்டன் அரோவ் பகுதியில் அமைந்திருந்த பிரபல தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரித்தானியப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையில் இந் நிறுவனம் 25/11/2004 அல்லது 26/11/2004 அன்று மூடப்பட்டது.

இங்கு பல பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது.
ஒரு இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த கடிதத்தை உரியவருக்கு தெரியப்படுத்தாமல் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்காமல் அந்த இளைஞரிடமிருந்து மீள் விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கூறி ஆயிரக்ககில் காசு வாங்கியுள்ளா÷.

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தவருக்கு காலத்தை இழுத்தடித்து அந்த கடவுச்சீட்டில் வேறொருவ÷ யே÷மனிக்கு சென்று வர உதவியுள்ளா÷.
<b> </b>
Reply
#10
அதெபோல் கடவுச்சீட்டில் வேறொருவ÷ யே÷மனிக்குவருவது தற்போது நித்தம்
நடைபெறுகின்றது
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)