Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காரீயம் கண்ணுக்கும் ஆபத்து தான்..
#1
காசோலின் மற்றும் பெயிண்ட் கலவைகள் இன்னும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படும் காரீயம் மனிதர்களின் உடல் நலனுக்கு ஆபத்தானவை. மனித உடம்புக்குள் ஊடுருவும் காhPயம் எலும்புகளில் சேர்த்து வைக்கப்படும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை இதுபோன்று காரீயம் சேரும் போது, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக ஆரம்பிக்கும். இப்படி வெளியாகும் காரீயம் மற்ற உறுப்புகளுக்கு ஆபத்தாக மாறும். ரத்த ஓட்டத்தில் காரீயம் கலக்கும் போது உயர் ரத்த அழுத்த சிக்கல்கள், நினைவாற்றல் குறைவு, கண் பார்வை கோளாறு போன்ற சிக்கல்கள் உண்டாகும்.
காரீயம் வெளிப்பாடு வெவ்வேறு அளவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கண் லென்சுகளில் காரீயம் சேரத் தொடங்கும். இன்னொருபுறம் கல்சியம் ஈர்ப்பு தன்மையில் குறுக்கீடுகள் தோன்றும். கால்சியம் ஈர்ப்பு ஒழுங்காக இருந்தால் தான் கண் லென்ஸ் ஆரோக்கியமாக இருக்கும். காட்ராக்ட் காரணமாக அகற்றப்பட்ட கண்களை சோதனை செய்து பார்த்த போது அதில் காhPயம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)