Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடக்குமுறைக்குள்ளிருந்து ஒரு குரல்
#1
நாடும் நடப்பும் - 6
சங்குவேலிச் சாத்தன் 09.12.2004, வியாழக்;கிழமை.


சாத்தனுக்குச் சென்ற வாரமும், இவ்வார ஆரம்பமும், ஒருவித நெருக்குவார காலமாகவே இருந்தது. ஒருபுறத்தில்;, இணயத்தளத்தில் விடயங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுவந்த பிரச்சனைகளும், சுவீடனின் உப்சலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் ஷார்க்கினது தொடர் விரிவுரைகளைக் கேட்கச் செல்லவேண்டிய நிலையும். மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது மாவீரர் தின உரையில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பாகச் சிங்கள தேச ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் திசை திருப்பல்களும், சிங்கள தேசத்தால் கடைப்பிடிக்க முற்பட்டுவரும் தந்திரோபாயமும்தான் இந்த நிலைக்குக் காரணங்களாகும்.

இணையத்தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், சென்ற வாரம் இணையத்தளத்தின் ஐவெநசநெவ யஉஉநளள இனை ளுரவெநட நிறுவனம் எந்தவித சாதாரண காரணமின்றியும், சட்டவிரோதமாகவும் பல நாட்கள் தொடர்ந்து துண்டித்து வந்தமையானது, சாத்தனுக்குச் சற்றுச் சிந்திக்கவேண்டிய விடயமாகவே இருந்தது
சாத்தன் “நாடும் நடப்பும்” என்பதன்கீழ் பலவற்றைப் பற்றியும் எழுதுபவைகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை அவன் நன்கு அறிவான். அதேநேரத்தில், இந்த இணையத் தளத்தினில் எழுதும் ஏனையவர்களும், சாத்தனைப்போல், தமிழ்த் தேசத்தினதும், அதன் மக்களதும் நன்மைகள், முன்னேற்றம் என்பவை கருதி, உண்மையான விடயங்களை அப்படியே கூறி, கேள்விகளையும் எழுப்பி, மக்களிடையே முன்னேற்றத்திற்கான கருத்துக்களைப் புகுத்தி வருவது, பிற்போக்குவாதிகளுக்கும், கைக்கூலிகளுக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பதில் சாத்தனுக்கு எந்தவித ஐயமும் இல்லை.
அரச அமைப்புகளாயினும் சரி, அரச சார்பற்ற அமைப்புக்களாயினும் சரி, சமூகப் பெரியோர்களாகக் கருதப்பட்டு வருபவர்களாயினும் சரி, மிகப் பெரும்பான்மையினர் சுயநலம்; மிகுந்தவர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், கைக்கூலித் தன்மையுடையவர்களாகவும்தான் உள்ளனர். இது அவர்களது அறியாமையினால் உருவானது. இதனால், யாழ் குடாவிலிருந்து இயக்கப்பட்டுவரும் ஒரு இணையத்தளத்தினில் பல்வேறு விடயங்களும் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்க, இன்று அதிகாரத்தில் இருக்கும், வைக்கப்பட்டுவரும் இவர்கள் சுலபமாக ஈடுபடமுடியும், ஓரளவிற்கு வெற்றிகாணவும் முடியும்.

ஆனால், இந்த இணையத் தளமானது இப்படியான முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத் தேவையானவற்றைச் செய்து முடித்துள்ள நிலையில், அடுத்த வாரம்முதல் மீண்டும் சாத்தன் ஒவ்வொரு ஞாயிறு நள்ளிரவிலும் உங்களைப் புதிய செய்திகளுடன் சந்திக்கவுள்ளான் என்பதில் சாத்தனுக்குப் பெருமகிழ்ச்சியே.
இந்த இணையத்தளம் இயக்கப்பட்டுவரும் இடமானது, யாழ் நகரிலிருந்து 8 கிலோ மீற்றர்கள்வரை தொலைவிலுள்ள கிராமமாகும். யாழ்; குடாவிற்கான தொலைபேசி வசதிகள் பல வருடங்களுக்கு மேலாகக் கொடுக்கப்பட்டுள்ளபோதும், இந்தக் கிராமப் பகுதிகளுக்கு இன்றுவரை வுநடநிhழநெ உயடிடந இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில வருடங்களில் அது நடைபெறும் என்பதற்கும் சாத்தியம் இல்லை. இதனால் உயடிடந இல்லாத சாதனங்களுடாகவே, இணையத்தளத்தினில் விடயங்களை வெளியிடவேண்டியுள்ளது.

இந்தக் கிராமப் புறத்தினில், ஒரு நாளைக்குக் குறைந்தது 5 தடவைகளாவது மின்சார விநியோகம் துண்டிக்கப்படும். ஒவ்வொரு தடைவையும் துண்டிப்பு நிகழ்ந்து 3 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்களின் பின்னர்தான் மீண்டும் மின்சார விநியோகம் கிடைக்கும். சில வேளைகளில் தொலைபேசி மூலம் மின்சார சபையைத் தொடர்பு கொண்டு அறிவிப்பைச் செய்து அரை, ஒரு மணித்தியாலத்தின் பின்னரே விநியோகம் கிடைக்கும். இப்படிப் பல்வேறு பிரச்சனைகள் மத்தியிலும், மனம் தளராது, இந்த இணையத்தளம் இயக்கப்பட்டுவருவது மகிழ்ச்சிக்குரியதே.

மனித வாழ்க்கையில் சவால்கள் எதிர்நோக்கப்படாவிடின், பெறுபேறுகள் இருக்கமுடியாது, பெறுபேறுகளுடான இன்பம் என்பதற்கு இடமிருக்காது.

சாத்தனால் இணையத்தளத்தினருக்கு ஓரிரு இலட்சம் ரூபாய்கள் செலவாகியுள்ளது. கடனாகப் பெற்ற பணத்தைக் கொண்டு, இணையத்தளத்தினர் முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத்; தம்மை தயார்ப்படுத்தியுள்;ளதைச் சாத்தனால் அறியமுடிந்தது.

யாழ்குடாவில் நகை, காணி என்பவைகளை ஈடாகக் கொடுத்தே வட்டிக்குப் பணம் பெறமுடியும். இவைகள் இல்லாது வங்கிகளில் பணம் பெறுவது முடியாத காரியம். அதிலும், சுதந்திர ஊடகவியலாளர்கள் (குசநந டயnஉந துழரசயெடளைவள); யாழ்ப்பாண வங்கிகளில் கடனாகப் பணம் பெறுவது முடியாத காரியம்! இந்தநிலையில், தனியாரிடமிருந்து நகைகளும், காணியுமில்லாது வட்டிக்குப் பணம் பெற்றுக்கொள்வது, பெரும் சவால் ஒன்றினை வென்ற நிலையை ஏற்படுத்தும். யாழ் குடாவில் நிலைமைகளை நன்குணர்ந்து, நகைகள், காணிகள் கோராது, வட்டிக்குப் பணம் தரும் சிலர் இருப்பதும், தமிழ் சமூகம் எப்படி நிலைத்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள உதவவில்லையா?
இது ஒரு சவால் ஆனால், வட்டியையும், முதலையும் கொடுக்க உழைப்பது மற்றொரு சவால். அதையும் எதிர்கொண்டே உங்களைக் கிழமைக்குக் கிழமை சந்திக்கமுடியும். அது உண்மையில் இன்பமானதில்லையா?

இன்று “அரச சார்பற்ற” நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும்கூட, உள், வெளிநாட்டு அமைப்புக்களின் நிதி, மற்றும் “உதவி” களைப் பெற்று, உதவியாளர்களின் நலன்களைப் பேணிவருகின்றன. அப்படியிருந்தும், பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் போதும், தமிழ்த் தேசத்தில், அதுவும் யாழ் குடாவில் இருந்து, சுதந்திரமாக இந்த இணையத்தளம் இயங்குவதுபற்றிச் சாத்தனுக்கு ஒருவித பெருமைதான். ஏனெனில், அவனது கட்டுரையும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது!

இந்த மழைக் காலத்தில், பொருட்களின் விலை தினமும் அதிகரித்துவருவதும், காய்கறிகளின் விலைகள் உச்சநிலை அடைந்துள்ள நிலையிலும், சாத்தன் தனது “நாடும் நடப்பும்” கட்டுரைக்குச் சிறிதளவு பணத்தை இணையத்தளத்தினரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நப்பாசையுடன்தான் இருந்தான். ஆனால், அவனது தவிர்க்கடமுடியாத “ஆசை”யும், நடைபெறமாட்டாத காரியமாகிவிட்டது! பல இலட்சம் ரூபாய்களைக் கடனாகப் பெற்று, வட்டியை மாதமும், ஏனைய செலவுகளையும் கொடுத்துவரும் இணையத்தளத்தினரிடமிருந்து, தனது சிறிய கட்டுரைக்குச் சாத்தன் பணம் கேட்பது மனிதாபிமானமற்ற காரியம் என்பது சாத்தனுக்கு நன்கு விளங்கும். அப்படியாயின் என்ன?

சாத்;தன் அதே பழைய சைக்கிளில், அதே குடை, அதே உடைகள் என்பவற்றுடன்தான் திரியவேண்டும், முன்னரைப் போலவேதான் வாழவும்வேண்டும், உங்களுக்குச் செய்திகளையும், ஏனையவைகளையும் கொடுக்கவும்வேண்டும்! தன்னால் இணையத்தளத்தினருக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியைச் சாத்தனால் அவனது இந்தப் பிறப்பில் ஈடுசெய்யமுடியாது. ஆனால், இணையத்தளத்தினர்கள் சாத்தனில் குறை எதனையும் கண்டதில்லை. முகம் சுழித்ததில்லை. அவர்கள் சாத்தனை மேலும் உச்சாகப்படுத்திக் கட்டுரையினைத் தொடர்ந்து எழுதவே கூறினர். இதனு}டான மன நிறைவு, சாத்தனுக்குத் தென்பாக இருந்துவருகிறது.

இங்குதான் ஒரே சிந்தனையும், ஒரே குறிக்கோளுமுடையவர்களே, தொடர்ந்தும் ஒருமித்து நிலைக்கமுடியும் என்பதைச் சாத்தன் மீண்டும், மீண்டும் உறுதிசெய்யமுடிகிறது.

இப்படியான பிரச்சனைகள் இருந்துவரும்போதும், யாழ் குடாவின் தினசரிகளில் வெளியான சில அறிவித்தல்கள், விளக்க அறிவிப்புக்கள், படங்கள், செய்திகள், ஆய்வுகள் சாத்தனுக்குப் புதிராகவே இருந்தது. இவைகள் எல்லாம் இந்த இணையத்தளத்தினில் சாத்தன் கூறியவைகளின் விளைவுகளாகவே இருந்தன. யாழ் போதனா வைத்தியசாலை றோட், ஏனைய தெருக்களில் கடைகள் நடாத்துவோர் நடை பாதைகளில்; தாவாரங்களை நீட்டிக் கட்டி, பொருட்களைவைத்து வியாபாரம் செய்பவைகள் தடைசெய்யப்பட்டுள்ளாதாகவும், டிசெம்பர் மாதம் முடியுமுன்னர் அவை நிரந்தரமாக அகற்றப்படவேண்டும் எனவும் யாழ் நகர சபை ஆளுனர் அறிவித்தலை விட்டிருப்பதுடன், யாழ் குடாவின் கழிவுகள் அகற்றும் பிரச்சனை பற்றி நீண்ட விளக்க அறிவிப்பினைச் செய்து, கால அவகாசமும் கோரியுள்ளார்.

இந்த அறிவிப்புகளின்படி விடயங்கள் இவ்வருட முடிவுக்கு முன்னர் நடைபெறுகின்றனவா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எதுவிதத்திலும், சட்டங்களுக்கு முரணாக, தெருக்களின் மையத்திலிருந்து குறிப்பிட்ட து}ரத்திற்கு அப்பால் கட்டப்படாது புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிரந்தரக் கட்டடங்களும் அகற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தமிழ் மக்கள் காலம் சென்றால் எல்லாவற்றையும் மறந்துவிடுவர் என்ற கருத்தில்தான் இந்த அறிவித்தல்களா என்பது முக்கிய கேள்வியே.

தினசரிகள் யாழ் குடாவின் பகுதிகளில் மழை நீர் தங்கி நிற்பது பற்றியும், தெருக்கள் கிடங்கும், குழிகளுமாக இருப்பது பற்றியும், முன்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும், வேறு பிரச்சனைகள் பற்றியும் சென்ற வாரம் தீவிரமாக எழுதிவந்துள்ளன@ படங்களையும் பிரசுரித்துள்ளன.

இங்கும், இவை சிறிது காலத்திற்குத்தான் நடைபெறுமா, அல்லது தொடர்ந்தும் நடைபெறுமா என்பதையும், பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற வாரத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இவ்வருடத்தில் பெய்;த மழையில் ஆகக் கூடிய அளவு இவ்விரு நாட்களிலும் பெய்த மழைதான்!
நன்றி தமிழ்நாதம்.
தாயகத்திலிருந்து சிரமங்களுக்கு மத்தியில்
வரும் இந்த இணையத்துக்கு உதவிசெய்யாவிட்டாலும் அதனை ஊக்கப்படுத்தவேண்டியது புலம்பெயர் தமிழர்களின் கடமை. இங்கு வானொலிக்கு ஆர்வமாக எழுதும் பலர் இப்படியான விடயங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர் என்பது மிகவும் வேதனையானது. எத்தனைபேர் முன்வருகின்றாரென காத்திருந்து பார்ப்போம்.
தேசியத்துக்காகவும் சமூகத்துக்காகவும் குரல் கொடுக்கும் இவர்கள் முன் எங்கள் தலைகுனிந்தே காணப்படும்.
இணையத்தை இயக்கும் அந்த உள்ளங்களை இதயபுூர்வமாக வாழ்த்துவோம் முடிந்தவரை உதவுவோம்.
www.tamilsociety.com
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)