12-20-2004, 03:17 PM
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில்
இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கடிப்பு
சென்னை,
இந்திய மீனவர்களின் மீன்பிடிப்படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்து விட்டதாக இந்திய தொலைக்காட்சி நேற்று பிற்பகல் அறிவித்தது.
அச்செய்தியின் விபரம் வருமாறு:
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகக் கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் இவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர்கள் கச்சதீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை துரத்திவிட்டனர்.
அத்துடன் அவர்களின் மீன்பிடிப்படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கடலில் மூழ்கடித்துவிட்டனர். இதிலிருந்த மீனவர்கள் ஒருவாறு நீந்தி கரைசேர்ந்தனர். இவ்வாறு அந்தச் செய்தி தெரிவித்தது.
நன்றி வீரகேசரி
இதற்காகத்தானே அவசரஅவசரமாக பயிற்சி கொடுத்துவிட்டவை. தன்னுடைய நாட்டு மக்களை கொல்வதற்கு இன்னொரு நாட்ட இராணுவத்தக்கு பயிற்சி கொடு;க்கிறவை இந்தியாவாகத்தான் இருக்கும்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>