Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Count Down Start...
#1
______________________________________________________________________
மாவீரர் நாளன்று கருணாவும் ஒரு 'உரை" நிகழ்த்தியிருந்தார். கருணாவை 'ர்" விகுதி போட்டு அழைப்பதிலுள்ள அபத்தம் புரிகிறது. இருந்த போதிலும் மரபைத் தவறவிடுவது மனித இயல்பன்று. எதிரியாயினும் மதிப்பளிப்பது மனித நடைமுறை. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தும் எல்லைக்கோடு இது. கருணா மனித விழுமியங்களில் இருந்து நழுவி விலங்குகளுடன் இணைந்து நீண்ட நாட்களாகிறது. அது தமது அறிவிற்கேற்றாற்போல் சிந்திக்கும் என்பது மூத்தோர் மொழி. கருணா தனது அறிவிற்குட்பட்டுச் சிந்திக்கிறார். அதற்காக நாம் எமது அறிவை இழந்துவிட முடியாது.

தமிழ் மக்கள் கருணா என்ற மனிதன் குறித்து கட்டமைத்திருந்த பிம்பம் -படிமம் எத்துணை வேகமாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. கருணா என்ற முன்னாள் போராளி மீது நாம் கட்டமைத்திருந்த பிம்பம் போரியல் 'மேதமை" என்ற கருத்திலிருந்துதான் பிறப்பெடுத்திருந்தது. இன்று அவரை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி களத்திலிறங்கத் தயாராகும் இனவாத -அந்நிய சக்திகளும் நம்புவதும் இதைத்தான். கருணாவை இன்று வெறுப்பவர்களில் பெரும்பாலானோர்கூட அவரின் இந்த 'மேதமையை" மறுதலிக்கவில்லை.

ஆனால் இனி இலங்கைத் தீவின்; போரியல் வரலாற்றில் கருணா என்ற மனிதனுக்கான பக்கங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதை தர்க்க ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சுலபமாக நிறுவமுடியும். ஆனால் அதன் அவசியம் ஒன்றும் இப்போது ஏற்பட்டு விடவில்லை.

இங்கு கருணாவின் உரைக்கு எதிர்வினையாற்றும் நோக்கம் எனக்கில்லை. அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை இந்த உலகில். நான் இங்கு பேச விழைவதும் கருணாவின் முன் வைப்பதும் போர் அறவியல் சார்ந்த கேள்வி ஒன்று.

கருணா தனது உரையில் தனது சகோதரன் றெஜியையும் கஸ்ரோ உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களையும் புலிகள் நயவஞ்சகமாக நித்திரையில் வேற்று மண்ணில் வைத்துக் கொலைசெய்து விட்டதாகப் புலம்பியிருந்தார். இந்தப் புலம்பலின் மூலம்தான் தானொரு போரியல் 'கத்துக்குட்டி" என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டபிறகு கருணா போரியல் பால பாடத்தையே மறந்துவிட்டதுபோல் தெரிகிறது. (முதலில் இந்தப் புலம்பல்களை நிறுத்துங்கள். ஒரு போர்வீரனுக்கு இது அழகல்ல. நீங்கள் ஒரு போரியல் மேதையாக வலம் வருவது ஒருபுறம் இருக்கட்டும்ää முதலில் அடிப்படைத் தகுதிகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.)

சந்தடி சாக்கில் தனது சகோதரனையும் நித்திரையில் வைத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார் கருணா. ஆனால் றெஜியை சிங்கள இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து ஜெயந்தன் படையணிப் போராளிகள் கொன்றொழித்தனர். இது ஊரறிந்த கதை. பிறகு ஏன் வீண் வியாக்கியானங்கள். மற்றவர்களுக்கு பதவியில்லைää சகோதரருக்கு மட்டும் கேணல் பதவி கொடுத்திருக்கிறார் கருணா.

ஒரு படையணியில் பட்டாலியன்ää டிவிசன்ää பிரிக்கேட் என்றெல்லாம் அணிகள் பிரிக்கப்பட்டு பதவி வழங்கப்படுவது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது இவ்வாறிருக்க நாலுபேர் கொண்ட ஒரு கும்பலில் எவ்வாறு ஒரு கேணல் முளைத்தார். கேலியாக இல்லையா? அல்லது ஒரு தொகுதி சிங்கள இராணுவ பட்டாலியனுக்கு றெஜி பொறுப்பாகச் செயற்பட்டாரா!

கொட்டாவ சம்பவத்திற்கு புலிகள் உரிமை கோரவில்லை. எதிரி எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பதுதான் போரியல் தந்திரம். சொந்த மண்ணில் சாக நினைத்தவர்களை வேற்றுமண்ணில் அழித்துவிட்டார்கள் என்ற கூச்சலுக்கு எந்தக் கனமும் கிடையாது.

சொந்த மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு எதிரிகளுடன் கூடாரமடித்துத் தங்கியிருந்தவர்களை சரியான புலனாய்வுத் தகவல்களுடன் பின்தொடர்ந்து ஊடுருவி உளவு பார்த்து திட்டமிட்டு தாக்குதலை முடித்து வெற்றிகரமாக தளம் திரும்பிய அந்தப்போர் வீரர்கள் போரியல் விதிப்படி பாராட்டுக்குரியவர்கள். முன்னாள் போராளியான கருணாவுக்கு இது எப்படித் தெரியாமல் போனது. அழுது புலம்புகிறார்.

ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. புலியணியில் இருக்கும்வரை கருணாவும் மாவீரன்தான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து என்று நீக்கப்பட்டாரோ அன்றே அவரது வீரமும் சேர்த்து உறிஞ்சப்பட்டு விட்டது. இன்று கருணாவில் ஒட்டிக்கொண்டிருப்பது மரண பயமும்ää அச்சமும்தான். கருணாவின் உரையைப் பார்த்தவர்களுக்கு உரை விளங்கியதோ இல்லையோ தெளிவாகத் தெரிந்த செய்தி இதுதான்.

கருணாவிற்கு ஒரு சிறு விண்ணப்பம். உங்களின் போரியல் தம்பட்டங்களை நம்பித்தான் சில அந்நிய சக்திகள் தமிழீழப் போரில் தலையிட முற்படுகின்றன. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் மாவீரர் உரை என்ற பெயரில் பல அபத்தங்களைப் புரிந்திருக்கின்றீர்கள். இதன் மூலம் உங்கள் போரியல் கத்துக்குட்டித்தனம் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்த 'ரேஞ்சில" போனால் புலிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும். உங்களை அவர்களே அவர்களது மண்ணில் வைத்து நித்திரையில் நஞ்சை வைத்துக் கொன்றுவிடுவார்கள்.

இந்தக் கணக்கு தமிழர்கள் தீர்க்கவேண்டிய கணக்கு. தயவுசெய்து பொறுமை காக்கவும். இலங்கையில் யுத்த மேகங்கள் சூழத்தொடங்கிவிட்டன. எதிரிகளை வேண்டுமென்றால் களத்தில் கொல்லலாம் - ஆனால் துரோகிகளை சொந்த மண்ணில் வைத்துத்தான் கொல்லவேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. புரிகிறதுதானே!

உங்களுக்கான நாட்கள் எண்ணப்படத் தொடங்கிவிட்டன.
! ! !!
Reply
#2
[size=18]கருணா(க)வின் மாவீரர் தின உரை
அன்பிற்க்கினிய எனது எதிரியாகி விட்ட மக்களே!
நான் நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் முன் பேசவிரக்கிறேன். எனக்கு உங்கள் முன் பெச விருப்பமில்லை என்ன செய்வது என்னை வாங்கியவர்கள் இந்த கட்டுரையை எழுதித்தந்து வாசிச்சிட்டு வா என்றார்கள் வேறு வழி தெரியவில்லை என்ன செய்வது இப்ப அவர்கள் தானே என் எயமானிகள். சரி இனி அவர்கள் எழுதித்தந்ததிற்க்கு வருவோம். நான் உண்மைத்தமிழனாய் ஒரு போதும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. நான் ஒரு சுத்த பிராடு. நான் வேண்டின காசு போக மிச்சமெல்லாம் கிழக்கு மக்களிட்ட அடிச்சது தான். தலைவர் என்னட்ட கிழக்குப் பொறுப்பை தந்திட்டு இருந்தார் நானும் அவர் கவனிக்கேல்ல என்று நினைச்சிட்டன் அதான் கொஞ்சம் கூட கறைய நடந்திட்டன். ஆனால் தலைவர் கண்டு பிடிச்சிட்டார் பாhத்தா மறு பக்ககத்தில கொஞ்சப் பேர் பெட்டீயொடு நின்றினம் வரவும் சொல்லிச்சினம் பர்hத்த எந்தக்காரணும் தெரியேல்ல தலைவரை விட்டு பிரிய எடுத்தே ஒரு எடுவை அதான் பிரதேசவாதம் பெட்டேன் ஒரு போடு தலைவர் தள்ளாடிப் பொயிடுவார் எனறு நானும் என்னை விலை கொடுத்து வாங்கியவர்களும் நினைத்தோம். ஆனால் தலைவர் செய்த சாணக்கியத்தால ஓட வெளிக்கிட்டேன் இன்டைக்கும் ஓடீற்றே நிக்கிறன் என்னை நம்பி வந்தவர்கள் எலாரையும் விட்டுட்டு ஓடிற்றேன் அவங்கள் உங்களிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிப்போட்டாங்கள். மிச்சமிருந்ததுகளும் கொஞ்ச நாளில் போயிட்டுதுகள். மனைவி பிள்ளைகளை விட பணம் தான் பெரிதென்று வந்த என்ரை அண்ணரும் அற்ப ஆயிசுல போயிட்டார் என்ன பண்ண அவர்ர தலைவிதி அதற்காக நான் எப்பிடி அதெல்லததையும் விடுறது. எப்பிடியும் கொஞ்ச சனத்தையாவது கொல்ல வேண்டாமே. அட அதுக்குள்ள ஒன்டை விட்டுட்டன் என்னைப்பற்றி சும்மா எழுதித்திரிந்த நடேசனையும் என்ரை நண்பர்கள் போட்டுத்தள்ளிப்போட்டினம் அதுக்கு ஒருக்கா என்ரை இணையம் நடத்திறவை கண்டனம் தெரிவித்தினம் பிறகு பாத்தா மட்டு மக்களும் புலிகளும் ஒற்றுமையாய் இருக்கினம் விடக்கூடதெல்லே அதான் கொஞ்சப்பேரை போட்டுத்தள்ளினான் பிறகு இப்ப டென் மார்க்கில என்ரை தோழர்கள் நல்லா செய்யினம் எனக்கே தெரியாமல் கட்சி தொடங்கி அதற்க்கு இணையம் தொடங்கி அப்பப்பா என்ன வேகம் அதோட நிக்கேல்ல உடன கொஞ்ச முகவரியில்லா கட்சியோட என்ரை பெயரில இருக்கிற கட்சியையும் சேர்த்து ஒரு கூட்டமைப்பு தொடங்கீற்றாங்கள் . ஆனால் என்ன ஸ்ரீலங்காகக் கட்சி இந்தியாவிலிருந்து தான் இயங்குது. என்ன பண்ணுறது இதான் என்ரை நிலமை இப்ப இருக்கிற நிலை மாற வேணுமென்றால் எல்லாத்தமிழ் மக்களும் ஒற்றுமையாய் வரவேணும் இல்லாட்டி என்ரை ஆட்சிதான் நான் தனி மனிசன் இல்ல எனக்குப் பின்னால பிராந்திய வல்லரசு முதல் சர்வதேச வல்லரசுகள் இருக்கு பிறகு என்ன தலைவர் பிரபாகரன் மாவீரர் நாளுக்கு உரையாற்றேக்க நானும் அதே மாதிரி உரை நிகழ்த்தோனும்... தலைவராகாட்டியும் தலைவராய் வேடமாவது பொட சான்ஸ் கிடைச்சுதே அது சந்தோசம். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அனைத்து (துரொக) இணையங்களுகும் நன்றிகள். நான் வரேக்க எனக்குத் தெரியேல்ல என்னைப்போல எத்தின துரொக கூட்டம் இருக் கென்று இப்ப தான் தெரியுது. இப்பிடி நாங்கள் இருந்தா எப்பிடி தமிழீழம் கிடைக்கும். நான் ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ? புலிகள் ஆயுதம் துாக்கினா உடனே அறிக்கை விடுவேன் அவர்கள் பயங்கர வாதீகள் என்று. அவர்கள் பேச்சு வார்த்தைக்குப் போனால் அதுக்கு ஒரு அறிக்கை விடுவேன் இவர்கள் இதற்ாகாகவா சண்டை பிடித்தார்கள் என்று
மீண்டும் கொலைகளை தொடங்கி பின்
சந்திப்பேன்
நன்றி வணக்கம்
கோணல் கருநாகம்
______________________________________________________________________
யாவும் கலப்பட மற்ற கற்பனை்
______________________________________________________________________

நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
¾õÀ¢ ¿¢¾÷ºý «ôÀ ¯Åý ±í¸¼ ¸ÕÉ¡ «ôÀÊ Å¡º¢ì§¸ø§Ä§Â?? ¿¡ý «ôÀʾ¡É ±Ø¾¢ÌÎò¾É¡ý????
«É¡Öõ §Á¡¨É «Åý ±ýÉ ±Ø¾¢ ÌÎò¾¡Öõ(¯¨¾ Å¢¼ §Á¡ºÁ¡) Å¡º¢ôÀý ¸ñʧǡ... ±É¦Éñ¼¡ø «Åý Óó¾¢É §¸½ø... «Ð¾¡ý §¸ð¼É¡ý...:wink: :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
±ôÀ¾¡ý ¾¢Õó¾§À¡È¡§É¡ ¯ó¾ ¸êÉ¡... Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
என்ன நீங்கள் எல்லாம் நினைத்தவுடன் நான்(கருணாகுரங்கு)திருந்தவேண்டுமா? ? பின்பு அம்மாயார் என்ன நினைப்பார்.. டக்லசு அந்த எருமை என்ன நினைக்கும்...வல்லரசு என்ன நினைக்கும்... (எனக்கு சங்கு ஊதா வைக்கும்) நான் என் பரம்பரையை காக்க உயிருடன் இருக்க வேண்டும்.(நான் மட்டும்)
.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)