12-31-2004, 02:54 AM
<b>'சுனாமி' அலையை முன்கூட்டியே அறிவித்த இந்திய விமானப்படை: வானிலை இலாகா மெத்தனத்தால் சென்னையில் உயிர்ச்சேதம் </b>
கடந்த 26_ந் தேதி காலை 6.35 மணிக்கு இந்தோனேசியா அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத் தால் இந்து மகா சமுத்திரத்தில் 'சுனாமி' ராட்சத அலைகள் உருவாகி கரையை நோக்கி கிளம்பியது.
சுனாமி உருவான ஒரு மணி நேரத்தில் 7.19 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவு களை முதலில் தாக்கியது. கடல் நீர் புகுந்து நிலப்பரப்பை அழித்தது.
அடுத்து சென்னை கடற்கரையை 9.14 மணிக்கு முதலாவது சுனாமி அலை தாக்கியது. தொடர்ந்து 9.20 மணி, 10.20 என அடுத்தடுத்து சென்னை கடற்கரையில் கடல் அலை தாக்குதல் தொடுத்தது. அதே நேரத்தில் கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், கன்னி யாகுமரி பகுதிகளும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டன.
இந்தோனேசியாவில் உருவான சுனாமி அலை 3 மணி நேரம் பயணம் செய்து அதாவது 3 மணி நேரம் கழித்துதான் சென்னை கடற்கரையை தாக்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சுனாமி அலையை கண்டுபிடித்து தமிழகம் மற்றும் சென்னை நகர மக்களை உஷார்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
சுனாமி அலை முதலில் அந்தமான் தீவை தாக்கியதும் அங்குள்ள கடற்படை தளம் சேதம் அடைந்தது. 7.19 மணிக்கு முதல் அலை தாக்கியும் அங்குள்ள கடற்படை அதிகாரி டெல்லியில் உள்ள விமானப்படைக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பினார்.
அதன் பிறகு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. 7.50 மணிக்கு உயர் அலைவரிசை மூலம் அந்த மானில் இருந்து டெல்லிக்கு தொடர்பு கொண்டு அந்த மான் தீவு மூழ்கி கொண்டு இருப்பதாக தகவல் கொடுக் கப்பட்டது.
விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி உடனே செயல்பட்டு உதவி அதிகாரிகள் மூலம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தை எச்சரித்தார்.
மேலும் 7.30 மணிக்கு சென்னையில் உள்ள கப்பல் படை ïனிட்டுக்கும் அந்தமான், கார் நிகோபார் தீவுகள் தாக்கப் பட்டது குறித்து தகவல் கிடைத் துள்ளது. அவர்கள் அந்தமானு டன் தொடர்பு கொண்டு தகவல் சேகரிக்க முயன்றுள்ளனர். ஆனால் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. கடைசியில் 7.50 மணிக்கு அந்தமான் முழுவதும் கடல்நீர் புகுந்து தண்ணீரில் மூழ்கி விட்ட தகவல்தான் கிடைத்தது.
அதன் பிறகு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு கப்பல் படை தகவல் அனுப்பியது. இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் காலை 8.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
9.14 மணிக்கு மத்திய உள்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து உஷார்படுத்திக்கொண்டு இருக்கும் வேளையில்தான் 9.14 மணிக்கு சென்னையை சுனாமி அலை தாக்கி எல்லாமே முடிந்து விட்டது.
9.20 மணிக்கு 2-வது முறையாக சுனாமி கடல் அலை சென்னையில் தாக்குதல் நடத்தியது. 9.22 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சதுர்வேதியின் தனிச்செயலாளருக்கு சென் னையில் சுனாமியின் முதல் தாக்குதல் மற்றும் பாதிப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.10.20 மணிக்கு சென்னையை 3-ம் முறையாக சுனாமி கடல் அலை தாக்கியது. 10.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சக கட்டுப்பாடு அறை இயக்குநர் சுவாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய இடங்க ளில் அமைந்துள்ளது.
இந்தோனேசியா அருகே 6.29 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டபோது அதிர்வுகள் சில நிமிடங்களில் இந்திய வானிலை இலாகாவில் பதிவாகி உள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்க வானிலை இலாகா ராட்சத அலைகள் பற்றி எச்சரிக்கை செய்துள்ளது.
ஆனால் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மெத்தனமாக இருந்ததால் அந்தமான் நிகோபார் தீவுகளையும், தமிழகத்தையும் உஷார்படுத்த தவறி விட்டது.
அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் வானிலை இலாகா டிஜிட்டல் முறையை பயன்படுத்தாததால் அவர்களால் நிலைமையை உடனடியாக கணிக்க முடிய வில்லை.
இதுபற்றி வானிலை அதிகாரி ஒருவர் கூறுகையில், `பூகம்ப மையம் கண்டுபிடிக்க பொதுவாக 3 புள்ளிகளின் அளவுகள் தேவைப்படுகிறது. அந்தமானில் டிஜிட்டல் முறை இல்லாததால் அவர்களால் சிக்னல் அனுப்பமுடியவில்லை
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஆர்.எஸ்.தத்தா ரேயன் கூறுகையில், `சுனாமி ராட்சத அலைகள் தாக்குதல் இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை. இதனால் நாங்கள் பேரழிவை எதிர்பார்க்க வில்லை' என்று தெரிவித்தார்.
அந்தமானில் இருந்து விமானப்படை அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்ததும் இந்தியாவில் வானிலை இலாகா உஷாராகி இருந்தால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப் பினால் ஏற்பட்ட பேரழிவையும், உயிர்சேதத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் கூறினார்.