Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம் உறவுகளுக்கு யார் மனோத்ததுவ உதவியளித்தனர் ??
#1
கடல் கொந்தளிப்பில் உறவுகளையும் உடமைகளை யும் இழந்து நிற்பவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் பொருளுதவி மட்டும் அளித்தால் போதாது, மனோ தத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் பேரழிவு மேலாண்மை குழு தலைவர் டாக்டர் இ.ரபிந்தரநாத் தெரவித்துள்ளார். சுனாமியிலிருந்து தப்பித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செல்லும் மருத்துவர்கள் குழுவில் மனோதத்துவ டாக்டர்களும் இடம் பெற வேண்டும் என அவர் கருத்து தெரவித்துள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மன ரீதியாக ஆறுதல் அளிக்க அந்த நாட்டு அரசாங்கம் மனோதத்துவ டாக்டர்களை விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது. நமது சமூக சேவகர்கள் உணவுப் பொட்டலங்களை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறhர்கள் என அவர் வேதனையுடன் தெரிவித்தார். தொலைகாட்சி களிலும் பத்திரிகைகளிலும் மீண்டும் மீண்டும் கோரக்காட்சிகளை காண்பிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கருத்தை சென்னை மலர் ஆஸ்பிடல் மனோதத்துவ டாக்டர் என். ரங்கராஜனும் ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடந்த சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்; மனதில் திகில், அச்சம், மற்றும் உயிர் பிழைத்த நிம்மதி ஆகிய மூன்றும் ஒரே சமயத்தில் மாறி மாறி தோன்றும். ஒரு சில மாதங்கள் ஆனாலும் இந்த மனஅழுத்தம் அவர்கள் விட்டு விலகாது. தொடர்ந்து பல வருடங்களுக்கு கெட்ட கனவுகள் தோன்றி இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றார். எனவே உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற காரியங்களில் மனதை செலுத்தவேண்டும். அவர்களது வாழ்க்கைக்கு அர்த்தம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மனஅழுத்தத்தை குறைக்கலாம் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோகங்களை மற்றவர்களிடம் சொல்லி அழுதால் ஒரளவு மனஅழுத்தம் குறையும் என மற்றோரு மனோதத்துவ நிபுணர் சங்கீதா மது ஆலோசனை தெரிவித்துள்ளார்.

20 வருடகால கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுத்த எம் உறவுகளுக்கு யார் மனோத்ததுவ உதவியளித்தனர் ??
Reply
#2
குஞ்சு சாப்பிட வழியில்லையடாப்பா படுக்க இடமில்லையப்பு அதில உது என்னப்பு கதை

அப்பு உத சொன்ன டாக்குத்தர் free ஆ போய் கெல்ப் பண்ணுவாரே
இல்லை மலர் ஆஸ்பிடல் மனோதத்துவ டாக்டர் என். ரங்கராஜன்
போவாரே வாயாலை சவுண்ட் குடுக்கலாம்
அப்பு உதெல்லாம் பணக்காரங்களுக்கு நாங்கள் ஏழையப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#3
அப்பு தாத்தா, சரியா சொன்னிங்கள்.... இவங்களுக்கு முக்கிய தேவை ஒரு பிளாஸ்திரி...
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)