Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழையின் அற்புத ஆற்றல்கள்
#1
வாழைப்பழத்தில் கணக்கற்ற சத்துக்கள் காணப்படுவதால் நமது முன்னோர்கள் எல்லாவிதமான சுப, அசுப காரியங்களிலும் அதைப் பயன்படு;த்தும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். 100 கிராம் வாழைப் பழத்தில் 1-05 கிராம் கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலைப் பெற சுமார் 21_2 கிலோ வாழைப்பழம் மட்டும் போதுமானது. வாழைப்பழத்தில் சி விட்டமின் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்பு, பொட்டாசியம், சோடியம், பொஸ்பரம் மற்றும் சிறிய அளவில் செம்புத் சத்து உள்ளது.
பொதுவாக வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், பித்த சம்பந்தமான நோய்களும் குணமாகும். இதுதவிர நவீன ஆய்வில் நெப்ரைடிஸ் எனப்படும் சிறுநீரக நோய், மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம், குடல்புண் ஆகியவற்றையும் வாழைப்பழங்கள் குணப்படுத்தும் என்கிறார்கள்.

வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சித்தர்கள் வாக்குப்படி ரஸ்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் வாழை காமாலைக்கு நல்லது. பச்சை வாழை வெப்பத்தை குறைக்கும். மலை வாழை சோகத்தை நீக்கும். பேயன் வாழையால் குடற்புண் தீரும். கரப்பான் நோயை அதிகப்படுத்துவது நவரை வாழை. இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை என பல வகைகள் உள்ளன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)