Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
சுனாமி: நெஞ்சை நெருடும் சில சம்பவங்கள்
இரு முறை உயிர்கொடுத்த தாயானாள்..
முல்லை நகர். டிசம்பர் 26 2004. சுனாமி ஆழிப் பேரலைகள் தாயகக் கரைகளைத் தாக்கி தாங்கொணாத் துயரை தமிழருக்குத் தருவதற்கென விரைந்து நகருள் நுழைகின்றன. தாயும் மகனும் வீட்டில் இருக்கின்றனர். தந்தை வெளியே போய்விட்டார்.
வீட்டினுள் நீர் புகுந்து நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. தாய்க்கு நிலைமை விளங்குகிறது. மகனும் அவ்வளவு சிறியவனல்ல 10-12 வயது இருக்கும். நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட தாயுள்ளம் விரைந்து செயற்படுகிறது. மகனை தூக்கி வீட்டில் இருந்த உயர்ந்த சீமெந்து தட்டில் (பிளாற்) ஏற்றிவிடுகிறாள். மகன் ஏறவும் நீர்மட்டம் உயர்ந்து தாயை மூழ்கடிக்கிறது. பிறப்பின்போது உயிர்கொடுத்த அத்தாய் இப்போது இரண்டாம் முறையும் மகனுக்கு உயிர்கொடுத்து தான் மறைந்துவிட்டாள். தாயையும் இழந்து தந்தையையும் தொலைத்து இப்போது மகன் தனியனாகி..
--
--
Posts: 114
Threads: 9
Joined: Dec 2004
Reputation:
0

¸¼×û ±ñÎ ´ñÎ þÕ󾡸???? :oops: :oops:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
செந்தளிர் இல்லம் - முல்லைத்தீவு
முல்லைத்தீவு நகர் பகுதியில் செந்தளிர் இல்லம் அமைந்திருந்தது. இந்து ஆதரவற்ற, பெற்றோரை இழந்த பிள்ளைகள் பராமரித்து வளர்க்கப்படுகிறார்கள். வசதி குறைந்த பெற்றோரும் இவ் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை விடுவதுண்டு. ஏறக்குறைய இங்கு 120 பிள்ளைகள் தங்கியிருந்தார்கள்.
சுனாமிப் பேரலைகளின் தாக்கம் இப்பிஞ்சுகளையும் விட்டுவைக்கவில்லை. அலைகள் தாக்கியதை அறிந்து பராமரிப்பாளராக இருக்கும் அம்மா ஒருவர் மூன்று சிறுகுழந்தைகளை ஒன்றான அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டு ஓடிவந்து ஒரு உயரமான இடத்தில் அவற்றைவிட முயன்றபோதிலும் பரிதாபகரமாக தடுக்கிவிழுந்ததில் அந்த மூன்று பிள்ளைகளுடன் அந்த அம்மாவும் நீரில் பரிதவித்து இறந்துவிட்டார்கள். நீரலைகளின் தாக்கம் அடங்கிய பின்னர் ஒன்றையொன்று தழுவியபடி இறந்திருந்த மூன்று பிள்ளைகளினதும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அன்று விடுமுறை தினமாகையால் சில பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது 20-30 வரையான பிள்ளைகளே எஞ்சியிருக்கிறார்கள். மற்றைய பிஞ்சுகள் யாவரும் அலையின் கோரப்பிடியில் சிக்கிப் பரிதவித்து இறந்துவிட்டார்கள்.
--
--
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
நானும் சகோதரன்தான்
தாழையடி கடற்கரை
ஒரு அக்கா அலையின் தாக்கத்தில் மிகவும் மோசமாகக் காயமடைந்திருந்தா. அவரது தம்பி காலையில் நடந்த விபரீதத்தில் இறந்துவிட்டார். காயமடைந்திருந்த அக்காவை நண்பகல் அளவில் மீட்டு வைத்தியசாலைக்கு ஏற்ற முயற்சித்தோம். ஆனால் அவர் தம்பி.. தம்பி என்று புலம்பியபடி வரமறுத்து அழுதுகொண்டிருந்தார். அலையின் கொலைத்தாக்கத்தில் அவர் உடுத்தியிருந்த ஆடைகள்வேறு கிழிந்திருந்தன. ஆனாலும் வற்புறுத்தி தூக்கி வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.
வைத்தியசாலையில் அக்கா இறங்குக்கோ என்றபோதுதான் அவர் தனது உடைகளைக் கவனித்து இறங்கிச் செல்வதற்குத் தயங்கினார். எங்களுக்கோ ஏனைய காயக்காரர்களையும் கொண்டுவரவேண்டும் என்ற அவசர நிலை. அப்போது அங்கு நின்ற ஒருவர் சொன்னார் -இறங்கு பிள்ளை நானும் உன்ரை சகோதரன் மாதிரித்தான் இறங்கி வா - என்று கூறி அக்காவை அழைத்துச் சென்றார். எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் நீர் கோர்த்தது. மனிதாபிமானம் இன்னமும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
--
--
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மனிதாபிமானம் என்பது சிந்திக்க முதலே வந்திவிடுவது.... இயல்பானது.,,,மனிதன் கொஞ்சம் சிந்திக்கச் சந்தர்ப்பம் அளித்துவிட்டால்..அது நல்லது நோக்கியும் போகலாம்..கெட்டது நோக்கியும் போகலாம்...அதில் மனிதாபிமானம் என்பது மரிக்கவும் கூடும் வாழவும் கூடும்..! அந்த அன்பர் காட்டிய இயல்பான மனிதாபிமானத்தைப் பாராட்டுவோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>