Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்
#1
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்

இளவேனில்


சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்?

ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.

அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு மன்னன் ஷின்ஷி குவாங்தி மயங்கிப் போய்விடவில்லை. ஏனென்றால், வாழ்த்திய புலவர்கள் ஷின்ஷி குவாங்தியை வாழ்த்தும்போது அவனுக்கு முந்திய பல அரசர்களின் பெருமைகளைச் சொல்லி, அந்த வரலாற்றின் வாரிசே வாழ்க என்றார்கள்.

மன்னனுக்கு அது பொறுக்க வில்லை. வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் இந்த மண்ணில் தகுதி பெற்றவன் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு முன்னேயும் புகழுக்குரிய மன்னர்கள் இருந்தார்கள் என்று சொல்வது எனக்கு எதிரான சதியேதான். மனிதர்கள் நினைவிலும், வரலாற்றுக் குறிப்பிலும் ஒரே மன்னனாகத் தன் பெயர் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், காவியங்கள், சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் என அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.

நாடெங்கும் உள்ள நூல்களெல்லாம் சிப்பாய்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒரு பெரும் சதுக்கத்தில் போட்டு தீவைத்தார்கள். அந்த நெருப்பு அணையாமல் ஆறு மாதங்களுக்குமேல் எரிந்தது.

ஆனாலும் வரலாற்றை அழிக்கவிடோம்; அறிவின் கொடைகளை நெருப்பிலிடச் சம்மதியோம் என்று நூல்களைத் தரமறுத்தவர்களும் இருந்தார்கள். அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட அறிவின் ஆதரவாளர்கள் இருபது லட்சத்துக்கும் அதிகமாயிருந்தார்கள்.

அறிவை நேசித்ததற்காக, வரலாற்றைப் பாதுகாப்பதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற அந்த லட்சக்கணக்கான அடிமைகள் கட்டியதுதான் அழியாத வரலாற்றுச் சின்னமாய் உலக அதிசயமாய் விளங்கும் சீனத்து நெடுஞ்சுவர். சீன நெடுஞ்சுவர் நினைவுக்கு வரும்போதெல்லாம், வரலாற்றையும் அறிவியலையும் பாதுகாப்பதற்காக ஆக்கினைக்கும் அடக்கு முறைக்கும் அஞ்சாத அந்த அறிவார்ந்த போராளிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய தியாகம் சீனத்தின் வரலாற்றையும் அறிவுக் களஞ்சியத்தையும் மாத்திரமல்ல பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் பாதுகாப்பரணையும் வழங்கியிருக்கிறது.

எத்தனை கொடுமைகள் எதிர்வந்தாலும், கொடுங்கோலன் ஆட்சி நடத்தினாலும், அந்தச் சீனத்துக்குச் சென்றேனும் அறிவைத்தேடு என்பதுதான் உயிர்த் துடிப்புள்ள மனித இனத்தின் அறிவுரை; அறை கூவல்!

சீனத்தில் நடந்ததை விடக் கொடுமையான முறையில் அறிவுக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரான கொடுமைகள் நடந்த வேறொரு நாடும் உண்டு.

சீனத்திலே ஒரே ஒரு ஷின்ஷி குவாங்தி தான் இருந்தான். இந்த நாட்டிலோ ஆயிரக்கணக்கான அறிவின் எதிரிகள் இருந்தார்கள். அது இந்தியாதான். சீனக் கொடுங்கோலன் வரலாறே என்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும். நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது என்றான்.

அதே கருத்தை இங்குள்ள ஆரியர்கள் வேறு சொற்களில் சொன்னார்கள்.

பிரபஞ்சம் இயற்கைக்குக்
கட்டுப்பட்டது.
இயற்கை கடவுளுக்குக்
கட்டுப்பட்டது,
கடவுள் மந்திரத்துக்குக்
கட்டுப்பட்டவர்
மந்திரம் பிராமணனுக்குக்
கட்டுப்பட்டது

என்பது இவர்களின் நம்பிக்கை. பார்ப்பனனே மந்திரங்களுக்கும், கடவுளுக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் அதிபதி. பார்ப்பனரே உயர்ந்தோர். அவர்களே உலகையும் வாழ்வையும் நிச்சயிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். மற்ற இன மக்கள் அனைவரும் இழிந்தவர்கள்; சூத்திரர்கள். பார்ப்பனர்க்குப் பணிவிடை செய்வதே பார்ப்பனர் அல்லாதாரின் கடமை; தர்மம்; விதி; கதி என்றார்கள்.

ஆரியரே அனைத்து மக்களிலும் மேலானோர்; ஆரிய இனமே ஆளப் பிறந்த இனம் எனும் ஆணவச் சிந்தனை இட்லரை வெகுவாய்க் கவர்ந்தது. அந்த ஆரிய வெறியில்தான் அவன் உலகப் போரைத் தொடங்கினான். இட்லரின் நாஜிகள் முதலில் போலந்தைக் கைப்பற்றினார்கள். அப்போது கோயரிங் எழுதினான்; “போலந்திலே பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுங்கள். போலந்துப் பெண்களை நமது படைவீரர்கள் கற்பழிக்கட்டும். நாஜி படைவீரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உயர்ந்த இரத்தத்துக்குப் பிறந்தவர்கள் என்பதால் அந்தக் குழந்தைகளே வாழும் தகுதி பெற்றவர்கள், அவர்கள் மூலம் போலந்தின் ‘தீட்டு’ கழியட்டும்’’ என்பதுதான் கோயரிங்கின் உபதேசம்.

இந்த ஆரிய வெறிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியானார்கள். பூமியே இரத்தச் சேறாகியது. இந்த இனவெறிக் கொள்கைக்கு ஜெனேட்சை குற்றத்துக்கு பாசிசத்துக்கு இந்தியப் பார்ப்பனியே வித்தாகும். இங்கே ஒரு ஷின் ஷி குவாங்தி இல்லை; ஒரு இட்லர் இல்லை; ஒவ்வொரு அக்கிரகாரத்திலும் வீட்டுக்கொரு இட்லர் இருக்கிறான்.

இவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இந்திய வரலாற்றையே அழித்தார்கள். இந்திய மொழிகள்; இந்தியத் தத்துவங்கள், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் மறைத்தார்கள்; திரித்தார்கள்; அனல் வாதம் புனல் வாதம் என்கிற பெயரில் சூழ்ச்சியினால் அழித்தார்கள்.

இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த பகுத்தறிவு இயக்கமாம் புத்தம், தேடித் தேடி அழிக்கப்பட்டது. புத்த விகார்கள் நாசமாக்கப்பட்டன. அவை ஆரியச் சின்னங்களாக மாற்றப் பட்டன. மங்கை உருவில், மகான் உருவில் பாண்டிய மன்னனை ஏமாற்றி எண்ணாயிரம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் கழுவிலேற்றப்பட்டார்கள்.

முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது என்பார்கள். தமிழர்களோ முத்துக்களை விடவும் மேலான தங்கள் இதயத்தையே அவர்களுக்குத் திறந்து வைத்தார்கள். ஆனால் பன்றிகள் எவ்வளவோ உயர்ந்தவை என்று ஆரியர்கள் நிரூபித்தார்கள்.

பஞ்சையாய்ப் பாராரியாய் நாடோடிகளாய் வந்த ஆரியர்களுக்காகத் திராவிடர்களின் இதயம் உருகிற்று.

நண்பர்களே வீடுதருகிறோம்; நிலம் தருகிறோம்; எம் சகோதரராய் உங்களை அணைத்துக் கொள்கிறோம் நிம்மதியாய் வாழுங்கள் என்று வளமான பகுதிகளையெல்லாம் ‘மங்கலங் களாய்’த் தானம் தந்தார்கள்.

தமிழரின் பண்பாடே அவர்களுக்கு விலங்காயிற்று. நாகரிக இனத்தைப் பண்பாடற்ற போக்கிரிகள் எளிதில் வெல்வதுதான் வரலாறு எங்கிலும் காணக் கிடைக்கும் செய்தி. இங்கேயும் அதுதான் நடந்தது.

தமிழினம் ஏமாற்றப்பட்டது. அவர்களின் சரித்திரம் மாற்றப்பட்டது. அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் போக எஞ்சியவற்றுள் ஆரியச் சிந்தனைகள் புகுத்தப்பட்டன. புகழ் பெற்ற புலவர்கள் கலைஞர்களை ஆரிய மயமாக்கினார்கள். குறைந்த பட்சம் ஆரியருக்குப் பிறந்த சூத்திரரே அறிவாளிகள் ஆக முடியும்; திருவள்ளுவர், அகத்தியர் போன்றோர் அப்படித்தான் அறிஞராய்ப் பிறந்தவர்கள் என்று கதை கட்டினார்கள். ஆரியக் கறைபடாத தமிழ் இலக்கியமே இல்லை என்கிற அளவுக்கு இலக்கிய - வரலாற்று மோசடிகள் நடந்தன. இதை எதிர்த்தவர்கள், தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க நினைத்தவர்கள், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.

பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், ஆசைத் தம்பி, சிற்றரசு, குத்தூசி குருசாமி என்று நூற்றுக்கணக்கான திராவிட இனச் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய நூல்கள் தடைசெய்யப்பட்டன. இந்த அறிவின் ஆதரவாளர்கள், சிறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான போதிலும் சீன நெடுஞ்சுவரை விடவும் உறுதியான நெடுஞ்சுவர் ஒன்றைத் தம் இனத்துக்காகக் கட்டி எழுப்பிவிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுத்தறிவுக் கோட்டை தான். திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம்தான் தமிழினத்தின் வரலாற்றையும் சிந்தனைக் கருவூலத்தையும் பாதுகாத்து, ஆரிய ஆணவத்தையும் எதிர்த்து நிற்கிறது. இந்த அறிவியக்கக் கோட்டையைக் கட்டிய அடித்தள - அஸ்திவாரக் கற்களில் ஒன்றுதான் புலவர் குழந்தையின் இராவண காவியம்...

(-சென்னைச் சிந்தனையாளர் மன்றம் நடத்தும் தமிழ் அறிஞர் சிலம்பொலியாரின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவின் நான்காம் பொழிவில் இளவேனில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி.)


¿ýÈ¢- ¾Á¢úý§È¡÷ §À芦ºö¾¢Á¼ø
!




-
Reply
#2
இதை பிரசுரித்தற்கு நன்றி இராவண காவியம் பற்றி மேலதிக விளக்கம் எங்கு பெற முடியும்.

தமிழ் பேசும் பெளத்தர்கள் இன்று உலகத்தில் எங்கையாவது உண்டா?
"To think freely is great
To think correctly is greater"
Reply
#3
புலவர் குழந்தை (01-07-1906 - 22-09-1972)



"தென் திசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன்இ - என்றன் சிந்தையெலாம் தோள்களெல்லாம் பூரிக்குது அடடா!"
புதைக்கப்பட்ட இராவணத் தமிழ் மாவீரத்தைஇ தமிழர்கள் இனம் கண்டு கொண்டால்இ தமிழர் ஏற்றம் பெறுவர் என்ற எண்ணத்திலேதான்இ தன்னுடைய சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிப்பதாகஇ சொற்களிலே முறுக்கேற்றி முழக்கமிட்டார்இ புரட்சிக் கவிஞர்.


மாற்றானின் மனைவியை விரும்பியவன் எனப் பொய்க் கவிதை புனைந்துஇ இராவணனுடைய உற்றார் உறவினர்களையே அவனுக்கு எதிராகப் போராடுபவர்களாக முன் நிறுத்தியது ஆரியப் பார்ப்பனீயம். "ஆரிய மாயை"க்கு ஆட்பட்டுஇ நாட்டைக் கெடுக்கும் ஊற்றைச் சடலங்களுக்கு ஊக்கமளித்து வரும் தீய சக்தியாய்இ கோடரிக் காம்பாய்த் தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமையாக்கத் தமது தமிழ்க் கவித் திறனைக் கருவியாகக் கொண்டார்இ கம்பர்.
1946ஆம் ஆண்டுஇ செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுல கொப்பு மாறே" என்று புரட்சிக்கவிஞர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தோடுஇ இராவண காவியம் வெளி வந்தது. கம்பனின் இராமாயணத்தை இராவண காவியமாக மாற்றியமைத்ததின் மூலம் செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்திட்டார். புலவர் குழந்தை அவர்கள். தமிழகத்தில்இ கம்பருக்குப் பின்இ எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வெளிவந்த இராவண காவியம் தேனாற்று வெள்ளம்! கற்கண்டுக் கட்டி!

ஐந்து கண்டங்கள் - 57 பாடல்கள் - 3100 பாடல்கள் உள்ளடக்கம் கொண்ட இராவண காவியம் "தமிழ்" "தமிழ்" என்றே முழங்குகின்றது! இக் காவியம் இயற்றத் துணிவைத் தந்தது யார்?
புலவர் குழந்தை கூறுகிறார்:

"கம்பர் திருநாளும் பெருநாளும்இ கம்பர் மாநாடும்இ கம்பராமாயணக் கருத்தரங்கும்இ பாட்டரங்கும்இ பட்டிமன்றமும்இ விரிவுரையும்இ விளக்கவுரையும் நடத்தப் பெறும் அத்தகு சூழ்நிலையில்இ "இராவண காவியம்" என்னும் பெயரில் ஒரு பெருங்காவியம் செய்யும் அத்தகு உணர்ச்சியினையும்இ உள்ளத் துணிவினையும் எனக்கு உண்டாக்கியவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் அவர்களே!ஔ
1948இல் காங்கிரஸ் ஆட்சியில் இப்பெருங்காவியத்திற்கு அளித்த பரிசு என்ன?

ஆம்! இராவண காவியம் எனும் இயல் நூலுக்கு விதிக்கப்பட்ட "தடை"தான்! தி.மு.க. ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது 17.05.1971இல் இத் தடை நீக்கப்பட்டது. தமிழர் இன ஏற்றமே ஊற்றெடுத்துப் பொங்கும் "இராவண காவியம்" இயற்றிய புலவர் குழந்தை பற்றி நாம் அறிய வேண்டாமா?
புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர்இ கொங்கு நாட்டுக் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓலவலசு என்னும் சிற்றூராகும். "ஓலவலசுப் பண்ணையக்காரர்" எனும் பழங்குடியில் முத்துச்சாமிக்கும் சின்னம்மையாருக்கும் 1.7.1906 அன்று ஒரே மகனாக பிறந்தார்.

இவர் பள்ளியில் படித்ததுஇ எட்டு மாதங்களே. பத்து வயது சிறுவனாக இருக்கும்போதேஇ ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையின் புதுப்பாட்டினைப் பாடிடும் திறனை இயற்கையாகப் பெற்றிருந்தார். தொடக்கக் காலத்தில் அம்மன் மீது பக்தி கொண்டுஇ "கன்னியம்மன் சிந்து"இ "வீரக் குமாரசாமி"இ "காவடிச் சிந்து" முதலான நூல்களை 1925 வரை எழுதிக் கொண்டிருந்தார். இவர் ஊரின் சுற்றுப்புறங்களில் தமிழ்ப் புலவர் எவருமில்லாத நிலையில்இ தாமாகவே முயன்றுஇ கற்றுஇ தமிழில் புலமைப் பெற்றார். மேலும்இ தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.
தான் படித்துஇ பட்டம் பெற்றது மட்டுமன்றிஇ தம் ஊரிலுள்ள இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அந்த இளைஞர்களைக் கொண்டுஇ வயதில் பெரியோர்களுக்குக் கையெழுத்துப் போடப் பழக்கினார். இவ்வாறு தான் பிறந்த ஊரின் தற்குறித்தனத்தைப் போக்கினார். 1925இல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துஇ பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். "பெரியார் சீடர்"இ "கருப்புச் சட்டைக்காரர்" என்று ஊரால் கூறுமளவுக்குக் கட்சிப்பற்றுள்ளவராக இருந்தார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். 1938-1948 ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போர்களில் இவர் பங்களிப்பு உண்டு. பாடல்கள் இயற்றியும்இ சொற் பெருக்காற்றியும் செயலாற்றினார்.

஑தமிழ்நாடு தமிழர்க்கே!ஒ என்ற இயக்கத்தின் எழுச்சியின் போதுஇ ஑தமிழ்நாடு தமிழருக்கேஒ என்ற அச்சுக் கட்டைகள் செய்து கொடுத்துஇ ஒரு துணி வியாபாரி மூலம் வேட்டிஇ துண்டுஇ சேலைக் கரைகளில் அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும்இ பரப்பிய பெருமை புலவர் குழந்தைக்கே உண்டு. 1946 முதல் 1950 வரை ஓவேளாண்ஔ எனும் மாத இதழை நடத்தினார். விதவை மணம்இ கலப்பு மணம்இ சீர்திருத்த மணம் முதலிய செய்யும் அளவுக்கு வேளாள இனத்தாரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். நூற்றுக்கணக்கான விதவை மணங்களையும் நடத்தி வைத்துள்ளார்.
1931இல் மாவீரன் பகத் சிங் உள்ளிட்ட விடுதலை வீரர்களைஇ ஆங்கிலேயே ஆட்சியினர் தூக்கிலிட்டுக் கொன்ற போதுஇ அவர்தம் கொள்கைப் பற்றினை உணர்ச்சி மிக்கப் பாடல்களாக இயற்றினார். அப்பாடல்கள் "புலவர் குழந்தை பாடல்" என்னும் நூலில் உள்ளன.
தமிழ்ச் செய்யுள் மரபு சிதையாமல் இருக்க வேண்டும் என்ற நன்னோக்கு இவரிடமிருந்தது. "கொங்கிளங்கோ" என்ற புனை பெயரும் இவருக்கு உண்டு. பவானி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் முப்பதெட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். புலவர் குழந்தையின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார் ஆவார். இவர்கட்கு சமத்துவம்இ சமரசம் என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர்.

புலவர் குழந்தை அவர்கள் குறள் ஒழுக்கத்தைஇ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதைப் பெரியதாகக் கொண்டவர். ஒழுக்கமிக்கவர். இவர் ஒரு புரட்சிப் புலவராக இருந்திட்டாலும்இ அமைதியும் அடக்கமும் கொண்டவராகஇ ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையையே அமைத்துக் கொண்டார். ஈரோட்டில் ஓவிடுதலைஔ ஆசிரியராக அண்ணா பணியாற்றிய போதுஇ புலவர் குழந்தை அவர்களைப் ஑புலவர்ஒ என்றே அழைப்பார்.

தமிழ்இ தமிழினம்இ தமிழ்நாடு என்பனவற்றை முந்நாடியாகத் கொண்டஇ தமிழ்ப் பெருங்காவியமாம் "இராவண காவியஒத்தை அளித்த புலவர் குழந்தை 22.9.1972இல் மறைந்தார்.
அவர் மறைந்தாலும் இராவண காவியமாய் அவர் புகழ் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.


¿ýÈ¢ - ¦ºõÀÕò¾¢


ÌÈ¢ôÒ - Òò¾ý þô§À¡Ð þó¾ ¾¸Åø ÁðΧÁ ¯ûÇÐஇ §Áľ¢¸ ¾¸Åø Å¢¨ÃÅ¢ø ¾Õ¸¢§Èý . ¿ýÈ¢
!




-
Reply
#4
putthan Wrote:இதை பிரசுரித்தற்கு நன்றி இராவண காவியம் பற்றி மேலதிக விளக்கம் எங்கு பெற முடியும்.

தமிழ் பேசும் பெளத்தர்கள் இன்று உலகத்தில் எங்கையாவது உண்டா?
தமிழ் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கபட்ட மக்களென்று கூறப்போட்டோர் இருக்கிறார்களென்ற கேள்வி...இவர் சாதி இந்துகளின் கொடுமையினால் அண்மையில் மதம் மாறியவராக இருக்கவேண்டும்...அம்பத்காருடைய இயக்கத்தில் கவரப்பட்ட தமிழர்களும் பெளத்தத்தில் மாறியதாக கேள்வி.... இது பற்றிய விபரங்கள் ஆழமாக தெரியாது....தெரிந்தவர்கள் கூறுங்களேன்...
Reply
#5
stalin Wrote:
putthan Wrote:இதை பிரசுரித்தற்கு நன்றி இராவண காவியம் பற்றி மேலதிக விளக்கம் எங்கு பெற முடியும்.

தமிழ் பேசும் பெளத்தர்கள் இன்று உலகத்தில் எங்கையாவது உண்டா?
தமிழ் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கபட்ட மக்களென்று கூறப்போட்டோர் இருக்கிறார்களென்ற கேள்வி...இவர் சாதி இந்துகளின் கொடுமையினால் அண்மையில் மதம் மாறியவராக இருக்கவேண்டும்...அம்பத்காருடைய இயக்கத்தில் கவரப்பட்ட தமிழர்களும் பெளத்தத்தில் மாறியதாக கேள்வி.... இது பற்றிய விபரங்கள் ஆழமாக தெரியாது....தெரிந்தவர்கள் கூறுங்களேன்...

யாழ்பாணத்தில் புத்தூர்- சிறுப்பிட்டி பக்கங்களில் சிறிய தொகையினர், ஜாதித்துவ அடிப்படை முறையால் பௌத்த மதத்தை தழுவியிருந்தததைக் கண்டதாக சிவராம் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றில் படித்திருந்தேன். ஆனால் இப்போதும் அவர்கள் பௌத்தர்களாகத் தான் இருக்கின்றார்களோ என்பது தெரியவில்லை.
[size=14] ' '
Reply
#6
தோழர் ஸ்டாலின் கூறியது உண்மை தான்....

ஜாதி மத ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமிழ்நாட்டில் பவுத்த மதத்தை தழுவி இருக்கிறார்கள்.... தொல். திருமாவளவன் கூட சமீபத்தில் 2,000 பேருடன் பவுத்த மதத்திற்கு மாறிவிட்டார்....

சரித்திர காலத்தில் தமிழர்கள் நிறைய பேர் பவுத்த மதத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு..... பொன்னியின் செல்வன் படித்தால் இது தெரியும்..... நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் பற்றிய குறிப்புகள் அந்த நூலில் உண்டு....

இப்பவும் கூட நாகப்பட்டினத்தில் பரம்பரை பரம்பரையாக பவுத்த மதத்தைச் சார்ந்த தமிழர்கள் உண்டு என்று என் நண்பன் கூறுகிறான்....

ஜைன மதத்தைச் சார்ந்த நிறைய தமிழர்களை நானே காஞ்சிபுரத்தில் சந்தித்திருக்கிறேன்....
,
......
Reply
#7
¾¢ÕÁ¡ÅÇÅÉ¢ý «Ãº¢Âø «õ§Àò¸¡¨Ã ÁöÂôÀÎò¾¢ÂÐஇ ¬¸§Å «Å÷ Á¾õ Á¡È¢Â¾¢ø ¾ÅÈ¢ø¨Äஇ ¬É¡ø «õ§Àò¸¡÷ À×ò¾¾¢üÌ Á¡È¢Â¨¾§Â ¦Àâ¡÷ ²ü¸Å¢ø¨Ä. ¦Àâ¡âý Å¡¾õ" ¿£í¸û þóÐ Á¾ò¾¢üÌû þÕóÐ ¦¸¡ñÎ «¨¾ «õÀÄôÀÎòÐÅÐ ¾¡ý º¢Èó¾Ð þø¨Ä¦ÂýÈ¡ø Á¡üÚ Á¾òÐìÌ Á¡È¢ÂÅý ¿õ¨Á Å¢Á÷º¢ì¸¢È¡ý ±ý¸¢È ¸ÕòÐ ¿õ ±¾¢Ã¢¸û Óý ¨ÅôÀ¡÷¸û" ±ýÚ «õ§Àò¸¡ÕìÌ ¸Ê¾õ ±Ø¾¢É¡÷.

þø¨Ä Á¾õ Á¡È¢É¡ø ¾¡ý ºã¸ þÆ¢× ¿£íÌõ ±ýÈ¡ø þŠÍÄ¡õ Á¾òÐìÌ Á¡Úí¸û «Ð¾¡ý º¡ÄÈó¾Ð ±ýÚ ¦Àâ¡÷ Å¡¾¢ð¼¡÷.
!




-
Reply
#8
அன்பை போதிக்கும் பவுத்த மதத்துக்கு அம்பேத்கார் மாறியதற்கு பதில் ஏன் இஸ்லாம் மதத்துக்கு பெரியார் மாற சொன்னார்? ஏதாவது தகுந்த காரணம் உண்டா?

இஸ்லாம் மதத்திலேயே சன்னி, சயா என்று இரு பிரிவுகள் இருக்கிறதே? பவுத்த மதத்தில் அது போல ஏதாவது இருக்கிறதா?
,
......
Reply
#9
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அன்பை போதிக்கும் பவுத்த மதத்துக்கு அம்பேத்கார் மாறியதற்கு பதில் ஏன் இஸ்லாம் மதத்துக்கு பெரியார் மாற சொன்னார்? ஏதாவது தகுந்த காரணம் உண்டா?

இஸ்லாம் மதத்திலேயே சன்னி, சயா என்று இரு பிரிவுகள் இருக்கிறதே? பவுத்த மதத்தில் அது போல ஏதாவது இருக்கிறதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பௌத்தம் என்னது மதம் அல்ல அது ஒரு மார்க்கம்... அது இந்துத்துவ சித்தாந்தத்தை தீவிரமாக எதிர்த்த திராவிட இயக்கத்தை போண்ற பகுத்தறிவு சிந்தனை....

இப்படி பெரியாரிசம்(திராவிடம்) போண்ற ஒரு முறையில் சாதிகளை அல்லது தலித் முறைய எதிர்ப்பதிலும்... இன்னும் ஒரு மதத்தை தழுவி அந்தப் பிரச்சினையில் இருந்து முற்றாக நீங்கவேண்டும் எண்று பெரியார் நினைத்திருக்கலாம்.

இதில் சுன்னி, சியா பிரிவுகள் என்பன சாதிகளாக இஸ்லாத்தில் இல்லை வளிபடும் முறை மாற்றங்களாகத்தான் இருக்கின்றன.... நாங்கள் முருகனையும் கணபதியையும் வளிபடுவது போல.
Reply
#10
அப்படிப் பார்த்தால் இந்து மதமும் மார்க்கம் தான்... இதன் ஒரிஜினல் "சன்மார்க்கம்" தானே....

சைவம், வைணவம், கபாலிகம் மற்றும் ஏனைய மதங்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு கண்ட மார்க்கம் தானே இந்து மதம்?

துன்பங்களின் ரிஷிமூலம் எதுவென்று ஆராயத் தொடங்கப்பட்டது தான் பவுத்த மதம்.... அது மதமாக தான் இந்தியாவிலும், சீனாவிலும், நேபாளத்திலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது...

பெரியாரிஸம் போன்ற தோற்றம் கொண்ட "கன்பூஷியஸம்" கூட சீனாவில் ஒரு மதம் தானே......
,
......
Reply
#11
இல்லையே நீங்களே ஒற்றுமை வேற்றுமைய கண்டறிய புத்தர் சொன்ன சித்தாந்தங்களையும், கண்ணன் சொன்ன கீதையையும் தனியே பிரித்து சிந்தித்துப்பாருங்கள்.

இரண்டுமே வாழ்வின் தத்துவத்தை சொன்னவை.. ஆனால் இரண்டும் இருவேறு துருவங்கள். புத்தர் சொன்ன மார்க்கம் இந்துத்துவத்தில் ஒண்றாக இருந்திருக்கலாம் அவை எல்லாம் சித்தர்களால் மட்டும் கடை கொள்வதாயும். இறைவனை, முக்கியை அடையும் குறுக்கு வளியாயும் கொள்ளப்பட்டவை. ஆனால் புத்தர் சொன்ன அன்பு என்பது, அதன் சித்தாந்தம் என்பது இந்துத்துவத்துக்கு நம்பிக்கை இளந்து நேர் எதிராக சொல்லப்பட்டது. இந்துத்துவத்துக்கு மாற்று முறையாக சொல்லப்பட்டது பௌத்தம்.
::
Reply
#12
என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை....

எனக்கு தெரிந்து நீங்கள் தான் பவுத்தம் ஒரு மதமில்லை.... மார்க்கம் என்று கூறுகிறீர்கள்....

இது நாள் வரை நான் மார்க்கம் என்றால் மதம் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.... இஸ்லாமிய மார்க்கம் என்று கூறும் போது அது இஸ்லாமிய மதத்தை தான் குறிக்கிறது என்று நினைத்திருந்தேன்.....

இந்து மதத்திலிருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மதங்கள் தான் புத்தம் மற்றும் ஜைனம் என்பது நான் வரலாற்றில் படித்தது.... அது தவறா?
,
......
Reply
#13
<!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+-->QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->¾¢ÕÁ¡ÅÇÅÉ¢ý «Ãº¢Âø «õ§Àò¸¡¨Ã ÁöÂôÀÎò¾¢ÂÐஇ ¬¸§Å «Å÷ Á¾õ Á¡È¢Â¾¢ø ¾ÅÈ¢ø¨Äஇ ¬É¡ø «õ§Àò¸¡÷ À×ò¾¾¢üÌ Á¡È¢Â¨¾§Â ¦Àâ¡÷ ²ü¸Å¢ø¨Ä. ¦Àâ¡âý Å¡¾õ\" ¿£í¸û þóÐ Á¾ò¾¢üÌû þÕóÐ ¦¸¡ñÎ «¨¾ «õÀÄôÀÎòÐÅÐ ¾¡ý º¢Èó¾Ð þø¨Ä¦ÂýÈ¡ø Á¡üÚ Á¾òÐìÌ Á¡È¢ÂÅý ¿õ¨Á Å¢Á÷º¢ì¸¢È¡ý ±ý¸¢È ¸ÕòÐ ¿õ ±¾¢Ã¢¸û Óý ¨ÅôÀ¡÷¸û\" ±ýÚ «õ§Àò¸¡ÕìÌ ¸Ê¾õ ±Ø¾¢É¡÷.

þø¨Ä Á¾õ Á¡È¢É¡ø ¾¡ý ºã¸ þÆ¢× ¿£íÌõ ±ýÈ¡ø þŠÍÄ¡õ Á¾òÐìÌ Á¡Úí¸û «Ð¾¡ý º¡ÄÈó¾Ð ±ýÚ ¦Àâ¡÷ Å¡¾¢ð¼¡÷.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாதிரீதியிலைஅடக்கப்பட்ட மக்கள் பெளத்தத்துக்கோ இஸ்ஸாத்துக்கோ மாறி ஒரு பாதுகாப்பை தேடினமோ தெரியாது

கீழ்வெண்மணி என்னும் இடத்தில் சாதி குறைஞ்ச ஆக்களின் கிராமத்தையே உயிரோடையே கொளு்த்தி அட்டகாசம் புரிஞ்சாங்கள் உயர் சாதியினர்

பெரியார் வழி வந்த என்று சொல்லப்பட்ட அப்போதைய திமுக அரசும் கண்டுக்கலை....திக்கற்றதுகளுக்கு மதம மாறுதிறதான் வழியாய் போச்சு போலை

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிபுனல் நாவல் வாசிச்சியளியண்டால் இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் கொடுமை பற்றி வடிவாக விளங்கும்.
Reply
#14
¾¢Ã¡Å¢¼ þÂì¸õ ±ýÈ¡ø ¾¢Ó¸ ÁðÎõ þø¨Äஇ ±ôÀÊ ®Æ Ţξ¨Äô§À¡Ã¡ð¼ þÂì¸í¸û ±ýÈ¡ø ±øÄ¡õ «¼í̸¢È§¾¡ «Ð §À¡Ä. ¾¢Ó¸ ¦ÅñÁ½¢ ŢŸ¡Ãò¨¾ ¸ñΦ¸¡ûÇÅ¢ø¨Ä ±ýÀÐ ¦À¡Ð×¼¨Á þÂì¸í¸Ç¢ý ÒÇ¢òÐ §À¡É "ÓýÉ¡û" ÌüÈðÎ. «ôÀÊ À¡÷ò¾¡ø «Å÷¸û (¦À¡Ð×¼¨Á þÂì¸ò¾¢É÷) «¨¾ Å÷ì¸ §À¡Ã¡ð¼Á¡¸ À¡÷츢ȡ÷¸ûஇ¾¢ÕÁ¡ÅÇŧɡ «¨¾ º¡¾¢Â ´ÎìÌ Ó¨È¡¸ Óý¨Å츢ȡ÷.

¾¢ì¸üÈиÙìÌ Á¾õ Á¡ÚÅÐ ±ýÀÐ ¸¨¼º¢ ¿¢¨ÄÂûÇஇ ¸¼×û ÁÚôÀ¡Çá¸இ ¦Àâ¡â §¾¡ÆḠþÕôÀÐ º¢Èó¾ ÅÆ¢இ ºã¸ þÆ¢× ¿£í¸ «ó¾ ¾Çò¾¢ø §À¡Ã¡Îõ §¾¡Æ÷¸ÙìÌõ இ ¾ÉìÌ ´Õ ¸¼×û ¸ð¼¡Âõ §ÅñÎõ ±É ±ñÏÀÅ÷¸ÙìÌõ ¾¡ý ¦Àâ¡÷ þŠÍÄ¡ò¨¾ Ó¨Å츢ȡ÷இ þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø þÍÄ¡Á¢Â¨Ã ¾¢Ã¡Å¢¼Ã¡¸ «¨¼Â¡Çõ ¸¡ðÊÂÅ÷ ¾ó¨¾ ¦Àâ¡÷ இ §ÅÚ ±ó¾ Á¾òÐìÌ §À¡É¡Öõ ¾Á¢Æý «íÌõ º¡¾¢îºí¸õ «¨ÁòÐŢθ¢È¡ý ±ýÀ¾É¡ø(±.¸. ¸¢ÕòÐÅ §ÅÇ¡Ç ºí¸õஇ¸¢ÕòÐÅ ¿¡¼¡÷ ºí¸õ) º¡¾¢ þÆ¢× ¿£í¸ Á¾õ Á¡Ú§Å¡ÕìÌ þÍÄ¡ò¨¾ ÀâóШø¢È¡÷.
!




-
Reply
#15
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இந்து மதத்திலிருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மதங்கள் தான் புத்தம் மற்றும் ஜைனம் என்பது நான் வரலாற்றில் படித்தது.... அது தவறா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி தெளிவாக சொல்வதானால், இஸ்லாம் என்பது ஒரு மதம் நீங்கள் அதனை பிந்தொடரவேண்டுமானால் நீங்கள் சுன்னத்து செய்து அவர்களின் வளிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இப்போ ஒருவர் ஆகமமுறைப்படி இந்துவாக வேண்டுமானால்க் கூட அவர் தீட்சை எடுக்க வேண்டும். (அதாவது புனஸ்காரம் எண்று சொல்வார்கள்)

அதே ஒருவர் பௌத்தனாக வேண்டுமானால். அவர் தன் மதத்தில் இருந்து விலக வேண்டியதில்லை. அவர் பௌத்தனாக வாழலாம். அதே நேரம் இந்துக் கோயில்களுக்குப் போகும் பௌத்தர்களும் இருக்கிறார்கள்.

உங்களிற்க்கு இன்னும் விபரமாகச் சொல்வதானால். அண்மையில் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி கேரளா போயிருந்தார் போய் குருவாயுரானை தரிசிக்க கோயிலுக்குப் போனார் அவருடன் அவரின் கிறிஸ்துவரான மனைவியும் போயிருந்தார். குருவாயுர் கோயில் சட்டத்தின் படி வேற்று மதத்தினர் உள்நுளைய அனுமதிகிடையாது. ஆனால் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி நுளைவனுமதிவளங்கியது. அவருடன் சென்ற கிறிஸ்த்துவரான அவர் மனைவியும் போய் வந்தார். பின்னர் விடயம் அறிந்து கிறிஸ்துவரை உள்விட்டத்துக்காக கோயிலைப் பூட்டி ஒருவாரம் சங்காபிசேகம் செய்ததாக சொன்னார்கள்.

இது ஒரு தகவல்தான்.

பௌத்தம் என்பது மார்க்கம். அதாவது வாழ்வு நெறி மட்டுமே, அதில் கடவுள் கிடையாது. ..! இந்துத்துவத்தில் மார்க்கமும் உள்ளது இறைவனும் உள்ளான். இஸ்லாத்திலும் அப்படியே...!

இந்துத்துவத்தை வேண்டாம் எண்று ஆரம்பிக்கப்பட்டதுதான் பௌத்தம். அதாவது ஒரு பகுத்தறிவு இயக்கம் போல மக்களுக்கு விளிப்புனர்வை ஊட்டி கல்லுக்கும் புல்லுக்கும் வார்க்கும் பாலை அன்பு கொண்டு ஒரு பிள்ளைக்குவார். .என்பது போண்றதுதான் அதன் சித்தாந்தம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#16
பெளத்ததிளும் இருபிரிவுகள் உண்டு மகாயானபெளத்தம் தேராவாதபெளதத்ம் இலங்கையில் உள்ளது இரண்டாவது முதலாவது ஜப்பானில் உள்ளது

Luckyluke எழுதியது:
அன்பை போதிக்கும் பவுத்த மதத்துக்கு அம்பேத்கார் மாறியதற்கு பதில் ஏன் இஸ்லாம் மதத்துக்கு பெரியார் மாற சொன்னார்? ஏதாவது தகுந்த காரணம் உண்டா?

இஸ்லாம் மதத்திலேயே சன்னி, சயா என்று இரு பிரிவுகள் இருக்கிறதே? பவுத்த மதத்தில் அது போல ஏதாவது இருக்கிறதா?
Reply
#17
sinnakuddy Wrote:
¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:¾¢ÕÁ¡ÅÇÅÉ¢ý «Ãº¢Âø «õ§Àò¸¡¨Ã ÁöÂôÀÎò¾¢ÂÐஇ ¬¸§Å «Å÷ Á¾õ Á¡È¢Â¾¢ø ¾ÅÈ¢ø¨Äஇ ¬É¡ø «õ§Àò¸¡÷ À×ò¾¾¢üÌ Á¡È¢Â¨¾§Â ¦Àâ¡÷ ²ü¸Å¢ø¨Ä. ¦Àâ¡âý Å¡¾õ" ¿£í¸û þóÐ Á¾ò¾¢üÌû þÕóÐ ¦¸¡ñÎ «¨¾ «õÀÄôÀÎòÐÅÐ ¾¡ý º¢Èó¾Ð þø¨Ä¦ÂýÈ¡ø Á¡üÚ Á¾òÐìÌ Á¡È¢ÂÅý ¿õ¨Á Å¢Á÷º¢ì¸¢È¡ý ±ý¸¢È ¸ÕòÐ ¿õ ±¾¢Ã¢¸û Óý ¨ÅôÀ¡÷¸û" ±ýÚ «õ§Àò¸¡ÕìÌ ¸Ê¾õ ±Ø¾¢É¡÷.

þø¨Ä Á¾õ Á¡È¢É¡ø ¾¡ý ºã¸ þÆ¢× ¿£íÌõ ±ýÈ¡ø þŠÍÄ¡õ Á¾òÐìÌ Á¡Úí¸û «Ð¾¡ý º¡ÄÈó¾Ð ±ýÚ ¦Àâ¡÷ Å¡¾¢ð¼¡÷.
சாதிரீதியிலைஅடக்கப்பட்ட மக்கள் பெளத்தத்துக்கோ இஸ்ஸாத்துக்கோ மாறி ஒரு பாதுகாப்பை தேடினமோ தெரியாது

கீழ்வெண்மணி என்னும் இடத்தில் சாதி குறைஞ்ச ஆக்களின் கிராமத்தையே உயிரோடையே கொளு்த்தி அட்டகாசம் புரிஞ்சாங்கள் உயர் சாதியினர்

பெரியார் வழி வந்த என்று சொல்லப்பட்ட அப்போதைய திமுக அரசும் கண்டுக்கலை....திக்கற்றதுகளுக்கு மதம மாறுதிறதான் வழியாய் போச்சு போலை

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிபுனல் நாவல் வாசிச்சியளியண்டால் இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் கொடுமை பற்றி வடிவாக விளங்கும்.




<b>வெண்மணி</b>

தோழர் ஆர். நல்லகண்ணு


காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.

1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா

உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.

“பாவிகள் வைத்த நெருப்பு
உடலைக் கருக்கிய போதும்
பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.
பாசத்தால் பற்றிக் கொண்டாய்.

வலது கை வெந்து விட்டது.
பிள்ளையைத தாங்கிய
இடது திருக்கரத்திலும்
சதையெல்லாம் தீ தீய்த்து
விட்ட போதிலும் -
எலும்புக் கரத்தால்
பிள்ளையை ஏந்திக்
கொண்டே பிணமாக கருகி
விட்டாயே.

உன் பிறப்பு உறுப்பெல்லாம்
நெருப்பு தின்று விட்ட
போதும் தாயே
பெற்றெடுத்த பிள்ளையை
அணைத்துக் கொண்டிருந்த
தாய்ப் பாசத்தை
தரணியெல்லாம் போற்றிப்
புகழப் போகிறது.

நீ உழைக்கும்
பெண்ணினத்துக்கு பெருமை
தேடித் தந்து விட்டாய்.
தாய்மைக்கு எடுத்துக்
காட்டாய் விளங்குகிறாய்.
நமது வர்க்கத்தின் சிறப்புச்
சின்னமாய் - அழியாத
ஓவியமாய் - உயர்ந்து
விட்டாய்.

உனது தியாகம் கவிஞர்களின்
கருப் பொருளாய் -
ஓவியர்களின் திரு உருவாய்
விளங்கட்டும்
உனது ஆசை நிறைவேற,
வர்க்கம் வாழ
என்றென்றும் உழைப்போம்
என உறுதி கூறுகிறோம்.

(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

"Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’ "



“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.

‘இந்து பத்திரிகை’


44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)



வெண்மணி குறித்து இங்கு நண்பர் sinnakuddy குறிப்பிட்டார். அவருக்குகாக இந்த இனைப்பு
!




-
Reply
#18
நன்றிகள்..நன்றிகள்...நன்றிகள்............தம்பியுடையான்...... அவலங்களை காலங்கள் மறக்க வைத்தாலும் உண்மைகளை மீன்றும் நினைவூட்டிய தம்பியுடாயானுக்கு நன்றிகள்
Reply
#19
<b>சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?</b>



அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.

அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (பெர்fஎcட் ரெலிகிஒன்) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.



(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு
!




-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)