01-24-2005, 09:35 PM
ஒரு சிலர் கணக்குப் பார்த்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வார்கள். ஒரு சிலரோ 20 மணி நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரை ஓட விடுவார்கள். சரி எவ்வளவு நேரம் இறுதியாகக் கம்ப்யூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரியவேண்டுமா? அதாவது கடைசியாக சிஸ்டத்தை ஆன் செய்ததிலிருந்து இப்போது வரை எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண் டிருந்தது எனத் தெரிய வேண்டுமா? விண்டோஸ் 98 தொகுப்பு வைத்திருப்பவர்கள் Start/Programs/Accessories/System Tools என்ற வரிசையில் தேர்வு செய்தபின் அதில் "System Information" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதில் "Uptime" என்ற கட்டத்திற்கு அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாகத் தொடங்கி எத்தனை மணி, நிமிடம், வினாடி இயங்கிக்கொண்டிருக் கிறது எனத் தெரியவரும்.

